Published:Updated:

‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!

‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!
பிரீமியம் ஸ்டோரி
‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!

ஜோ.கார்த்திக்

‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!

ஜோ.கார்த்திக்

Published:Updated:
‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!
பிரீமியம் ஸ்டோரி
‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!
‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை!

ந்தத் தொழிலாக இருந்தாலும் அதை புதுமையாக செய்வதுதான் இன்றைய டிரெண்ட். டீ விற்கும் தொழிலில் புதுமை புகுத்தி செய்யத் தொடங்கி இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் முத்துராமன். அவரைச் சந்தித்தோம்.

‘‘அமைப்பு சாரா தொழிலாக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்துவரும், சைக்கிள் டீ விற்பனையில் சில புதுமையான மாற்றங்களைக் கொண்டுவர நினைத்தேன். நம்மவர்களில்  அதிகம்   பேர் டீயை விரும்பிக் குடிப்பார்கள். ஒரு தெருவுக்கு  நான்கு டீ கடைகள் இருப்பது வழக்கமான விஷயம். குறிப்பாக, சைக்கிளில் வைத்து டீ விற்பதில் நம் நாட்டில் முக்கியமான தொழில்.  எனவே, இந்தத் தொழிலைத் தேர்வு செய்தேன்.

இதற்கு முதலாவதாக, சைக்கிளின் அமைப்பில் சில மாற்றங்கள் கொண்டு வந்தேன். டீ கொண்டு செல்லும் பாத்திரம், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ஃப்ளாஸ்காக இருப்பது வழக்கம். எனது சைக்கிளில் தெர்மோ ஃப்ளாஸ்க்கைப் பொருத்தினேன். பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் சில நுணுக்கங்களைப் புகுத்தினேன்.

‘Tea2go’ ஒரு பிராண்ட் என்பதைக் கடந்து, சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் குறிப்பிடத் தக்க மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், முதலீடு செய்து, வருவாய் ஈட்டவும் ‘Tea2go’ நிச்சயம் வழிசெய்யும். சைக்கிள் டீ விற்பனையாளராக கஷ்டப்படுகிற பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் முன்னுரிமை தரத் திட்டமிட்டுள்ளேன்.

இன்று காபி விற்பனையில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. மக்களும் தரம், சேவை போன்றவைகளுக்காக பிராண்டட் கடைகளைத் தேடிச் செல்கின்றனர். நம் உள்ளூர் முதலீட்டாளர்களை ஒன்றிணைத்து, குறிப்பிட்ட  அளவிலான முதலீடுகளைக் கொண்டு தொழில் முனைவதன் மூலம் மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர நம்மால் முடியும்’’ என நம்பிக்கையுடன் பேசி முடித்தார். வாழ்த்துக்கள் சிவராஜ்!