Published:Updated:

மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?
மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?

அஞ்சலி மல்ஹோத்ரா, தலைவர் (வாடிக்கையாளர், சந்தைப்படுத்துதல், டிஜிட்டல்), அவிவா இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?

ம் நாட்டில் போலியோ ஒழிப்பு, சின்னம்மை ஒழிப்பு, பேறுகால  மரணம் குறைந்து வருவது,  மக்களின் வாழ்நாள் அதிகரிப்பது  போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும்,  அதிகரித்து வரும் நோய்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் தொடர்பான நீரிழிவுப் பாதிப்பு, இதய நோய்கள் ஆகியவைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நீரிழிவுப் பாதிப்பு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்றவையே இன்றைய தேதியில்   இறப்புக்கான முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன. இந்த நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியங்கள் நம் நாட்டு மக்களுக்கு  மரபணு ரீதியில் அதிகமாகவே இருக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக இந்த நோய்களால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

பரவும் தன்மையற்ற இந்த நோய்கள் காரணமாக 30 முதல் 70 வயதுக்குள் மரணமடையும் சாத்தியக்கூறு 26 சதவிகிதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் 2014-ல் நிகழ்ந்த சுமார் 98,16,000 மரணங்களில், பரவும் தன்மையற்ற நோய்கள்  காரணமாக ஏற்பட்டவை 60% ஆகும். வரும் 2020 – ம் ஆண்டுவாக்கில்,  உலக அளவில் இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டிருந்தது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, இதய நோய் காரணமாக குறைந்தபட்சம் 26 லட்சம் பேர் நம் நாட்டில் மரணமடையக் கூடும் எனவும், 2020–ம் ஆண்டு வாக்கில் நேரிடும் அனைத்து இதய நோய் சார்ந்த இறப்புகளில் 54.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்?



 அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகள்


இதய நோய்க்கு அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாவது ஒருபுறமிருக்க, அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணங்களும் சிகிச்சைக்கான செலவீனங்களும் சாதாரண மக்களுக்கு அதிக சிரமங்களை உண்டாக்குகின்றன. நேஷனல் சாம்பிள் சர்வே 2014 கணக்கெடுப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் சராசரி பணவீக்கத்தை விட,  மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவீனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 

தற்போதுள்ள மதிப்பீடுகளின்படி, ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு ரூ.1,90,500 முதல் ரூ.4,12,750 வரையிலும், இதய வால்வு மாற்ற அறுவை சிகிச்சைக்கு ரூ.3,81,000 முதல் ரூ.7,62,000 வரையிலும் இந்தியர்கள் செலவழிக்கின்றனர்.  குளோபல் நியூட்ரீஷியன் அறிக்கை 2016–ன்படி, இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆண்டு குடும்ப வருமானத்தில் 30 சதவிகிதத்தை சிகிச்சைகளுக்காகவே செலவழிக்கின்றனர்.

நோய்களுக்கான சிகிச்சைக்குச் செய்யப்படும் பல லட்சம் ரூபாய் செலவு, மக்களை எளிதில் ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிடுகிறது. நேஷனல் ஹெல்த் பாலிசி 2015–ன்படி, ஒவ்வோர் ஆண்டும் மருத்துவச் செலவீனங்கள் காரணமாக 6.30 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலையைச் சந்திக்கின்றனர்.இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும் போது, இதய நோய்கள் தொடர்பாக ஒவ்வொரு வரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது மிக முக்கிய மானதாக இருக்கிறது.
 
40 வயதான ஒரு ஆண், 10 ஆண்டு காலத்துக்கு ரூ.10 லட்சம் கவரேஜ் கொண்ட மருத்துவக் காப்பீட்டை எடுக்கவேண்டும் எனில், ஆண்டு பிரீமியமாக சுமார் ரூ.4,280 கட்டவேண்டும்.  அதே பாலிசியை அவரது 35 வயதான மனைவிக்கும் சேர்த்து எடுத்தால் ஆண்டு பிரீமியமாக ரூ.4,635 கட்டினாலே போதும். அதாவது, துணைவரை பாலிசியில் இணைப்பதன் மூலம் பிரீமியம் கிட்டத்தட்ட 8 சதவிகிதம்தான் அதிகரிக்கிறது.

 மிகக் குறைவான பராமரிப்புச் செலவுகள்


உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக நம் இந்தியா இருந்தபோதிலும், மருத்துவப் பராமரிப்புக்கான இந்தியாவின் பொது நிதி மிகவும் குறைவாகவே உள்ளது. உலக சுகாதாரக் கணக்கீடு  2015–ன்படி, இந்தியா அதன் மொத்த உள்நாட்டு  உற்பத்தியில் வெறும் 1.16 சதவிகிதத்தை மட்டுமே மருத்துவத் துறைக்குச் செலவிட்டுள்ளது. இது உலக அளவில் மிகக் குறைவு.  

 மருத்துவக் காப்பீட்டுப் பற்றாக்குறை

இந்த நிலையில், பல்வேறு நோய்களுக்கு எந்தக் காப்பீடும் இல்லாத நிலை இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகிறது. நம் மக்களில் சுமார் 80% பேர் எந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் எடுக்கவில்லை. 86 சதவிகித கிராமப்புற நோயாளி கள் மற்றும் 82 சதவிகித நகர்ப்புற நோயாளிகள் எந்தவிதமான மருத்துவக் காப்பீட்டு வசதியும் இல்லாமலே இருக்கின்றனர். இதனால் இதய நோய் பாதிப்பு ஏற்படும்போது, இந்தியர்கள் தங்களது கையிலிருந்து செலவழிக்கும் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது.

இதற்குச் சரியான தீர்வு, மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை எடுப்பதே. நோய்களைப் பொறுத்த வரை வரும்முன் காப்பதே புத்திசாலித்தனம்.  இன்று நாம் திடகாத்திரமாக இருக்கலாம். நம் உடம்புக்கு என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம். ஆனால், எதிர்பாராத விதமாக மாரடைப்போ அல்லது வேறு நோயோ வந்துவிட்டால், இத்தனை காலமும் ஒருவர் சேர்த்து வைத்த சொத்துகளில் பெரும்பகுதி கரைந்துவிடும் என்பதே நிஜம்.

ஒவ்வோர் ஆண்டும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தைத் தவறாமல் கட்டிவிட்டால், எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு நாம் அஞ்சாமல் இருக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு