Published:Updated:

ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!

ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!

சோ.கார்த்திகேயன்

ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!
ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!

ங்குச் சந்தைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் பல நிறுவனங்கள், பொதுப் பங்கு வெளியிட்டு (ஐபிஓ) வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் பிஎஸ்இ, புதிய பங்குகள் விற்பனை மூலம் ரூ.1,200 கோடி திரட்டியது. இந்தப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு டிமார்ட், சிடிஎஸ்எல், கான்டினென்டல் வேர்ஹவுஸிங் கார்ப்பரேஷன், என்எஸ்இ மற்றும் மியூசிக் பிராட்காஸ்ட் போன்ற ஐந்து நிறுவனங்கள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஐபிஓ வர உள்ளன. இதனால் மூலதனச் சந்தையில் எதிர்பார்ப்பு எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* டிமார்ட்

மும்பையைச் சேர்ந்த பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் (டிமார்ட்), பொதுப் பங்கு வெளியிடுகிறது. டிமார்ட், இந்தியாவில் உள்ள மிகவும் லாபகரமான சில்லறை விற்பனையகங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில், 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன.

இந்நிறுவனத்தின் ஐபிஓ மார்ச் 8-ம் தொடங்கி மார்ச் 10-ம் தேதி முடிவடைகிறது. பங்கு விலைப்பட்டை ரூ.290 மற்றும் ரூ.300 இடையே நிர்ணயிக்கப்படலாம். கள்ளச் சந்தையில் (Grey market) இந்தப் பங்கின் விலை ரூ.175 மற்றும் ரூ.178க்கு இடையே பிரிமியத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சிடிஎஸ்எல்

பிஎஸ்இ-ன் துணை நிறுவனமான சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் இந்தியா (சிடிஎஸ்எல்) ஐபிஓ வெளியிடத் தயாராக உள்ளது. சிடிஎஸ்எல் நிறுவனம் ரூ.400 கோடி திரட்டுகிறது. சிடிஎஸ்எல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.115 மற்றும் ரூ.135க்கு இடையே இருக்கும். இந்நிறுவனத்தின் ஐபிஓ, மார்ச் 15-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைகிறது.

* கான்டினென்டல் வேர்ஹவுஸிங் கார்ப்பரேஷன்

சரக்குப் போக்குவரத்து நிறுவனமான கான்டினென்டல் வேர்ஹவுஸிங் கார்ப்பரேஷன், ஐபிஓ வெளியிட இருக்கிறது. ஐபிஓ வெளியீட்டின் மூலம் ரூ.418 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. கான்டினென்டல் வேர்ஹவுஸிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு, மார்ச் 22-ம் தேதி தொடங்கி    24-ம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பங்கின் வெளியீட்டு விலை பற்றி எந்தத் தகவலும் இல்லை.

* என்எஸ்இ

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), முன்னணி பங்குச் சந்தையாகத் திகழ்கிறது.  இது 1992-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் முதல் முறையாக நவீன முறையிலும், மின்னணு வர்த்தக முறையிலும் முதலீட்டாளர்களுக்கு எளிதாக வர்த்தகம் மேற்கொள்ளும் வசதியை வழங்கியது என்எஸ்இ-தான்.

இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை, புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்தது. ஐபிஓ மூலம் ரூ.10,000 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கிய பின், ஐபிஓ குறித்த விவரங்கள் மேலும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மியூசிக் பிராட்காஸ்ட்

மியூசிக் பிராட்காஸ்ட் நிறுவனம், ஐபிஓ வெளியிட அண்மையில் செபி அனுமதி அளித்துள்ளது. ஐபிஓ மூலம் ரூ.540 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். ஒரு பங்கின் விலை ரூ.370 மற்றும் ரூ.375க்கு இடையே இருக்கும்.  ஐபிஓ வெளியீடு மார்ச் 6-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தை சாதகமாக இருப்பதால் இந்த 5 நிறுவனங்களைப்போலப் பல நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களம் இறங்கக் காத்திருக்கின்றன.

ஐபிஓ வரும் 5 நிறுவனங்கள்!