Published:Updated:

பராக் பராக் FM ஜெயக்குமார்!

பராக் பராக்  FM ஜெயக்குமார்!
பிரீமியம் ஸ்டோரி
பராக் பராக் FM ஜெயக்குமார்!

ஜெ.வி.பிரவீன்குமார் - ஓவியம்: ஹரன்

பராக் பராக் FM ஜெயக்குமார்!

ஜெ.வி.பிரவீன்குமார் - ஓவியம்: ஹரன்

Published:Updated:
பராக் பராக்  FM ஜெயக்குமார்!
பிரீமியம் ஸ்டோரி
பராக் பராக் FM ஜெயக்குமார்!

முதல்வர் ஆவார்னு நினைச்சவர் உள்ளே போறாரு. முதல்வரா இருப்பார்னு நினைச்சவர்  கட்சியைவிட்டே போயிட்டாரு. கொஞ்சம்நஞ்சம் தெரிஞ்சவர் திடீர்னு முதல்வர் ஆயிட்டாரு.  மீன்வளத் துறை அமைச்சரா இருந்த ஜெயக்குமாரும் யாருமே எதிர்பார்க்காத மாதிரி நிதி அமைச்சர் ஆயிட்டாரு.  இந்த நெலமைல, அவரு என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வருவார்னு ஒரு கற்பனை...

பராக் பராக்  FM ஜெயக்குமார்!

*  இதுவரைக்கும் பட்ஜெட் தாக்கல் பண்ண வர்றப்போ ‘புதிய வானம் புதிய பூமி’ன்னு ஒரு சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு பந்தாவா உள்ளே வருவாங்க. ஆனா, இனிமே தாக்கல் செய்ய வர்ற அமைச்சரோ பயங்கரப் பாதுகாப்போடதான் உள்ளே வருவாரு!  (ஏன், எதுக்குனு கேள்விலாம் வேற கேப்பீங்களாக்கும்!)

* கருணாநிதியில இருக்குற நிதிங்கிற பெயரை இந்த நிதித் துறைக்கு வெச்சிருக்கிறதை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தாலும் இருப்பார். பணத் துறை, இருப்புத் துறைனு ஏதாவது ஒரு பெயரை வைக்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கைக் கடிதம் எழுதினாலும் எழுதுவார்.

* பட்ஜெட் தாக்கலின்போது பழக்க தோஷத்தில் மக்கள் பணிக்காக கூவத்தூரில் கூடாரம் போட்ட செலவுகள், ஈ.சி.ஆரில் இளநீர் சாப்பிட்ட செலவுகளை எல்லாம் இதிலே சேர்த்து, சபையில் கிலியை ஏற்படுத்தி, அடுத்து ஒரு சட்டை கிழி நிகழ்வை அரங்கேற்றினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை!

* பன்னீர் தாக்கல் செய்த பட்ஜெட் நன்றாக இருந்ததோ இல்லையோ, அம்மாவின் நாமத்தை 167 முறை சொல்லி, நல்ல பெயரை வாங்கினார். அது மாதிரி இப்போது பட்ஜெட்டில் காட்டும் கணக்குகளைவிட, கழகத்தின் காவலாளியே... சின்னத் தாரகையே... மாண்புமிகு  சின்னம்மாவே... கூவத்தூர் சிங்கமே... சபதத்தின் சங்கமே... என்றெல்லாம் எத்தனை முறை சொல்லவேண்டும் என்கிற கணக்கு வழக்குகளைக் கச்சிதமாக வரைந்து கையடக்கப் பெட்டியில் வைத்திருப்பார்.

* இனிமேல் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போதெல்லாம் ராமேஸ்வரம் டு ரங்கராஜபுரம் ரூட் ட்ரெயின் சத்தத்தைப்போல  தடதடவென்றெல்லாம் நான்-ஸ்டாப்பாகத் தட்டாமல், ‘சத்... சத்... சத்...’ என அளவாக மூன்றே மூன்றுமுறை மட்டும் சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி தட்டச் சொல்லி உத்தரவு போட்டாலும் போடலாம்.

 * ‘ஜெய’க்குமார் என இருக்கும் தனது பெயரில், பழைய தலைமையின் வாடை அடிப்பதால் அப்டேட்டாக ‘சசி’க்குமார் என மாற்றினாலும் மாற்றிக்கொள்ளலாம். மீன்வளத் துறையில் இருந்து நிதித் துறைக்கே மாற்றிய அவருக்காக இதுகூட பண்ணமாட்டேனா என்ன என பிரேக்கிங் நியூஸ் பேட்டிகூட கொடுக்கலாம். 

  *  புதிய பொறுப்புக்குள் புகுந்திருப்பதால் ஏற்கெனவே பார்த்த மீன்வளத் துறையினுடைய சாதனைகள் பற்றி விரிவாக உரை நிகழ்த்தலாம்; அதிலும், குறிப்பாக எண்ணூரிலே வாளி வைத்து வாரி அள்ளிய சாதனைகளை மட்டும் தனி உரையாகவே நிகழ்த்தி, அவையில் அப்ளாஸ் வாங்கலாம்.

 *  கட்சியினரின் பழக்கதோஷத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வருவதற்கு முன்பாக அப்படியே சூட்கேஸை மெரினாவுக்குக் கொண்டுபோய் தியானம், சபதம் எல்லாம் எடுத்துவிட்டு, அதன்பிறகு தாக்கல் செய்ய  வரவும் வாய்ப்பிருக்குது மக்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!