? எனக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். அவளுடைய மேற்படிப்பு மற்றும் திருமணச் செலவுகளுக்காக மாதந்தோறும் 5,000 ரூபாயை எதில் முதலீடு செய்யலாம்?

அருள், சென்னை
செந்தில் மதிவதனன், நிதி ஆலோசகர், penguwin.com

“ரிஸ்க் எதையும் எடுக்க விரும்பாமல், அரசு உத்தரவாதத்துடன் உள்ள திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி) சிறந்தது. இதன் வட்டி வருமானம் இன்றைய நிலையில் 8.5%. நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால், குறைந்தது 13-14% லாபம் பெற முடியும்.”

? 10,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளை நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாமா?

பாலாஜி, கோவை
ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என வரும்போது, நிர்வகிக்கப்படும் (Asset Under Management - AUM) சொத்துகளின் மதிப்பை மட்டுமே அளவுகோலாக வைத்து முடிவு செய்யக் கூடாது. இந்தியாவில் செயல்படும் 42 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பாதிக்கு மேல் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான அளவில் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. சில வருடங்களுக்குமுன் இந்தியாவில் காலூன்றிய பிஎன்பி பரிபா, ஐடிபிஐ, இந்தியா புல்ஸ், மிரே அஸெட், மோதிலால் ஆஸ்வால் ஆகிய நிறுவனங்கள் சொத்து வளர்ச்சியில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதைப் பார்க்கிறோம்.

முதலீட்டாளர்களின் பணத்தை சிறந்த வகையில் நிர்வகிப்பதோடு மட்டுமல்லாமல், லாபத்தை ஈட்டித் தர வேண்டிய பொறுப்பு ஃபண்ட் மேனேஜர்களுக்கும் அவர்களுடைய சகாக்களுக்கும் உள்ளது. இவ்வாறு சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஃபண்டுகள், சில ஆண்டு களில் முதலீட்டாளர்களின் நன்மதிப்பையும், ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுவிடுகின்றன. முதலீட்டாளர்கள் தங்களுக்கென இலக்கை முடிவுசெய்து, மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் எஸ்ஐபி மூலம் தானாகவோ அல்லது தங்கள் நலனுக்காக அக்கறை கொண்டு செயல்படும் ஆலோசகரின் துணையுடனோ ஃபண்டுகளைத் தேர்ந்தெடுங்கள். சீரான அஸெட் அலொகேஷன், நீண்ட கால முதலீடு என வைத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.”

? கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு டிடிஎஸ் பொருந்துமா?

பார்த்திபன், அரியலூர்
ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்

“முதலீட்டாளர்கள் இந்தியராக இருக்கும்பட்சத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, நீங்கள் பெற்ற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்தைக் காண்பித்து வரி கட்ட வேண்டும். மாறாக, முதலீட்டாளர் வெளிநாடு வாழ் இந்தியராக இருப்பின், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டிடிஎஸ் பிடித்தம் செய்தபின், மீதமுள்ள தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும்.”

? எஸ்பிஐ பார்மா ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு கிடைக்குமா?

சிவராஜ், திருவாரூர்
ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர்

“எஸ்பிஐ பார்மா ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிக்கழிவு கிடையாது. பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான (Equity Linked Savings Scheme - ELSS) இஎல்எஸ்எஸ் முதலீடுகளுக்கு மட்டுமே ஒரு நிதி ஆண்டில் ரூ.1,50,000 வரை வரி விலக்குக் கிடைக்கும்.”

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!