Published:Updated:

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?

கேள்வி - பதில்

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?

கேள்வி - பதில்

Published:Updated:
மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?
மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?

? ஏற்கெனவே நான், என் மனைவி, என் முதல் குழந்தை என மூவருக்கும் மருத்துவக் காப்பீடு உள்ளது. இரண்டாவது குழந்தைக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க என்ன செய்ய வேண்டும்?

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?


ஸ்ரீராம், சென்னை
எஸ். ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர்


“நீங்கள் ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளதால், அடுத்ததாகப் பிறந்த குழந்தையையும், அந்த பாலிசியில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், குழந்தை பிறந்து 90 நாள்கள் கழித்தே சேர்க்க முடியும். இதற்கு நீங்கள் எந்த நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கிறீர்களோ, அந்த நிறுவனத்தை அணுகி, அதற்கான பிரிமீயத் தொகையைச் செலுத்தி சேர்த்துக் கொள்ளலாம். இதுவே, இந்த பாலிசியைப் புதுப்பிக்கும் காலம் 90 நாள்களுக்குள் இருந்தால், புதுப்பிக்கும்போதே  குழந்தையின் பெயரையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்.”

? கடந்த ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் எனக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனை அடுத்துவரும் ஆண்டுகளில் எப்படி சரிக்கட்ட முடியும்?

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?



செந்தில், கோபி
சதீஷ்குமார், ஆடிட்டர்


“பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நஷ்டத்தைப் பொறுத்தவரை, நீண்ட கால இழப்பு எனில், அதை அடுத்து வரும் ஆண்டுகளில் சரிக்கட்ட முடியாது. அதுவே குறுகிய கால இழப்பு எனில், நீண்ட கால அல்லது குறுகிய கால லாபங்களுக்கு எதிராக அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

பங்கு முதலீடு மூலமாக நீண்ட கால மூலதன ஆதாயம் இருந்தால்கூட சரிக்கட்ட முடியாது. பங்கு பரிவர்த்தனை வரி (STT) செலுத்தியிருந்தால், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி கிடையாது. நஷ்டம் இருந்தாலும் அதை சரிகட்ட முடியாது.”

? என் வயது 63. ஏப்ரல் மாதத்தில் வருமான வரி விலக்குப் பெற ரூ.1.50 லட்சத்தை எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்? இதை ஒரே முறையில் முதலீடு செய்யலாமா அல்லது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யலாமா? குரோத் ஆப்ஷன், டிவிடெண்ட் பே அவுட் குரோத் ஆப்ஷன். இவற்றில் எது பெஸ்ட்?

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்


“டி.எஸ்.பி-பி.ஆர் டாக்ஸ் சேவர் ஃபண்டில் தாங்கள் ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில், பங்குச் சந்தை தற்போதைய நிலையில் உச்சத்தில் இருப்பதால், டி.எஸ்.பி-பி.ஆர் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டில் ரூ.1.5 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்துகொள்ளலாம். இந்த ஃபண்டிலிருந்து மாதம் ரூ.5,000 டி.எஸ்.பி-பி.ஆர் டாக்ஸ் சேவர் ஃபண் டுக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் (எஸ்.டி.பி) முறையில் மாற்றிக்கொள்ளலாம்.

இப்படி எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்யும்போது, சந்தை ஏறினால் உங்களின் லாபம் குறையும். அதேசமயம், சந்தை சரிந்தால், லாபம் கூடும். சராசரியாக கூடுதல் யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இடையில்  பணம் தேவையில்லாதபட்சத்தில், குரோத் ஆப்ஷன் சிறந்தது. ஒவ்வொரு வருடமும் டிவிடெண்ட் வந்தால் நல்லது என நினைத்தால், டிவிடெண்ட் ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.”

? என் மகனின் படிப்புக்கான செலவை இன்ஷூரன்ஸ் பாலிசி (எண்டோவ்மென்ட்) எடுப்பதன் மூலம் சேர்க்கலாமா, குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சேர்க்கலாமா அல்லது பொதுவான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சேர்க்கலாமா?

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?



ராஜேஷ், ஈரோடு
த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“எண்டோவ்மென்ட் பாலிசிகள் குறைந்த வருமானத்தை வழங்கக்கூடியவை. இவை ஆண்டுக்கு 5% என்ற அளவிலேயே வருமானத்தை வழங்கி வருவதால், இதைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவான, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைவிட, குழந்தைகளுக்கான திட்டங்களில் ஆவணங்கள் மற்றும் நடைமுறை மிகவும் கடினமாக இருக்கிறது. ஆகையால், குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைவிட, பொதுவான ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு மேற்கொள்வது நல்லது. உங்கள் மகன் பெயரை நாமினியாக்கி, உங்கள் பெயரில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டு வரலாம்.”

? என் பிபிஎஃப் கணக்கை அஞ்சல் அலுவலகத்திலிருந்து, தனியார் வங்கிக்கு மாற்ற முடியுமா?

மருத்துவக் காப்பீடு... - இரண்டாவது குழந்தையைச் சேர்ப்பது எப்படி?

மணிகண்டன், விழுப்புரம்
அ.கோவிந்தராஜன், தபால் சேவைகள் இயக்குநர், சென்னை


“உங்களுடைய பிபிஎஃப் கணக்கை அஞ்சல் அலுவலகத்திலிருந்து, தனியார் வங்கிக்கு மாற்ற முடியும். உங்கள் பிபிஎஃப் கணக்கை தனியார் வங்கிக்கு மாற்ற, அஞ்சல் அலுவகத்தில் கணக்கை இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் `SB 10b’ பூர்த்தி செய்து முதலில் வழங்க வேண்டும். அஞ்சல் அலுவலர், உங்களது  கையொப்பத்தை சரிபார்த்த பிறகு, படிவம் D வழியாக பிபிஎஃப் கணக்கு மூடப்படும். அதன்பின் எந்த வங்கிக் கிளைக்கு நீங்கள் கணக்கை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த வங்கிக் கிளையின் மேலாளருக்கு காசோலை மூலமாகக் கணக்கு இடமாற்றம் செய்யப்படும். அதன்பின் நீங்கள் தொடர்ச்சியாக பிபிஎஃப் கணக்கைத் தொடரலாம்.” 

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

படம்: தே.அசோக்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!