? நான் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஆக்ஸிடென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்குமா? எவ்வளவு பிரீமியம் கட்ட வேண்டும்?

- வேல்ராஜன், திருச்சி

ஆர்.குருராஜன், உதவிப் பொது மேலாளர், இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ்

“ஸ்டார் ஹெல்த் மற்றும் ராயல் சுந்தரம் போன்ற தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு விபத்துக்கான தனிப்பட்ட பாலிசி எடுக்க முடியும். இந்த பாலிசித் திட்டங்களுக்கு ஆண்டு பிரீமியமாக கிட்டத்தட்ட 750 ரூபாய் வரை செலுத்தவேண்டி வரும். பொதுத்துறை நிறுவனங்களில், வருமானத்துக்கு போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே காப்பீடு வழங்கப்படுகிறது. ஆதாரங்கள் சரியாக இருந்தால், 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீட்டுக்கான பாலிசியை எடுக்கலாம்.”

? ரூ.1 லட்சத்தை ஒரு மாத காலத்துக்குக் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன். இது லாபகரமாக இருக்குமா?

- கவிமாணிக்கம், ஈரோடு

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்

“கடன் சார்ந்த ஃபண்டுகளில், லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் குறுகிய கால முதலீட்டுக்கு உகந்ததாகும். நீங்கள் ஒரு மாத காலத்துக்கே முதலீடு செய்ய நினைப்பதால், லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். உங்களின் வங்கி சேமிப்புக் கணக்குடன் ஒப்பிடும் போது, இந்த ஃபண்டுகளில் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். பொதுவாக, வங்கி சேமிப்புக் கணக்குகளில் ஆண்டுக்கு 4% வட்டி கிடைக்கிறது. லிக்விட் ஃபண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 6.50% வருமானம் கிடைக்கும். ஆகவே, லிக்விட் ஃபண்ட் முதலீடு உங்களுக்கு லாபகரமாக அமையும். பணத்தைப் போடும்போதோ அல்லது எடுக்கும்போதோ பொதுவாக எந்த விதமான கழிவும் இருக்காது.”

? ஒரு தாயோ அல்லது தந்தையோ தன் மகனுக்கோ அல்லது மகளுக்கோ பிரித்துத் தந்த சொத்தினைத் திரும்பக் கேட்க முடியுமா? ஏற்கெனவே கொடுத்த சொத்தினை சட்டப்படி ரத்து செய்ய முடியுமா?

- மனோஜ், திண்டுக்கல்

த.ஜீவா வழக்கறிஞர்

“பெற்றோர்கள் சொத்தினைப் பாகப்பிரிவினை மூலமாக மகனுக்கோ அல்லது மகளுக்கோ பிரித்துக் கொடுத்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், அதே சொத்தினை தானப் பத்திரமாக (செட்டில்மென்ட்) கொடுத்திருந்தால், பிள்ளைகள் சரியாகக் கவனிக்கவில்லை என்பது போன்ற குறிப்பிட்ட ஒரு சில காரணங்களுக்காக, வழங்கிய சொத்தினை சட்டப்படி ரத்து செய்ய முடியும். சொத்தினை திரும்பக் கேட்டுப் பெறவும் முடியும்.”

? நான் 25 ரூபாய்க்குக் குறைவான மூன்று நல்ல நிறுவனப் பங்குகளில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்க்கு முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். இது சரியான முடிவுதானா?

- தமிழ் அரசன், சென்னை

வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்

“பொதுவாக, பங்கு முதலீடு என்று வரும்போது, அது நல்ல பங்கா, முதலீட்டுக்கு ஏற்ற பங்கா என்பது போன்றவற்றை மட்டும் அவதானித்து முதலீடு செய்ய வேண்டும். விலை 25 ரூபாய்க்குக் கீழ் என்பது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் வைத்துக்கொள்ள வேண்டாம். கையில் சேமிப்புப் பணம் குறைவாக இருக்கிறதென்றால், பங்கு களையும் குறைந்த எண்ணிக்கையில் வாங்கிக்கொள்ளலாம்.”

? என் வயது 63. மாதம் ரூ. 10,000 முதலீடு செய்ய முடியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு, சிறப்பாகச் செயல்படக்கூடிய, முதலீட்டுக்கேற்ற துறைகளைப் பரிந்துரைக்கவும்.

- மகேந்திரன், திருப்பூர்

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

“இரும்பு மற்றும் உலோகத் துறை, எரிவாயு, மருந்து உற்பத்திச் செய்யக்கூடிய நிறுவனங்கள், வரும் நாள்களில் சிறப்பாகச் செயல்படும். மருந்துத் துறைகள் இப்போது வரைக்கும் பிரச்னைகளைச் சந்தித்துதான் வருகின்றன. எனினும், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

ஆட்டோமொபைலுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் துறைகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளன. நுகர்வோர் சாதனங்கள் துறை, எலெக்ட்ரிக்கல் கேபிள் அண்ட் எக்யூப்மென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நன்றாகச் செயல்படும். நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். ஆனால், முதலீடு செய்யும்முன் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அந்த நிறுவனங்களுடைய, ஒரு பங்கு வருவாய் (EPS), ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சிய டைந்து வர வேண்டும். அதேசமயம், நிறுவனம் வழங்கக்கூடிய வட்டி குறைவாக இருக்கிறதா அல்லது வருடாவருடம் குறைகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இறுதியில் நிறுவனத்தின் கடன் சுமை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் கவனித்து, முதலீடுகளை மேற் கொள்ளலாம்.”

?மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது ஆபத்து என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

- பாலாஜி, திருப்பூர்

பா.பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்.

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொள்வது ஆபத்தானதில்லை. மாறாக மேற்கொள்ளப்படும் முதலீட்டில் ஏற்ற இறக்கம் (வாலட்டைல்) என்பது இருக்கும். முதலீட்டில், ஆபத்து மற்றும் வாலட்டைல் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. ஆபத்து என்பது உங்களுடைய முழுப் பணத்தையும் இழப்பதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது என்று அர்த்தம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொள்ளும்போது முதலில் ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். ஆனால், மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்கள் முதலீடு மேல்நோக்கி நகர வாய்ப்பே தவிர, கீழ் நோக்கி இறங்க வாய்ப்புக் குறைவு. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பாதுகாப்பானது. ஓராண்டு மட்டுமே காத்திருக்க முடியும் , ரிஸ்க் எடுக்க முடியாது என்றால், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மூன்றாண்டுகளுக்குள் முதலீட்டை வெளியே எடுத்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரி, அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப (நீண்ட கால மூலதன ஆதாய வரி 20%) கட்ட வேண்டி வரும். இதுவே உங்களால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியும் என்றால், ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில், ஓராண்டுக்கு மேல் வெளியேறும்பட்சத்தில் நீண்ட கால மூலதன வரி கட்ட வேண்டியதில்லை. ஓராண்டுக்குள் என்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% கட்ட வேண்டும்”

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan
twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com