இளம் வயதில் ஓடியாடி உழைக்கும் நாம், ஓய்வுக் காலத்தில் நிதி தொடர்பான, பிக்கல்பிடுங்கல் இல்லாத நிம்மதியான ஓய்வுக் காலத்தையே பெற விரும்புகிறோம். இதற்காகவே நம்முடைய பணிக்காலத்தில் நாம் பெறும் வருமானத்தில் கணிசமான தொகையானது கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, பணியாளர் சேமநல நிதியாகச் (EPF) சேமிக்கப் பட்டு வருகிறது.

ஆனால், பி.எஃப் சேமிப்பின் மூலம் கிடைக்கும் வருமானமானது நீண்ட காலமாக ஒற்றை இலக்கத்தில்தான் (8.2-9.5%) இருந்து வருகிறது. ஏனெனில், இ.பி.எஃப்-ல் சேமிக்கப்படும் பணத்தில் பெரும் பகுதி அரசு வெளியிடும் பாண்டுகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. அந்தப் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் இ.பி.எஃப் அமைப்பு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், அனைவருக்கும் பென்ஷன் திட்டம் என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) செய்யப்படும் சேமிப்பானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், இரண்டு இலக்க வருமானத்தை அடையும் வாய்ப்பு இதில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் என்.பி.எஸ் திட்டத்தின் முதலீட்டு வரம்பை உயர்த்தி இருப்பதோடு, பி.எஃப் முதலீட்டை என்.பி.எஸ்-க்கு மாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், ஒருவர் தனது ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை உருவாக்குவதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை 80சி பிரிவில் வரிவிலக்கு பெறலாம். கூடுதலாக 80 சிசிடி (1பி) பிரிவில் ரூ. 50 ஆயிரத்துக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு வழங்கப் படுகிறது. ஒருவர் தனது பி.எஃப் நிதியைத் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது.

எப்படி மாற்றிக்கொள்வது?

ஒருவர் தனது பி.எஃப் முதலீட்டை என்.பி.எஸ் திட்டத்துக்கு மாற்ற முதலில் டயர்1 என்.பி.எஸ் கணக்கை வைத்திருப்பது அவசியம். இந்தக் கணக்கு, உங்களுடைய நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள கணக்காக இருக்கலாம். அல்லது நீங்கள் என்.பி.எஸ் அலுவலகத்தை நேரில் அணுகியோ, இ-என்.பி.எஸ் வசதியைக் கொடுக்கும் npstrust.org.in என்ற இணையதளத்தில் சென்றோ விண்ணப்பித்துக் கணக்கைத் தொடங்கலாம்.

பி.எஃப் டு என்.பி.எஸ்

உங்களுடைய பி.எஃப் முதலீட்டை உங்களுடைய என்.பி.எஸ் கணக்குக்கு மாற்ற வேண்டுமெனில், நீங்கள் தற்போது வேலை பார்க்கும் நிறுவனம் உங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிராவிடன்ட் ஃபண்ட் அல்லது ஓய்வூதிய நிதிக் கணக்கின் வழியாக, முதலீட்டை மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்டவுடன், அங்கீகரிக்கப் பட்ட பிராவிடன்ட் ஃபண்ட் அல்லது ஓய்வுக் காலச் சேமிப்பு நிதியிலுள்ள தொகை என்.பி.எஸ் கணக்குக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகை காசோலை அல்லது வரைவோலை வடிவில் என்.பி.எஸ் தலைமை அலுவலகத்தின் பெயரிலோ (அரசுப் பணியாளராக இருப்பின்) பிஓபி கலெக்ஷன் அக்கவுன்ட் பெயரிலோ (பொது மக்கள் அனைவருக்குமான) வழங்கப்படும்.

நிறுவனத்துக்குக் கடிதம்

பணியாளரின் என்.பி.எஸ் டயர் 1 கணக்குக்கு இந்தத் தொகையைப் பரிவர்த்தனை செய்ய, அங்கீகரிக்கப்பட்ட பிராவிடன்ட் ஃபண்ட் அல்லது ஓய்வுக் கால நிதித் தரப்பிலிருந்து பணி யாளருடைய நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பப் படும். என்.பி.எஸ் தலைமை அலுவலகம் அல்லது பிஓபி, அந்தத் தொகையைப் பெற்று பணியாளரின் என்.பி.எஸ் டயர் 1 கணக்கில் வரவு வைக்கும்.

இதன் மூலம் பணியாளர் ஒருவரின் பி.எஃப் முதலீடு என்.பி.எஸ் கணக்கில் சேமிக்கப்பட்டு, அது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் பி.எஃப் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் காட்டிலும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.