Published:Updated:

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!

ப.முகைதீன் சேக்தாவூது

பிரீமியம் ஸ்டோரி
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!

ணம் தருவதைவிட, பணம் வரும் பாதையைத் திறந்து வைப்பதுதான் சிறந்தது என்று சொல்வார்கள். ஆனால், பணத்தையும் கொடுத்து,  பணம் வரும் பாதையையும் திறந்துவைத்தால் எப்படியிருக்கும் என யோசனை செய்து பாருங்கள். அது சிறப்பினும் சிறப்பு அல்லவா. அப்படிப்பட்ட இரண்டு சிறப்பம்சங்கள்தான் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசாங்கம், இந்த ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை 01.01.2016 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது தெரிந்த விஷயம்தான். மத்திய அரசின் ஆணையைப் பரிசீலித்து, அவற்றைத் தமிழக அரசு ஊழியர்களுக்கும் தருவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  2017- ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி இந்தக் குழு செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வரும் ஜூன் மாதம் புதிய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
நிர்வாக நலனுக்குப் பாதிப்பின்றி, ஊழியர் நலன் பேணுவதில் முன்னோடியாக தமிழக அரசு எப்போதுமே இருக்கிறது. எனவே, மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுள்ள சலுகைகள் தங்களுக்கும் வந்துசேரும் என்பதே தமிழக அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு.

கடந்த 01.06.1988-ல் அமலாக்கம் செய்யப்பட்ட 5-வது ஊதியக்குழுதான் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கும் தந்தது. 1988 துவங்கி கடந்த 28 ஆண்டுகளில் அடிப்படை ஊதியம் சுமார் 20 முதல் 30 மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல், அடிப்படை ஊதியத்தை  அதிகரிக்கச் செய்யும் வருடாந்திர ஊதிய உயர்வுத் தொகையும் 2,000% முதல் 3,000% வரை உயர்ந்திருக்கிறது.  அதாவது, 25 ரூபாயாக இருந்த வருடாந்திர ஊதிய உயர்வுத் தொகை தற்போது ரூ.500 ஆகவும், ரூ.150 ஆக இருந்த ஊதிய உயர்வுத் தொகை ரூ.4,300 என்கிற வரம்பையும் எட்டியுள்ளன.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!

முதல் ஊதிய உயர்வு

எம்பிபிஎஸ் / பிஹெச்எம்எஸ் போன்ற மருத்துவப் பட்டம் பெற்று, உதவி மருத்துவராகத் தமிழக அரசுப் பணியில் 01.07.2016 அன்று ஒருவர் சேர்வதாக வைத்துக்கொள்வோம்.

இவரின் (புதிய) முதல் ஊதியம் ரூ.57,222. தமிழக அரசில் தற்போதுள்ள ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறைப்படி, இவருக்கு முதல் ஊதிய உயர்வு (First Annual Increment) கிடைக்க வேண்டிய தேதி 01.07.2017. அன்று, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊதிய உயர்வு வழங்குதல் நடைமுறைக்கு வந்தால், 01.07.2017 அன்று ஒருவர் பெற வேண்டிய ஊதிய உயர்வினை ஆறு மாதங்களுக்கு முன்பே, அதாவது 01.01.2017 அன்றே பெற்றுவிடுவார்.

இந்த வருடம் மட்டுமல்ல, இந்தப் பதவியிலிருக்கும் காலம் வரை வருடா வருடம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஒருவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். அது மட்டுமல்ல, பதவி உயர்வின்போது ஒருவர் இதே ஊதிய உயர்வுத் தேதியைத் தக்கவைத்துக் கொண்டால், அவரது பணிக்காலம் (Service Period) முழுமைக்கும் முன்னரே ஊதிய உயர்வு கிடைத்துக்கொண்டே இருக்கும். அதாவது, ஒவ்வொரு வருடமும் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஊதிய உயர்வு கிடைக்கும்.
இதன்படி, முதலாண்டு ஊதிய உயர்வுத் தொகை 1,768 ரூபாயானது ஆறு மாதங்களுக்கு முனபாகவும், இரண்டாவது ஊதிய உயர்வுத் தொகை 3,672 ரூபாயானது ஆறு மாதங்களுக்கு முன்பாகவும், மூன்றாவது ஊதிய உயர்வுத் தொகை 5,980 ரூபாயானது ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில், ஒருவர் தனது 30 ஆண்டு காலப் பணியில் அவர் சந்திக்கும் மூன்று ஊதியக் குழுக்கள் மற்றும் மூன்று பதவி உயர்வுகள் ஆகியவற்றின் பெருக்கத்தால் ஊதியம் + ஊதிய உயர்வு அல்லாமல் உபரியாக பெறும் தொகை மட்டுமே (அவரது பணிக்காலத்தில்) ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாது.

இந்த உபரித் தொகையைத் தொடர் வைப்பு (RD) செய்தாலே பெரிய தொகையாகச் சேர்ந்துவிடும். இதன் மூலம் ஓய்வுக் காலத்தை கவலையின்றி நிம்மதியாகக் கழிக்கலாம்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!

பணிக்கொடை (Gratuity)

இதேபோல் பணம் வரும் பாதை திறக்கப்பட்ட மற்றொரு அம்சம், பணிக்கொடை. ஓர் ஊதியக் குழுவுக்கும் அடுத்துவரும் ஊதியக் குழுவுக்கும் இடைப்பட்ட காலம் பத்தாண்டுகள். இந்தப் பத்தாண்டு இடைவெளியில் முந்தைய ஊதியக்குழு விதித்த நடைமுறைகளில் மாற்றமிருக்காது. ஆனால், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, அதிகபட்சப் பணிக்கொடை 20 லட்சம் ரூபாய் என்றும், அகவிலைப்படி 50 சதவிகிதத்தைத் தொட்டால் 25 லட்சம் ரூபாய் என்றும், அகவிலைப்படி 100 சதவிகிதத்தைத் தொட்டால் 30 லட்சம் ரூபாய் என்றும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. (பணிக்கொடையைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்ச பணிக்கொடை இத்தனை ரூபாய் என்று வரையறை எதுவும் செய்யப்படவில்லை)

 ஓய்வூதியப் பலன்கள்

ஊதியக்குழு அமலாக்கத்தின் ஒட்டுமொத்த பணப்பலன், ஊதியக்குழு அமலாக்கத் தேதியையொட்டி ஓய்வு பெறுபவர்களுக்கே கிடைக்கும். காரணம், ஊதியக் குழுவானது முந்தைய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படியான ஊதியத்துடன் அக விலைப்படியையும் சேர்த்து புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்வதுதான். ஊதியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதில் சரிபாதியாக இருக்கும் ஓய்வூதியமும் உயரும்.

சென்ற ஊதியக் குழுவில் 100 சதவிகிதம் அடிப்படை ஊதியம் + 86 சதவிகிதம் அகவிலைப்படியை எடுத்துக்கொண்டு, 186 சதவிகிதம் புதிய ஊதியமாக நிர்ணயமானது. தற்போது 100 சதவிகிதம் அடிப்படை ஊதியம் + 125 சதவிகிதம் அகவிலைப்படி + 35 சதவிகிதம் உபரி உயர்வாக 260 சதவிகிதம் புதிய ஊதியமாகியுள்ளது. எனவே, ஓய்வூதியமும் அதிகரித்துள்ளது.

இதன்படி 34,730 ரூபாய் அடிப்படை ஊதியமும், 6,600 ரூபாய் தர ஊதியமும் (Grade Pay) பெற்றிருந்து (முந்தைய ஊதியக்குழுவின்படி) ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர் ஒருவரின் ஓய்வூதியப் பலன்களை, ஊதியக்குழுவுக்கு முன் மற்றும் ஊதியக்குழு அமலாக்கத்துக்குப் பின் என இருவேறு தேதிகளில் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்!

ஊதியக்குழு அமலாக்கத்துக்கு ஒரு மாதம் முன்பும், ஒரு மாதம் பின்புமாக ஓய்வுப் பெற்று கிடைக்கக்கூடிய பணப்பலன் இதுதான். அலுவல் குழுவின் பரிசீலனைக்கும் - பரிந்துரைக்கும் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட வேறு பல அம்சங்களும் உண்டு. சென்ற ஊதியக்குழுப் பரிந்துரைகளில் விடுபட்டவையும் வழங்கப் படலாம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலுவல் குழு அமைப்பாணையில் நல்ல செய்தி ஒன்றும் உண்டு. அது ‘அலுவல் குழுவானது, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஆணையிட்டதும் இனி ஆணையிடப் போவதுமான ஊதியம் உள்ளிட்ட இனங்களையும் பரிசீலித்துப் பரிந்துரைக்கும் என்பதே!

தமிழக அரசின் தற்போதைய நடைமுறை!

ஜனவரி 1 முதல் மார்ச் 31 முடிய புதிதாகப்  பணியில் சேருகிறவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் முதல் ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பணியில் சேருபவர்களுக்கு ஏப்ரல் முதல் நாளில் முதல் ஊதிய உயர்வு கிடைக்கும். ஜூலை முதல்  செப்டம்பர் வரையில் பணிக்குச் சேர்ந்தோருக்கு ஜூலை 1-ல் முதல் ஊதிய உயர்வு கிடைக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரை பணியில் சேர்ந்தோருக்கு அக்டோபர் 1-ல் முதல் ஊதிய உயர்வு பெறுவார்கள்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை குறித்து, மத்திய அரசின் தற்போதைய முறை

ஜனவரி 2 முதல் ஜூலை 1 வரை புதிதாகப் பணியில் சேருவோர் /பதவி உயர்வு பெறுவோர்க்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் ஊதிய உயர்வு கிடைக்கும். ஜூலை 1 முதல் ஜனவரி 1 வரை பணியில் சேர்ந்தோர்/பதவி உயர்வு  பெற்றவர்களுக்கு, அடுத்த ஆண்டு ஜூலை முதல் தேதியில் முதல் ஊதிய உயர்வு.

இந்தப் புதிய நடைமுறைப்படி, ஜூலை 1 மற்றும் ஜனவரி 1-ல் பணியில் சேர்ந்தவர்கள் / பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆறு மாதத்துக்குள்ளேயே முதல் ஊதிய உயர்வு கிடைத்துவிடும்.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு அடுத்த ஒன்பது மாதங்களிலேயே, அதாவது அடுத்த ஜனவரியிலேயே ஊதிய உயர்வு கிடைக்கும். இதேபோல், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு அடுத்த ஜூலையில் ஊதிய உயர்வு அதாவது, ஒன்பது மாதங்களிலேயே கிடைக்கும். மற்றவர்களுக்கு உபரியான பணப்பலன் ஏதுமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு