Published:Updated:

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி!

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில்  ஜவுளி ஏற்றுமதி!
பிரீமியம் ஸ்டோரி
நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி!

துரை.வேம்பையன்

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி!

துரை.வேம்பையன்

Published:Updated:
நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில்  ஜவுளி ஏற்றுமதி!
பிரீமியம் ஸ்டோரி
நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி!

ரூர் மாவட்டம், ஜவுளி வர்த்தகத்துக்குப்  பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தியாகும் பெட்ஷீட்டுகள், திரைச்சேலைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள், குஷன்கள் போன்றவை இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா,  ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன. இதனால் கரூர் ஜவுளி வியாபாரம், கடந்த காலத்தில் ஏறுமுகத்திலேயே இருந்தது. சமீபத்தில், ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் நடந்த ஜவுளிக் கண்காட்சியில், கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.300 கோடிக்கு மேல் ஆர்டர் கிடைத்தது.

ஜவுளித் துறையில் கொடிக்கட்டிப் பறக்கும் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குப் போட்டியாகக் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் திறமையைக் காட்டி, இந்தப் பெரிய ஆர்டரைப் பெற்றார்கள். ஆனால், சமீபத்தில் திடீரென ஏற்றப்பட்டிருக்கும் நூல் விலை ஏற்றத்தினால் திக்குமுக்காடிப்போயுள்ள கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர் களும் அந்த ஜெர்மனி ஆர்டர்  கேன்சலாகிவிடுமோ?’ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசினார் ஸ்ரீசாய்சேஷன் ஏற்றுமதி கம்பெனி நிறுவனர் சுந்தரேசன். “கரூரில் சுமார், 300 ஜவுளி உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள். ஜெர்மனியின் 330 கோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெறும் அளவுக்கு ஒரு மாதம் முன்புவரை இங்கே ஜவுளித் தொழில் ஏறுமுகத்தில்தான் இருந்தது.

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில்  ஜவுளி ஏற்றுமதி!

சமீபத்தில் 500 ரூபாயாக இருந்த 1-ம் நம்பர் நூல் விலையை 700 ரூபாயாகவும்,  800 ரூபாயாக இருந்த 2-ம் நம்பர் நூல் விலையை 1,100 ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், எங்களின் உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்து, ஜெர்மனி ஆர்டரை கைநழுவவிடும் அபாயத்தில் இருக்கிறோம். இதுதவிர, இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கும், யூரோவுக்கும் 7 முதல் 10% வரை திடீரென குறைந்திருக்கிறது. இதனால், எங்களால் ஜவுளித் தொழிலை நஷ்டம் இல்லாமல் தொடர்வது கடினமான விஷயமாக மாறியிருக்கிறது. 

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில்  ஜவுளி ஏற்றுமதி!


கரூரில் சாயக்கழிவுப் பிரச்னையால் ஜவுளித் தொழில் ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத சிறு சாயப்பட்டறைகள், சலவை ஆலைகளெல்லாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் இடிக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கிவந்த கரூரில் தற்போது வெறும் 62 சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்க லட்சக் கணக்கில் பணம் தேவைப்படுவதால், பல சிறு சலவை உரிமையாளர்கள் அதற்கான முயற்சியைச் செய்யாமல், மாற்றுத் தொழிலுக்குப் போய்விட்டார்கள். இதனால் கரூர் ஜவுளித் துறை ஏற்றுமதியாளர்கள் நூல்களுக்கு சாயமேற்ற திருப்பூர், ஈரோடு, நாமக்கல் போன்ற  மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை இருக்கிறது.

உள்ளூரில் ஐந்து கிலோ எடை கொண்ட நூலுக்கு சாயமேற்ற ரூ.200 ஆகிறது எனில்,  வெளி மாவட்டங்களில் அதே வேலைக்கு ரூ.450 ஆகிறது. போக்குவரத்துக் கட்டணம் தனியாகக் கொடுக்க வேண்டும். அரசே சாயப்பூங்கா கொண்டு வருவதாகச் சொன்னது. ஆனால், இன்றுவரை அமையவில்லை. இதனால், ஜவுளித்தொழில் இங்கே நலியத் தொடங்கியிருந்தது.

நூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில்  ஜவுளி ஏற்றுமதி!



இந்த நிலையில்தான், கரூர் ஏற்றுமதியாளர்கள் ஜெர்மனி ஆர்டரைப் பெற்றார்கள். ஜவுளித் தொழில் நிமிரும் என்று நம்பிக்கை ஏற்பட்ட சூழலில்தான், நூல் விலையேற்றம் அந்த நம்பிக்கையைச் சிதறிடித் திருக்கிறது. இதனால் ஜெர்மனி ஆர்டரை முடிக்க முடியாமல் உள்ளோம். நூல் விலையைக் குறைத்தால்தான் எங்கள் தொழில் பழையபடி பீடுநடை போடும்” என்றார்.

 இதே பிரச்னை குறித்து நம்மிடம் பேசினார் ஹோம்லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஸ்டீபன்பாபு. “சாயக்கழிவுப் பட்டறைகள் மூடல் பிரச்னையால் ஏற்கெனவே ஆண்டுக்கு ரூ.3,000 கோடி  வர்த்தகம் நடந்த கரூர் மாவட்டத்தில், இப்போது ரூ.2,000 கோடிக்கே வர்த்தகம் நடக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள நூல்விலை ஏற்றத்தால், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு ஆர்டரை முடிக்க முடியவில்லை. சாயப்பட்டறைகள் அமைக்க தனிநபருக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். இல்லையெனில், சாயப்பட்டறைகளின் பங்களிப்பு இல்லாமல் அரசே பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். தற்போதைய பட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு இல்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நூல் விலை, பழைய விலையை விட 35% உயர்ந்திருக்கிறது. இதே நிலை நீடித்தால், நாங்கள் எப்படி ஜவுளி உற்பத்தித் தொழிலை செய்ய முடியும்?, இந்த நூல் விலையேற்றம் சில நாட்களில் இன்னும் உயர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.  இந்த விலையேற்றத்தால் நூல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

எனவே, வீழ்ச்சி அடையத் தொடங்கியிருக்கும் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிலைத் தூக்கி நிறுத்த, மத்திய அரசு தனது ஏற்றுமதிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பஞ்சு மற்றும் நூலை இறக்குமதி செய்துதர வேண்டும். ஏற்கெனவே, ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், எங்கள் தொழில் பாதிப்பில் இருக்கிறது.இன்னொரு பக்கம், நூல் விலை ஏற்ற பிரச்னையால் அது இன்னும் அதிகமாகும். அதோடு, வெளிநாட்டு ஆர்டர்களும், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், நமக்குக் கிடைக்கக்கூடிய அந்நிய செலாவணி வருமானமும் பாதிக்கப் பட்டிருக்கிறது. நூல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால், எங்கள் தொழிலை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என்றார் அதிரடியாக.

ஆட்சியாளர்களே, ஜவுளித்தொழிலுக்கு உயிரூட்டுங்கள்!

படங்கள்: நா.ராஜமுருகன்