Published:Updated:

இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச் சமாளிப்பாரா?

இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச்  சமாளிப்பாரா?
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச் சமாளிப்பாரா?

ஜெ.சரவணன்

இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச் சமாளிப்பாரா?

ஜெ.சரவணன்

Published:Updated:
இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச்  சமாளிப்பாரா?
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச் சமாளிப்பாரா?
இன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச்  சமாளிப்பாரா?

ன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எழுந்த சிலபல சர்ச்சைக்குப்பின் அந்த நிறுவனத்தின்  துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ரவி வெங்கடேசன். யார் இவர்?

53 வயதான ரவி வெங்கடேசன், மென்பொருள் நிறுவனங்களின் நிர்வாக வட்டாரத்துக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் 2011 ஏப்ரல் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பதவி வகித்திருக்கிறார். அதுமட்டுமின்றி,  இதற்குமுன் மைக்ரோசாஃப்ட் இந்தியப் பிரிவின் தலைவராகச் செயலாற்றியிருக்கிறார். மேலும்,  இந்தியாவின் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் தலைவ ராகவும் பதவி வகித்திருக்கிறார். சோஷியல் வென்சர் பார்ட்னர்ஸ் இந்தியா என்ற லாப நோக்கமில்லாத நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இன்ஃபோசிஸ் போன்ற ஒரு நிறுவனத்துக்கு துணைத் தலைவராக ஆவதற்குத் தேவையான முதல் தகுதி இன்றைய டிஜிட்டல் யுகத்தையும், நாளைய மாற்றங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதுதான். அந்தவகையில் மைக்ரோ சாஃப்ட் மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவில் பணியாற்றிய அனுபவங்கள் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பல்வேறு அம்சங்களையும் தெரிந்துவைத்திருக்கும் ஒருவரைத்தான், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு அதன் இயக்குநர்கள் குழுத் தேர்வு செய்திருக்கிறது.

இன்ஃபோசிஸ் சிஇஓ விஷால் சிக்காவும் இயக்குநர் குழுவின் தேர்வை வரவேற்றிருக்கிறார். நிறுவனத்தின் தலைவர் சேஷசாயியும் இதனை வரவேற்றிருப்பதோடு, இனி அவர் தனக்குப் பல விதங்களிலும் உறுதுணையாக இருப்பார் என்று நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இருக்கும் அதிருப்தியை நீக்குவதற்கு இதுபோன்ற மாற்றங்கள் அவசியம் என்பதை உணர முடிகிறது. மேலும், நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நெகட்டிவாக இருப்பதுடன், வருவாயும் குறைந்து வருகிறது. ட்ரம்பின்     ஹெச் 1பி விசா, ஆட்டோமேஷன், போட்டி நிறுவனங்கள் ஆகிய சவால்களும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உள்ளன. இந்த சவால்களைச் சமாளித்து, நிறுவனத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டுசெல்வதற்கான திட்டங்களை வகுப்பதில் அவருடைய பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சேஷசாயி, சிக்கா மற்றும் ரவி வெங்கடேசன் இணையும் புதிய கூட்டணி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று நம்பலாம்.