Published:Updated:

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!

சித்தார்த்தன் சுந்தரம்

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!

சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!

மெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டுப் போட்டியைப் பார்க்க எவ்வளவு கூட்டம் கூடுமோ, அந்த அளவுக்குக் கூடுகிறது வாரன் பஃபெட் நடத்தும் முதலீட்டாளர்கள் கூட்டத்துக்கு. வாரன் பஃபெட் நடத்தும் பெர்க்‌ஷையர் ஹாத்வே நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை ஆர்வலர்கள் என உலகம் முழுக்க பல ஆயிரம் பேர் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார்கள்.

வாரனின் சொந்த ஊரான ஒமாஹாவில் ஆண்டுதோறும் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நம்மூர் அரசியல்கட்சிகள் மாநாடு நடத்துகிற மாதிரி விரிவாகச் செய்கிறார்கள். மூன்று நாள்கள் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் எந்தெந்த ஹோட்டல் களில் தங்கலாம், சாப்பாடு வசதி எப்படி, ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் எனப் பக்காவாக பிளான் செய்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்து கிறார்கள் வாரனும் அவர் நண்பர் சார்லி முங்கரும்.   

இந்தக் கூட்டத்தின் ஹைலைட்டே, முதலீட்டாளர்கள், வாரன் மற்றும் சார்லியிடம் கேள்வி கேட்டுப் பதில் பெறுவதாகும். ‌கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் சொன்ன பதில்களும் இனி...

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!

முதலீட்டின் ‘ஸ்வீட் ஸ்பாட்’!

ஆடுகளத்தின் நடுவில் பந்தை `பிட்ச்’ செய்வது `ஸ்வீட் ஸ்பாட்’ (ஜெயிக்க வைக்கும் சாதுர்யமான முடிவு) என்று டெட் வில்லியம்ஸ் சொல்லியிருக்கிறார். முதலீடு செய்வதில் `ஸ்வீட் ஸ்பாட்’டை உருவாக்கும் காரணிகள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

வாரன்: ஐந்து முதல் இருபது வருடங்கள் நிலைத்திருக்கக்கூடிய தொழில்களையே நாங்கள் தேடுவோம்.  அந்தத் தொழிலுக்குத் தற்போதிருக்கும் சாதகம், இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்குமா, அந்தத் தொழிலை நடத்த நம்பிக்கையான மேலாளர் இருக்கிறாரா, அவர் பெர்க்‌ஷையர் கலாசாரத்துக்குப் பொருந்தியவரா, இல்லை பொருத்திக்கொள்ள விருப்பம் உள்ளவரா என்கிற கேள்விகளுக்குப்பிறகு அந்தத் தொழிலுக்கான விலை ஆகிய காரணிகளின் அடிப்படையில் முடிவெடுப்போம். தொழில் சிறப்பாக நடந்து ஆதாயம் வரும் என்றால், அதில் முதலீடு செய்வோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்கள் முதன்முதலாக வாங்கிய நிறுவனம் எனில், சீஸ் கேண்டீஸ் என்கிற மிகச் சிறிய நிறுவனம்தான். 1972-ல் இந்த நிறுவனத்தை வாங்கும்போது இன்னும் இந்த `கேண்டி’யை (மிட்டாய்) மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா, மற்ற `கேண்டி’களைவிட இதில் என்ன விசேஷம்,  இதை மற்றவர்களுக்கு விரும்பித் தருவார்களா என எங்களுக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம். இந்த நிறுவனத்தை 25 மில்லியன் டாலர் ரொக்கமாகக் கொடுத்து வாங்கினோம். அந்த நேரத்தில் அந்த நிறுவனம் வரி கட்டுவதற்கு முன்பாக 4 மில்லியன் டாலர் வருமானம் சம்பாதித்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த நிறுவனத்தின் மூலம் நாங்கள் சம்பாதித்தது சுமார் 2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,300 கோடி). இது மாதிரியான ஒரு பெரிய நிறுவனத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சார்லி: மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகச் சில மோசமான நிறுவனங்களை வாங்கினோம். சரி செய்யமுடியாத நிறுவனத்தை எப்படிச் சரி செய்வது என்கிற அனுபவத்தை  அவற்றிலிருந்து கற்றுக் கொண்டோம். அது மாதிரியான நிறுவனங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் தெரிந்துகொண்டோம். ஆரம்ப காலத்தில் நாங்கள் செய்த முட்டாள்தனமான முடிவுகள், பின்னாளில் எங்களுக்கு உதவியது.

‘சீஸ் கேண்டீஸ்’ தந்த அனுபவம்!

உங்கள் தொழில் மற்றும் வணிக நடவடிக்கை களில் உங்களுக்கு விருப்பமானது எது?

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!


சார்லி: எங்களுக்குச் சிறந்த படிப்பினையைக் கொடுத்தது சீஸ் கேண்டீஸாக இருக்கலாம். மூலதனமின்றி,  முடிவற்ற பணத்தைத் தருவதுதான் ஒரு `பிராண்ட்’டின் சக்தி. நாங்கள் இந்த நிறுவனத்தை வாங்காமல்விட்டிருந்தால்,     கோகோ-கோலாவை வாங்கியிருப்போமா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. வாழ்க்கையைச் சீராக வாழ்வது என்பது தொடர்ந்து கற்றுக் கொள்வதுதான். பெர்க்‌ஷையர் அதனுடைய முதலீட்டு முடிவுகளை பல ஆண்டுகள் படிப்பினைகளில் இருந்துதான் அதிகமாகக் கற்றுக்கொண்டது. நாம் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டால், உயிரோடு வேண்டுமானால் இருப்போம். ஆனால், இந்த இடத்தில் (வெற்றி பெற்ற முதலீட்டாளராக) இருக்க மாட்டோம்.

வாரன்: 1966-ம் ஆண்டு பால்டிமோரில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரை வாங்கினோம். எந்தவித ஆதரவும், முன்னேற்றமும் அடையாத பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றை ஆரம்பிப்பது குறித்த முடிவு எடுக்கும் அனுபவம் போல வேறெதுவும் இல்லை. அப்படி ஆரம்பிக்க வில்லையெனில், உங்களது போட்டியாளர் அங்கே சென்று கடையை ஆரம்பித்து விடுவார். எனவே, நீங்கள் முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். ஒரு கடை இருப்பதையே நியாயப்படுத்த முடியாத நிலையில் இரண்டு கடைகள். இந்த மாதிரியான வணிக விளையாட்டுகளை முயற்சி செய்வது மூலம்தான் விளையாட முடியும். `எதைத் தவிர்க்கலாம்’ என்பதை இதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். மோசமான வணிகத்திலிருந்து நீங்கள் வெளியே வந்துவிட்டால் அதுவே ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும். நாங்கள் இவை அனைத்தையும் முயற்சிசெய்து பார்த்தவர்கள்.

அல்ஃபபெட்டும் ஃபேஸ்புக்கும்!

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!கேள்வி: பெர்க்‌ஷையர் கணிசமான அளவுக்கு `கேஷ் ஃப்ளோ’வை உருவாக்குகிறது. மூலதனம் அதிகமில்லாத வணிகங்களில் தொடர்ந்து நீங்கள் ‌முதலீடு செய்வது பங்குதாரர்களுக்கு நல்லதா?

வாரன்: மிகவும் குறைந்த மூலதனம்கொண்ட வணிகங்கள்தான் வளர்ச்சி அடையும். சந்தை மூலதனத்தைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவின் ஐந்து பெரும் நிறுவனங்களாக இருப்பவை ஆப்பிள், அல்ஃபபெட், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக். இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 2.5 ட்ரில்லியன் டாலர்.

ஆண்ட்ரூ கார்னிஜ் ஸ்டீல் மில் தொடங்கி, பணக்காரரானது அல்லது ராக்ஃபெல்லர் ரிஃபைனரியை உருவாக்கி டாங்குகளை வாங்கியதெல்லாம் வேறோர் உலகம். உலகம் உண்மையிலேயே மாறிவிட்டது. மூலதனத்தின் மீது அசாதாரணமான வருமானம் தரக்கூடிய சில நிறுவனங்களும் எங்களிடம் இருக்கிறது. ஆனால், அவை வளர்ச்சி அடையா விட்டாலும் அதை நாங்கள் இன்னும் நேசிக்கிறோம்.

சார்லி:
ஒரு காலத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும் நிறுவனங்கள் பிரமாதமாக இருந்தன. டூபாண்ட் அதனுடைய வருமானத்தைப்போல, 20 மடங்குக்கு விற்கப்பட்டது. ஆனால், இப்போது பெரும்பாலான வேதியியல் பொருள்கள் கமாடிட்டி ஆகிவிட்டதால், பெரிய ரசாயனப் பொருள்கள் உற்பத்தியாளராக இருப்பது மிகவும் சிரமம். அதேநேரத்தில், ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மிகவும் சிறப்பான இடத்தை அடைந்திருக்கின்றன. உலகம் அதிகமாகவே மாறிவிட்டது. சரியான முடிவெடுத்து, பாரம்பர்யத் தொழில்களை விடுத்துப் புதிய தொழில்களில் நுழைந்தவர்கள் எல்லாம் சிறப்பாகச் செயல் படுகிறார்கள்.

அமேசானைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்! 

கேள்வி: நீங்கள் ஜெஃப் பெஜோசைப் புகழ்பவர். அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் அமேசானில் முதலீடு செய்யவில்லை?

வாரன்: என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாத ஒரு மூடனாக நான் இருந்து விட்டேன். ஜெஃப் இந்த அளவுக்கு வெற்றி பெறுவார் அல்லது அமேசான் வெப் சர்வீஸில் அல்லது க்ளவுடில் ஏதாவது செய்வதற்கான சாத்தியம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. அவர் தனது ரீடெயில் செயல்பாட்டைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் போதே அவர் தொழில்நுட்பத் துறையிலும் ‘இடைமறிக்கும்படி’ (Disruption) ஏற்படும்படி எதையாவது செய்வார் என நான் நினைக்கவில்லை. அவரிடமிருந்த செயல்பாட்டுத் திறமையை நான் குறைத்து மதிப்பீடு செய்து விட்டேன்.

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!

1997-ம் ஆண்டில் அவர் வெளியிட்ட ஆண்டறிக்கையில் அவர் `செயல்திட்டத்தை’க் குறிப்பிட்டிருந்தார். அவர் அதைத் துல்லியமாகச் செய்திருக்கிறார். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு, சார்லி அவரிடம் நடத்திய நேர்காணலை நான் பார்த்து, அதிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். அந்த நிறுவனப் பங்கு எப்போதும் விலை அதிகமாகவே இருக்கிறது. அவர் இன்றைக்கு அடைந்திருக்கக்கூடிய நிலையை நான் 3, 5, 8 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்கவில்லை. சார்லி, இதை எப்படி நீங்கள் `தவற’விட்டீர்கள்?

சார்லி: அமேசான் சாதனைகளை `தவற’விட்டது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த விஷயத்தில் நாங்கள் கொஞ்சம் ‘உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம்’ என்றே நினைக்கிறேன்.

இனி எவ்வளவு லாபம் தருவீர்கள்?‌

கேள்வி: பெர்க்‌ஷையரின் உள்ளார்ந்த கூட்டு மதிப்பு எதிர்காலத்தில் எவ்வளவாக இருக்கும்?

வாரன்:
உள்ளார்ந்த மதிப்பைக் கடந்த காலத்தைக் கொண்டுதான் மதிப்பிட முடியும். ஆனால், உண்மையான வரையறை என்னவெனில், இன்றைக்கும் முடிவு செய்யப்பட்ட நாளுக்கும் இடையே உருவாக்கப்படும் பண மதிப்பிலிருந்து அன்றைக்கு இருக்கக்கூடிய வட்டி விகிதத்தைத் தள்ளுபடி செய்தபின் இருக்கக்கூடிய மதிப்பு ஆகும். இது 30 அல்லது 40 ஆண்டு காலகட்டத்தில் மிகவும் மாறுபடும். நீங்கள் கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், 2007-ல் நடந்த பொருளாதாரச் சரிவைக் கணக்கில் எடுக்காமல் இருக்க முடியாது. அன்றிலிருந்து இன்று வரை உள்ளார்ந்த கூட்டு மதிப்பு 10 சதவிகிதமாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும். அதை சாதிப்பதே மிகவும் கடினம்.

பஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா!


இப்போது குறைவான வட்டி விகிதமே இருப்பதால், இதைச் சாதிப்பதே இயலாத காரியமாகிவிடும். இந்த நிலையில் 10 சதவிகித வருமானத்தைப் பெறுவதுகூட கடினம்தான். 

சார்லி: எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வருமான விகிதம் முன்பு இருந்ததுபோல சிறப்பாக இருக்காது. என்றாலும் எஸ் அண்ட் பி 500 சரா சரியைவிட அதிகமாக இருக்கும். எனவே, பங்கு தாரர்களுக்கு எந்தவொரு மோசமான பிரச்னையும் இருக்காது.

வாரன்: எஸ் அண்ட் பி 500-யைவிட பங்கினைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். தனிநபர் ஒருவர் முதலாளியாக இருந்து முடிவெடுப்பது போன்ற கலாசாரத்தை பெர்க்‌ஷையர் நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்தச் சுதந்திரம் வேறு எந்த நிறுவனத்திலும் இல்லை. ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வைச் சந்திக்கும்போது, `இந்த நிறுவனத்தின் சொந்தக்காரராக நீங்கள் இருந்தால் வித்தியாசமாக என்ன செய்வீர்கள்?’ என்று கேட்பேன். அவர்கள் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என ஏதாவது ஒன்றைச் சொல்வார்கள். ஆனால், அவர்கள் எங்களைக் கேட்டால், அதற்கான பதில்... `எல்லாப் பங்குகளும் எங்களுக்கு உரியதாக இருந்தால் எப்படிச் செயல்படுவோமோ, அப்படித்தான் இப்போது செயல்படுகிறோம்’. 

சார்லி: நம்மிடம் இன்னொரு சாதகமான விஷயமும் இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் புத்திசாலித்தனமாக யோசிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அறிவார்ந்த ரீதியில் யோசிக்க முயற்சி செய்கிறோம்.

கேள்வி: இன்றிலிருந்து நூறாண்டுகளுக்குப் பிறகு நீங்களும், சார்லியும் எப்படி அறியப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

சார்லி: நான் வாரனை இதுகுறித்துக் கேட்டேன். அவருடைய இறுதிச்சடங்கில் என்ன சொல்ல வேண்டுமென்று அவர் நினைக்கிறார் எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘நான் பார்த்ததிலேயே வயதான பிணம் இதுதான்’ என எல்லோரும் சொல்ல வேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.

வாரன்: நான் சொன்னதிலேயே ஸ்மார்ட்டஸ்ட் விஷயம் அதுவாகத்தான் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் எளிது. எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் பிடிக்கும். என் வாழ்க்கை முழுவதும் முறைசார்ந்தோ அல்லது முறைசாராமலோ அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

நீங்கள் கற்பனை செய்து பார்க்கக்கூடிய அளவுக்குச் சிறந்த ஆசிரியர்கள் எனக்குள் இருக்கிறார்கள். நான் பாடம் சொல்லிக் கொடுப்பது நன்றாக இருக்கிறது என யாராவது நினைத்தால் நான் அது குறித்து மகிழ்ச்சி அடைவேன்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism