Published:Updated:

விமானப் பயணம்... உங்கள் உரிமை!

விமானப் பயணம்... உங்கள் உரிமை!
பிரீமியம் ஸ்டோரி
விமானப் பயணம்... உங்கள் உரிமை!

ஜெ.சரவணன்

விமானப் பயணம்... உங்கள் உரிமை!

ஜெ.சரவணன்

Published:Updated:
விமானப் பயணம்... உங்கள் உரிமை!
பிரீமியம் ஸ்டோரி
விமானப் பயணம்... உங்கள் உரிமை!

வ்வளவுதான் இந்தியா நவீனமாகிக் கொண்டிருந்தாலும் விமானப் பயணம் என்பது இன்னமும் வளர்ச்சியடையாமல்தான் இருக்கிறது. பயணம் செய்ய மறுக்கப்படுதல், விமானங்கள் தாமதமாதல் மற்றும் ரத்து செய்யப்படுதல் ஆகியவை முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. 

டி.ஜி.சி.ஏ (Directorate General of Civil Aviation) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 5.12 லட்சம் பயணிகள், பயணம் செய்ய விமானத்துக்குள்  மறுக்கப்படுதல், விமானங்கள் தாமதமாதல் மற்றும் விமானப் பயணம் ரத்துசெய்யப்படுதல் உள்ளிட்ட சிக்கல்களை அனுபவித்திருக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் பயணி களுக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தியதற்காக விமான நிறுவனங்கள், அந்த நான்கு மாத காலத்தில் பயணிகளுக்கு 22 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கியிருக்கின்றன.

விமான நிறுவனங்கள் காலி இருக்கை களோடு விமானங்களை இயக்கும் நிலையைத் தவிர்ப்பதற்காக, இருக்கை அளவைத் தாண்டி, கூடுதலாகப் பயணிகள் இருக்கைகளை புக் செய்யும் வகையில்தான் செயல்பட்டு வருகின்றன. இருக்கை இல்லாததால்  பயணிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால், அவர்கள் மனஉளைச்சலுக்கும் அசெளகர்யத்துக்கும் ஆளாகின்றனர். மேலும், இயற்கைச் சீற்றங்கள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக விமானம் தாமதமாகவும், ரத்துசெய்யப்படவும் வாய்ப்புள்ளது. இனிவரும் காலம், மழைக்காலம் என்பதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாகும் பயணிகள், தங் களுடைய உரிமைகளையும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் தெரிந்துவைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அவற்றை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

விமானப் பயணம்... உங்கள் உரிமை!

உரிமைகளும் வழிமுறைகளும்

1. உங்களை விமானத்தில் அனுமதிக்காத பட்சத்தில் உங்களுக்கு அதற்கான நஷ்டஈட்டைப் பெறும் உரிமை உண்டு. ஆனால், அதற்கு நீங்கள் தகுதியானவரா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுடன் குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் விமான நிலையத்துக்கு  வந்திருக்க வேண்டும். மேலும், விமானத்தில் பயணம் செய்யத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் முறையாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் நஷ்டஈடு பெறத் தகுதியானவராவீர்.

2. அனுமதி மறுக்கப்பட்ட உங்களுடைய விமானப் பயண நேரத்திலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் வேறொரு விமானத்தில் நீங்கள் பயணம் செய்யும்வகையில் விமான நிறுவனம் ஏற்பாடு செய்தால், நஷ்டஈடு் வழங்க வேண்டியதில்லை. அப்படி ஏற்பாடு செய்யாத பட்சத்தில் நஷ்டஈடு கோரலாம்.

3. விமான நிறுவனம் பயணிகளுக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவோ பணத்தைத் திரும்பத் தரலாம் அல்லது பயணி விருப்பப்பட்டால் டிராவல் வவுச்சர்கள் தரலாம்.

4. விமானம் குறிப்பிட்டுள்ள நேரத்தைக் காட்டிலும் தாமதமானால் அதற்கான நஷ்டஈட்டைக் கொடுக்கவோ அல்லது காத்திருக்கும்வரை தேவையான வசதிகளைப் பயணிகளுக்குச் செய்துகொடுக்கவோ விமானச் சேவை நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். 24 மணி நேரம் தாமதமானால் பயணிகளுக்கு உணவு, தேநீர், ஸ்நாக்ஸ் போன்றவை தரப்பட வேண்டும். 24 மணி நேரத்தையும் தாண்டினால் பயணிகளுக்குத் தங்குமிடமும் தரப்பட வேண்டும்.

5. விமானம் ரத்துசெய்யப்பட்டால், குறைந்தபட்சம் புறப்படும் நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே தெரியப்படுத்த வேண்டும். பயணிகளின் விருப்பத்துக்கேற்ப ரீஃபண்ட் அல்லது மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஆனால், விமான நிறுவனம் முன்கூட்டியே தெரிவிக்கத் தவறினால், டி.ஜி.சி.ஏ விதிமுறைகளின்படி டிக்கெட் விலையோடு சேர்த்து நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும். ஆனால், டிக்கெட் புக் செய்யும்போது தேவையான அனைத்து விவரங்களையும் முழுமையாகத் தரத் தவறிய பயணிகளுக்கு எந்த நஷ்டஈடும் வழங்கப்பட மாட்டாது.

6.  விமானம்  தாமதம் அல்லது ரத்து செய்யப்படும்பட்சத்தில் பயணி அவசரமாகப் பயணிக்க வேண்டியிருந்தால், வேறு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்து தருமாறு கேட்க உரிமை உண்டு. அந்தவகையில் ஆகும் கூடுதல் செலவுகளைக் குறிப்பிட்ட விமான நிறுவனம்தான் ஏற்க வேண்டும்.

7.
மோசமான வானிலை, அரசியல் கலவரங்கள், இயற்கைச் சீற்றங்கள் அல்லது ஊழியர்கள் விவகாரங்கள் போன்ற காரணங்களால் விமானம் தாமதமானாலோ ரத்து செய்யப்பட்டாலோ நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கட்டாயமில்லை. அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள `ஏர் சேவா’ என்ற குறைதீர்ப்பு சேவையைப்  பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். விமானப் பயணம் சார்ந்த உங்களுடைய எந்தக் குறைகளையும் அதில் நீங்கள் தெரிவிக்கலாம். ரீஃபண்ட் செய்யும் வழிமுறைகள் மிக நேரடியானவை.

விமானத்தில் பயணம் செய்யத் தயாராகும் நீங்கள், இவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!