Published:Updated:

மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?
மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

கேள்வி பதில்

பிரீமியம் ஸ்டோரி
மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

மழைக்கால பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறும் விதமாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங் களுக்கு பாலிசி உள்ளதா?

மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?



முருகன், திருவாரூர்

கேசவன், டிவிஷனல் மேலாளர், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், சென்னை

``இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மழைக் கால பாதிப்புகளுக்கு எனத் தனியாக பாலிசி எதுவும் கிடையாது. பாலிசிதாரர் ஓன் டேமேஜ் (own damage) பாலிசி எடுத்திருந்தாலே, மழைக்கால பாதிப்புகளுக்கும் இழப்பீடு பெற முடியும். இது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த பாலிசியானது மழைக் காலத்தில் மட்டுமல்ல; எந்தச் சமயத்தில் மழை வந்தாலும் பொருந்தும். ஆனால், பாலிசிதாரர் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவைப்பது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. பாலிசிதாரர், அவசியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒருவேளை பாலிசிதாரரின் வாகனம் மழையால் பாதிப்படைந்திருந்தால், அதை போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தி க்ளெய்ம் பெறலாம்.”

புதுமணத் தம்பதியான நாங்கள், மகப்பேறு (டெலிவரி செலவுகள்) உள்ளடங்கிய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியுமா?

மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

கதிரவன், சென்னை

எஸ்.ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

``மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான கவரேஜ், பிரத்தியேக பாலிசிகளில் மட்டுமே கிடைக்கும். மேலும், மகப்பேறு கவரேஜுக்காகக் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். மூன்று வருடங்கள் கழித்துக் கருவுற்றாலே, மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைக்கான முதல் நாளிலிருந்து கவரேஜ் கிடைக்கும். இந்த பாலிசி, அப்போலோ முனீச் - ஈஸி ஹெல்த் மற்றும் ஸ்டார் ஹெல்த் - காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளன.”

என் மனைவியின் பெயரில் உள்ள வீட்டு மனையை விற்பனை செய்வதன்மூலம் என்னுடைய வீட்டுக் கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த மனை 2007-ம் ஆண்டில் வாங்கப்பட்டது. வீட்டுக் கடன், வீட்டு மனையின் மதிப்புக்குச் சமமாக உள்ளது. என் மனைவியின் பெயரில் இருக்கும் மனையை விற்பதன்மூலம் வரும் லாபத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?

ரவிச்சந்திரன், துறையூர்

எஸ்.பிரபு, ஆடிட்டர்

மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?



``ஒருவர், மூன்று ஆண்டு களுக்கு முன்பு வாங்கிய வீட்டை இப்போது விற்பதால் கிடைக்கும் லாபத்துக்கு, `நீண்ட கால மூலதன ஆதாயம்’ என்று பெயர். ஆகையால், உங்களுடைய மனைவி பெயரில் இருக்கும் வீட்டுமனையை விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தில் 20 சதவிகிதத்தை, நீண்ட கால மூலதன ஆதாய வரியாகச் செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்கள் பெயரில் உள்ள வீட்டுக் கடனைச் செலுத்திக்கொள்ளலாம்.”
 
தனியார் வங்கி ஒன்று, நான் கேட்காமலேயே எனக்கு கிரெடிட் கார்டு கொடுத்தது. அந்த கார்டை நான் பயன்படுத்தவில்லை. அந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியதாகவும், அதற்கான பராமரிப்புக் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்றும் இப்போது பில் வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் செய்தால், `முதலில் பில் கட்டிவிட்டு, கிரெடிட் கார்டைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் பெயர் சிபிலில் இடம்பெறும்’ என்கிறார்கள். நான் என்ன செய்வது?

மழைக்கால பாதிப்பு... வாகனங்களுக்கு பாலிசி எடுக்க முடியுமா?

கே.விஜயலட்சுமி, சென்னை

த.ஜீவா, வழக்குரைஞர்

``வங்கியில் கிரெடிட் கார்டு சம்பந்தமாக உங்களிடம் கேட்ட உடனே, நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பீர்கள்; படிவத்தில் கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். வங்கியில் விண்ணப்பிக்காமல் கிரெடிட் கார்டை வழங்க மாட்டார்கள். உங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த விருப்பம் இல்லையெனில், எப்போது உங்களுடைய கையில் கிரெடிட் கார்டு கிடைத்ததோ, அப்போதே நீங்கள் அதை `வேண்டாம்’ எனச் சொல்லி, கடிதம் எழுதி வங்கியில் திரும்பக் கொடுத்திருக்கலாம். ஆனால், கிரெடிட் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், பராமரிப்புக் கட்டணம் செலுத்தியே தீர வேண்டும். எனினும், இறுதியாக வங்கி மேலாளரிடம் சென்று, `இதுவரை நான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியதில்லை; என்னால் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. எனக்கு கிரெடிட் கார்டு வேண்டாம்’ என எழுதித் தந்து முறையிடலாம்.”

-சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com. 

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு