பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

துறை வாரியாக ஜூன் 2017 காலாண்டு முடிவுகள்

இந்தியப் பங்குச் சந்தையில், வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக அதிக நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருப்பது உற்பத்தித் துறையில்தான். உற்பத்தித் துறையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 1,321 நிறுவனங்களில் 366 நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் ஆகஸ்ட் 18 வரை வெளியாகி இருக்கின்றன. இதன்படி பார்த்தால், உற்பத்தித் துறை இறக்கத்தில் இருப்பதாகவே தெரிகிறது.  அதேபோல், ரீடெயில் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் மொத்த விற்பனை 51%, மொத்த லாபம்  77 %.   

காலாண்டு முடிவுகள்

 நிதி நிலை விவரங்கள்

மொத்தமுள்ள 4,248 நிறுவனங்களில் 2,701 நிறுவனங்கள் ஆகஸ்ட் 18 வரை நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் விற்பனை 10.4% அதிகரித்துள்ள நிலையில், நிகர லாபம் 15.4 % குறைந்துள்ளன. தேய்மானம் 8.1 %, கடனுக்கான வட்டி 6 % அதிகரித்ததால்தான் நிகர லாபம் குறைந்திருப்பதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மீதமுள்ள 1,547 நிறுவனங்களின் முடிவுகளும் வெளியானால் இந்த நிலை சற்றே மாறலாம் என எதிர்பார்க்கலாம்.  

காலாண்டு முடிவுகள்

கலைச் சொற்கள்!

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை சரியாகப் புரிந்துகொள்ள இங்கே முக்கிய கலைச் சொற்களுக்கான பொருளைத் தந்திருக்கிறோம்.

புத்தக மதிப்பு! (Book Value)

ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகைக் கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

முக மதிப்பு! (Face Value)

ஒரு பங்கின் முக மதிப்பு என்பது, பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்த முக மதிப்பு 1, 2, 5, 10 ரூபாய் என்பதுபோல் இருக்கும்.

இ.பி.எஸ்.! (Earnings per share)


ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபமே இ.பி.எஸ். எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் (காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்பதுபோல்) ஒரு பங்கின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

செயல்பாட்டு லாப வரம்பு! (Operating Profit Margin)

நிறுவனம் வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப்பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபம் செயல்பாட்டு லாபம். இந்த லாபம் விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

பி/பி.வி.! (Price to Book Value)


நிறுவனப் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. இந்த விகிதம் குறைவாக இருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்!

(Market Capitalization)


ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். ஒரு கம்பெனி எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.

பி/இ விகிதம்! (Price to Earnings Ratio)


ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- சி.சரவணன்.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

தொகுப்பு: மு.சா.கௌதமன், ஜெ.சரவணன், சோ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு