உலகளவில் 40 வயதுக்கு உட்பட்ட செல்வாக்குமிக்க 40 நபர்களின் பட்டியலை பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் இடம்பெற்றிருக்கும் இந்த 40 பேர் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தொழில்ரீதியாக அவரவர் துறையில் இளம் வயதிலேயே மிகப் பெரிய உயரத்தைத் தொட்ட சாதனையாளர்களாக அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஃபார்ச்சூன் அண்டர் 40 பட்டியலில் நான்கு இடங்களைப் பிடித்துள்ள இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் பற்றி இங்கே...

1. லியோ வராத்கர்

அயர்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார் 38 வயதாகும் லியோ வராத்கர். ஃபார்ச்சூன் பத்திரிகையின் செல்வாக்கு மிக்க மனிதர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார் இவர். ‘இந்த நூற்றாண்டில் அயர்லாந்தின் மிகச் சிறந்த பிரதமர்’ என பார்ச்சூனால் அடையாளப்படுத்தப் படுகிறார் வராத்கர். இவரது தந்தை அசோக், மும்பையைச் சேர்ந்த மருத்துவர். அயர்லாந்தில் பணியாற்றி வந்த அசோக், அந்த நாட்டிலேயே திருமணம் செய்துகொண்டவர்.

டப்லின் நகரின் டிரினிட்டி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து முடித்த வராத்கர், பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதே அயர்லாந்தில் நடந்த ஒரு உள்ளூர் தேர்தலில் பங்கேற்றதன் மூலம் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு அயர்லாந்து பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர், 2011-ம் ஆண்டு அயர்லாந்தின் மருத்துவத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, இன்று அந்த நாட்டின் தலைசிறந்த பிரதமராகத் திகழ்கிறார். உலகின் மிகச் சிறந்த இளம் தலைவர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் வராத்கர்.

2. திவ்யா நாக்

26 வயதாகும் இளம் பெண் திவ்யா நாக், பார்சூனின் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் 27-வது இடத்தைப் பிடித்துள்ளார். தனது 23-ம் வயதில் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியில் சேர்ந்த திவ்யா, உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவந்தபோது தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். கல்லூரிப் படிப்பை முடிக்காதவர் என்கிற தயக்கம் எதுவும் இல்லாமல், ‘ஸ்டெம் செல்’ குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள தனியே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் தொடர்பான மொபைல் ஆப் ஒன்றை உருவாக்க வழிவகுக்கும் திட்ட செயல் அதிகாரியாகப் பதவி வகித்து வருகிறார். ‘ஒவ்வொரு மனிதனும் தன் உடல்நலத்தைத் தன் பொறுப்பிலேயே ஏற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்’ என்பதையே தன் லட்சியமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார் திவ்யா நாக்.

3. ரிஷி ஷா மற்றும் ஷ்ரத்தா அகர்வால்

அமெரிக்காவில் வாழும் 31 வயதான ரிஷி ஷா மற்றும் 32 வயதான ஷ்ரத்தா அகர்வால் ஆகிய இருவரும் பார்ச்சூனின் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் 38-ம் இடத்தைப் பிடித்துள்ளனர். ’அவுட்கம்’ எனப்படும் ஆரோக்கியத்துக்கான நிறுவனத்தை ஷ்ரத்தா அகர்வாலுடன் இணைந்து கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ரிஷி ஷா. இவரும் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே சொந்தமாகத் தொழில் தொடங்க அடித்தளமிட்ட ரிஷி ஷா, இன்று பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்.

தன் ஒன்பதாவது வயதிலேயே தொழிலதிபரானவர் ஷ்ரத்தா கபூர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து பல அங்கீகாரங்களைப் பெற்ற ஷ்ரத்தா, தற்போது அதே ‘அவுட்கம்’ நிறுவனத்தின் இணை நிறுவனராகப் பதவி வகித்து வருகிறார். உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் ஷ்ரத்தா கபூர், தன் நிறுவனத்தின் வருமானத்தை பில்லியன் டாலரில் நிர்மாணித்திருக்கும் சிறந்த தொழிலதிபராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

4. லீலா ஜனா

31 வயதான லீலா ஜனா, உலகின் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாடுகளான கென்யா, உகாண்டா போன்ற பல நாடுகளில் தனது ‘சமசோர்ஸ்’ என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிற்படுத்தப் பட்ட மக்களுக்குத் தொழில் நுட்பங்களைக் கற்றுத்தரும் விதமாகச் செயல்படுத்தி வருகிறார் லீலா.

அமெரிக்காவைத் தலைமை யிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம், இந்தியா விலும் செயல்பட்டு வருகிறது. உலக முழுக்க வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் லீலாவின் நிறுவனம் இந்த ஆண்டு ஈட்டிய வருமானம் 15 மில்லியன் டாலர்.

- ராகினி ஆத்ம வெண்டி