‘இந்திய ஐ.டி துறையின் செயல்பாட்டை இந்த நிறுவனத்தைக் கொண்டு கணிக்கலாம்’ எனப் பாராட்டும் அளவுக்கு உச்சத்திலிருந்த நிறுவனம் இன்ஃபோசிஸ். ஆனால் இன்று சிக்கல்களும், சர்ச்சைகளும் அடிக்கடி எழுந்து, அதற்காகவே பேசப்படும் நிறுவனமாக மாறியிருப்பது கவலை தரும் விஷயமே. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சமீபத்திய சிக்கல், அதன் சி.இ.ஓ விஷால் சிக்காவின் ராஜினாமா. சிக்காவின் திடீர் ராஜினாமாவால், இன்ஃபோசிஸ் நிறுவனம் சிக்கலில் சிக்குமா, இந்தச் சிக்கலுக்கு யார் காரணம், இந்தச் சிக்கலிலிருந்து இன்ஃபோசிஸ் எப்படி வெளியே வரப் போகிறது என்கிற கேள்விகள் முக்கியமானவை.

ராஜினாமா ஏன்?

கடந்த 2014-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் விஷால் சிக்கா. 2020-ல் 20 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.120 லட்சம் கோடிக்கு மேல்) என்கிற இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, வேகமாக சென்றுகொண்டிருந்தார் விஷால் சிக்கா. அப்படிப்பட்டவர் திடீரென ராஜினாமா செய்ததற்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது, நாராயண மூர்த்தியின் மின்னஞ்சல்தான். ‘‘விஷால் சிக்கா தலைமை தொழில்நுட்ப அதிகாரிக்குத் (Chief Technology Officer) தகுதியானவரே தவிர, தலைமை செயல் அதிகாரிக்கு தகுதியானவர் (Chief Executive Officer) அல்ல’’ என்று நாராயண மூர்த்தியிடம் சிலர் குறிப்பிட்டிருந்ததாக அந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டிருந்தது.

மேலும், அந்த மின்னஞ்சலில் சில தவறான புள்ளிவிவரங்கள், ஏற்கெனவே பொய் என நிரூபிக்கப்பட்ட வதந்திகள் போன்றவையும் இருந்தன. தனிப்பட்ட முறையில் வெகுசிலரே பார்க்கக்கூடிய வகையில் இந்த மின்னஞ்சல் இருந்திருந்தால்கூட, விஷால் சிக்கா கோபமடைந்திருக்கமாட்டார். ஆனால், இந்த மின்னஞ்சல் இணையத்தில் கசிந்ததுதான் சிக்காவை கோபமடையச் செய்தது. ‘இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அலுவல் தொடர்பான வேலைகளைச் செய்வதைவிட, நாராயண மூர்த்தி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே பொழுது போய்விடுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முக்கியமான சீர்திருத்தங்களை செய்து, அதன் சாதக, பாதகங்களை ஆராயும் இந்தச் சமயத்தில், ஒவ்வொரு நாளும் புதிய பிரச்னைகளோடு துவங்குவதில் விருப்பமில்லை’ என்று நொந்துபோன மனதுடன் தனது ராஜினாமாக் கடிதத்தை மிக நீளமாக எழுதி, அதை இன்ஃபோசிஸ் நிர்வாகத்துக்கு அனுப்பியதுடன், தன்னுடைய வலைப்பக்கத்திலும் வெளியிட்டார் சிக்கா.

தொடரும் சிக்கல்

இன்ஃபோசிஸ் நிர்வாகத்துக்கும் அதன் சி.இ.ஓ-க்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது புதிதல்ல.

2011-ல் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், அவரது சி.இ.ஓ பதவிக் காலத்தை நிறைவு செய்தபின், பல ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த சிபுலால் சி.இ.ஓ-வாகப் பதவியேற்றார். சிபுலால் சி.இ.ஓ-வாக இருந்த மூன்று ஆண்டுகளிலும் இன்ஃபோசிஸில் பல சிக்கல்கள் எழுந்தன. பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறியது இன்ஃபோசிஸ். இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்தது. சிபுலால்மீது அதிருப்தி அதிகரிக்கவே, நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்த மீண்டும் களமிறங்கினார் நாராயண மூர்த்தி. அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிற நிலையில், விஷால் சிக்காவை நாராயண மூர்த்திதான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக்கினார்.

சிக்காவின் செயல்பாடு சரியில்லையா?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ஆனபின், விஷால் சிக்காவின் செயல்பாடு சிறப்பாகவே இருந்திருக்கிறது. ஒரு சி.இ.ஓ-வாக தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்திருக்கிறார். நாராயண மூர்த்தியுமே, ‘விஷால் சிக்காவின் தனிப்பட்ட செயல்பாடுகளைக் குறை கூறவில்லை. நிறுவனத்தின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அவர் சரியாகப் பின்பற்றத் தவறுகிறார்’ என்றுதான் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். 2016-ல் மட்டும் 116 முறை விமானப் பயணம் செய்து, புதிய வாடிக்கை யாளர்களை நிறுவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இன்ஃபோசிஸுக்கான வருமானத்தில் 60% அமெரிக்காவிலிருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், சிக்காதான். நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் வெளியேறும் விகிதத்தைக் குறைத்தது மட்டுமின்றி, திறமையான பலரையும் நிறுவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். 2020-ம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர் வருமானம் என்பது மிகப் பெரிய இலக்காகவே இருந்தது. இந்த இலக்கினை எட்டும் முடிக்கும் முன்பே அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ‘பிரெக்ஸிட், ட்ரம்ப் அரசாங்கம் விசாவுக்குத் தடை விதித்தது போன்ற நேரங்களில் நிறுவனத்துக்குப் பாதிப்பின்றி, சூழலைக் கையாண்டது சிறந்த அனுபவமாக இருந்தது’ என அவரே தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இனி என்ன ஆகும்?

விஷால் சிக்கா மார்ச் 2018 வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக இருப்பார். அதற்குள் இன்ஃபோசிஸுக்குப் புதிய நிர்வாக மேலாளர் மற்றும் சி.இ.ஓ நியமிக்கப் படுவார். அதுவரை இடைக்கால சி.இ.ஓ-வாக யூ.பி.பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில், நிர்வாகக்குழுவில் உள்ள ஒருவரான கோஸ்வாமி, நாராயண மூர்த்திக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பிட்டுள்ள விஷயங்களைப் பார்த்தால், இன்ஃபோசிஸ் இயக்குநர்கள் குழு, நாராயண மூர்த்திமீது அதிருப்தியில் இருப்பதையே காட்டுகிறது. அந்தக் கடிதத்தில், ‘நீங்கள் 15 வருடங்களாக இந்த நிறுவனத்துகாக முக்கியப் பங்காற்றி இருக்கிறீர்கள். ஆனால், விஷால் சிக்காவின் ராஜினாமாவுக்கு நீங்கள் தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும். அதனால் நமக்கு அதிக இழப்புதான் ஏற்பட்டுள்ளது’ என வெளிப்படையாகத் தெரிவித்ததுடன், அவர் இயக்குநர் குழுவிலிருந்த 15 ஆண்டுகளில் இன்ஃபோசிஸில் நிலவிய குறைகளையும் அடுக்கியுள்ளது. இதன் ஒட்டுமொத்த தாக்குதலும் நாராயண மூர்த்தியைச் சுற்றியே உள்ளது.

இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழில் உலகமே நாராயண மூர்த்திக்கு எதிராகவே உள்ளது. நிறுவனம் இனியும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், நிறுவனத்துக்குப் பாதிப்பு வராத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நாராயண மூத்தியோ, ‘‘நான் பணமோ, பதவியோ கேட்கவில்லை. எனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குற்றச்சாட்டுகளுக்குச் சரியான நேரத்தில் பதிலளிப்பேன்’’ என்று பதில் சொன்னார். இது தொடர்பாக முதலீட்டாளர்கள் நாராயண மூர்த்தியிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக கடந்த புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லி உள்பட பல்வேறு இடங்களிலிலிருந்து வந்த ‘பிரஷர்கள்’ இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐ.டி சாம்ராஜ்யமாக இருந்தாலும், நிர்வாகத்துக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்யாவிட்டால், இன்ஃபோசிஸ் நிறுவனம் மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

-ச.ஸ்ரீராம்

இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கலாமா?

ஸ்ரீராம், இன்கவர்னன்ஸ்

விஷால் சிக்கா பதவி விலகியதையடுத்து, பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அந்தப் பங்கின் விலை 10 சதவிகிதத்துக்கு மேல் குறைந்துள்ளது. முதலீட்டாளர் பணம் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு இழந்துள்ளது.

இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழு அந்த நிறுவனத்தின் பங்குகளை தற்போதைய விலையிலிருந்து சுமார் 25% அதிக விலை கொடுத்து திரும்ப வாங்கும் (Buyback) முடிவினை அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்தபின்பும் பங்கின் விலை குறைவது நிற்கவில்லை.

இனியும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்கிற கேள்வியை இன்கவர்னஸ் நிறுவனத்தின் ஸ்ரீராமிடம் கேட்டோம்.

‘‘விஷால் சிக்கா ராஜினாமா செய்ததற்கும், இன்போசிஸ் நிறுவனம் பங்குகளைத் திரும்ப வாங்கும் அறிவிப்பை வெளியிட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த அறிவிப்பை ஏப்ரல் முதலே வெளியிடும் எண்ணத்தில்தான் இருந்தனர். ஆனால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்ததற்குக் காரணம், சிக்காவின் ராஜினாமா மட்டுமல்ல; நாராயண மூர்த்தி மீது இயக்குநர் குழு உறுப்பினர்களுக்கு உள்ள அதிருப்தியும்தான். இப்போது நடக்கும் சர்ச்சைகளைப் பார்த்து, நிறுவனத்தின் பணியாளர்கள் வேலை செய்யும் மனநிலை, முதலீட்டாளர்கள் விருப்பம் ஆகியவற்றில் சிறு தொய்வு காணப்படுகிறது. இந்த நிறுவனத்துக்குள் இருக்கும் இந்தக் கருத்து வேறுபாடு தொடரும் வரை இந்த நிறுவனப் பங்குகளில் பெரிய ஏற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இன்ஃபோசிஸ் பங்குகளைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் சிறிது காலம் பொறுத்திருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முடிவை எடுப்பது சிறந்தது’’ என்றார் அவர்.