.பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலகம், இன்ஷூரன்ஸ், கமாடிட்டி போன்றவற்றில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் சில விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அதை லாபகரமாகச் செய்வதற்கு உதவும். முதன் முறையாக முதலீடு செய்ய ஆரம்பிக்கும் பலர் பங்கின் விலை, மியூச்சுவல் ஃபண்ட் என்.ஏ.வி. மதிப்பு போன்றவற்றை எங்கே போய் தெரிந்து கொள்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவவே இந்த இன்வெஸ்ட்மென்ட் கைடு!.
பி.எஸ்.இ., என்.எஸ்.இ.

இந்தியாவை பொறுத்தவரை பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ.), நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்.எஸ்.இ.) இரண்டும்தான் பெரிய பங்குச் சந்தைகள். வர்த்தகமாகும் எல்லா பங்குகளின் விலை நிலவரத்தையும் அறிந்து கொள்ள இந்த எக்ஸ்சேஞ்சுகளின் இணையதளத்தை நாடலாம்.

பி.எஸ்.இ. இணையதளத்தின் முகவரி:

http://www.bseindia.com

என்.எஸ்.இ. இணையதளத்தின் முகவரி:

http://www.nseindia.com

நாம் வாங்கக்கூடிய பல பங்குகள் இரு சந்தைகளிலும் வர்த்தகமாகும். சில பங்குகள் பி.எஸ்.இ. அல்லது என்.எஸ்.இ. என ஏதாவது ஒரு சந்தையில் மட்டும் வர்த்தகம் ஆகும்.

இந்த இணையதளங்களில் அதிகம் விலை உயர்ந்த பங்குகள், அதிகம் விலை வீழ்ச்சி கண்ட பங்குகள், அதிகம் வர்த்தகமான பங்குகள், 52 வார அதிகபட்ச/குறைந்தபட்ச விலை, பங்குகள் மற்றும் இண்டெக்ஸ்களின் கடந்த கால விலை நிலவரம், பங்குகள் மற்றும் இண்டெக்ஸ்களின் சார்ட்கள், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் போன்ற எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

செபி (Securities and Exchange Board of India)

இந்திய பங்குச் சந்தையை நெறிப்படுத்து வதற்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் செபி. பங்குச் சந்தை, பங்கு தரகர்களுடன் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இடையே ஏற்படும் சிக்கலைத் தீர்த்து வைக்கும் அமைப்பு இது. இதன் இணையதள முகவரி:

http://www.sebi.gov.in/sebiweb.

செபியின் இணையதளத்தில் இந்திய பங்குச் சந்தையில் எஃப்.ஐ.ஐ-க்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவை மேற்கொண்டு வரும் முதலீட்டு விவரங்களை பார்க்க முடியும். மேலும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான பல பயனுள்ள விழிப்புணர்வு விஷயங்களும் நிரவி கிடக்கின்றன.

ஃபண்ட் நிறுவனங்கள்

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்தில் அந்த நிறுவனங்கள் நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் என்.ஏ.வி. மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். தவிர, அந்த நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட், போனஸ் யூனிட்கள் வழங்கிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் இணையதளங்களில் நம்முடைய முதலீட்டின் மதிப்பை ஃபோலியோ எண் மற்றும் பான் எண் மூலம் அறிந்து கொள்ளும் வசதி வந்திருக்கிறது.

ஆம்ஃபி அமைப்பு

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அமைப்பாக இருப்பது இந்த ஆம்ஃபி அமைப்பு. இதன் இணையதள முகவரி

http://www.amfiindia.com.

இதில் ஃபண்டுகளின் தற்போதைய மற்றும் முந்தைய என்.ஏ.வி. மதிப்பு, பிரிவு வாரியாக மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் ஃபண்டுகளின் விவரம் போன்ற பல பயனுள்ள விவரங்கள் பரவிக் கிடக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்வதற்கான ஆம்ஃபி அனுமதித்துள்ள ஏஜென்டுகள் மற்றும் விநியோகஸ்தர்களின் பெயர் பட்டியலையும் இதில் பார்க்க முடியும்.

கேம்ஸ் (CAMS)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு முதலீடு குறித்த அடிப்படை விஷயங்களை அளிக்கும் அமைப்புதான் கேம்ஸ் http://www.camsonline.com இதன் இணையதளத்தில் ஃபண்டுகளின் என்.ஏ.வி. மதிப்பு மற்றும் முதலீட்டு அறிக்கை விவரங்களை (ஃபோலியோ எண், பின் (றிமிழி) எண் இருந்தால்..!) அறிந்து கொள்ள முடியும். இந்தியாவிலுள்ள 60% மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீட்டு விவரங்களை கேம்ஸ்தான் நிர்வகித்து வருகிறது. இதில் பதிவு செய்து கொண்டால் இ-மெயில் மூலம் என்.ஏ.வி. மற்றும் முதலீட்டு விவரங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

செபி ((Securities and Exchange Board of India)!

பங்குச் சந்தையோடு மியூச்சுவல் ஃபண்ட் துறையையும் இந்த அமைப்புதான் நெறிப்படுத்துகிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஏஜென்டுகள் இடையே ஏற்படும் பிரச்னைக்கு இறுதித் தீர்ப்பு அளிக்கும் அமைப்பு இதுதான்.

இன்றைய தேதியில் வங்கி என்பது கிட்டத்தட்ட அனைத்து முதலீடுகளின் கூடாரமாக இருக்கிறது. வங்கிகள் டெபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி, கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி போன்றவற்றை அந்தந்த வங்கிகளின் இணையதளங்களில் அறிந்துக் கொள்ள முடியும். மேலும், நேரில் சென்றும் கேட்டு அறிந்துக் கொள்ள முடியும்.

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் உள்ள எல்லா வங்கிகளையும் கட்டுப்படுத்தும் மத்திய வங்கிதான் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா. முக்கிய வட்டி விகிதங்கள், டெபாசிட் விகிதங்கள், அரசு கடன் பத்திரங்களுக்கு வருமானம், டாலர், யூரோ போன்ற கரன்சிகளுக்கு இணையான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவற்றை பாரத ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும்.

இது தவிர, வங்கிகள் வழங்கிய தொழிற்கடன், உணவுத் துறைக்கு வழங்கப்பட்ட கடன், வீட்டுக் கடன் போன்ற விவரங்களை ஆர்.பி.ஐ. வெளியிட்டு வருகிறது. இதன் இணையதள முகவரி: http://www.rbi.org.in

வங்கித் தீர்ப்பாயம் (Ombudsman)

வங்கிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்னையை தீர்த்து வைக்க ஓம்புட்ஸ்மேன் என்கிற தீர்ப்பாயம் இருக்கிறது. வங்கி தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் எந்த பிரச்னையையும் இந்த தீர்ப்பாயத்திற்குக் கொண்டு சென்று நியாயம் பெறலாம். இதன் இணையதள முகவரி: ஷ்ஷ்ஷ்.க்ஷீதீவீ.ஷீக்ஷீரீ.வீஸீ/sநீக்ஷீவீஜீts/தீsஸ்வீமீஷ்நீஷீஸீtமீஸீt.ணீsஜீஜ்?மிபீ=164

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தங்கள் குறைகளை எழுதி அனுப்பலாம்.

எஸ். கணேஷ்,
மே/பா ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா,
கோட்டை சரிவு, சென்னை -1
தொலைபேசி எண்: 044-25399170/ 25395964/25399158.

தபால் அலுவலகம்

இந்தியாவிலுள்ள தபால் அலுவலகங்களில் கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் மேற்கொண்ட மொத்த முதலீடு 2,74,720 கோடி ரூபாய். டிசம்பர் முதல் தேதியிலிருந்து தபால் அலுவலக முதலீட்டுக்கான வட்டி கூடுவது சந்தோஷமான விஷயம். தபால் அலுவலகச் சேமிப்புக்கு அளிக்கப்படும் வட்டி விவரம், போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் போன்றவற்றின் விவரங்களை இந்திய அஞ்சல் துறையின் இணையதளத்தில் பார்க்கலாம். இணையதள முகவரி: www.indiapost.gov.in

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அந்த பாலிசிக்கான பிரிமீயம், நிபந்தனைகள் உள்பட அனைத்து விவரங்களையும் அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதேபோல் யூலிப் பாலிசிகளின் என்.ஏ.வி. மதிப்பையும் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, எல்.ஐ.சி. நிறுவனம் அளிக்கும் பாலிசிகள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள: www.licindia.in

ஐ.ஆர்.டி.ஏ.

இந்திய இன்ஷூரன்ஸ் துறை குறித்த பல விஷயங்கள் ஐ.ஆர்.டி.ஏ. என்கிற காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக, ஒரு நிறுவனத்தில் பாலிசி எடுக்கும் முன் அது பாலிசிதாரர்களுக்கு எந்த அளவுக்கு கிளைம் அளித்திருக்கிறது என்கிற விவரத்தை இந்த இணையதளத்திலுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஏஜென்டுகள் மீதான புகார்கள் அல்லது கிளைம் தொடர்பான பிரச்னைகளுக்கு முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் புகார் கொடுக்க வேண்டும். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், இறுதியாக ஐ.ஆர்.டி.ஏ. அமைப்பை நாடலாம். இதன் இணையதள முகவரி www.irda.gov.in

இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயங்கள்

இன்ஷூரன்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு தனியாக இன்ஷூரன்ஸ் தீர்ப்பாயம் இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முகவரி:

இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன்,
ஃபாத்திமா அக்தார் கோர்ட் 4வது தளம்,
453/312 அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18
தொலைபேசி: 04424333668/5284
இ-மெயில்: insombud@md4.vsnl.net.in

இந்தியாவில் கமாடிட்டி வர்த்தகம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தங்கம், வெள்ளி போன்ற நமக்கு பிடித்த கமாடிட்டிகளோடு குரூட் ஆயில், தாமிரம், இயற்கை எரி வாயு போன்ற வற்றிலும் நம்மவர்கள் தற்போது அதிகமாக டிரேட் செய்து வருகிறார்கள்.

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை நிலவரத்தை அறிந்து கொள்ள இந்த இணையதளத்தை பார்க்கலாம்: http://www.kitco.com

காப்பர், அலுமினியம், நிக்கல், காரீயம், யுரேனியம் போன்றவற்றின் விலை நிலவரங்களை அறிந்து கொள்ள: http://www.kitcometals.com

எம்.சி.எக்ஸ். (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா)

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் முன்னணி எக்ஸ்சேஞ்ச் இது. தங்கம், வெள்ளி தொடங்கி பல்வேறு கமாடிட்டிகளின் விலை, மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொள்ள: http://www.mcxindia.com

இதேபோல, என்.சி.டி.இ.எக்ஸ். (http://www.ncdex.com/), என்.எம்.சி.இ. (http://www.nmce.com/), சி.எம்.இ குரூப் (http://www.cmegroup.com/), இந்தியன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (http://www.icexindia.com/) போன்ற வற்றின் இணையதளங்களிலும் கமாடிட்டி வர்த்தக விவரங்களை காணலாம்..!

தொகுப்பு: சி.சரவணன்