Published:Updated:

ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா?

கேள்வி-பதில்

ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா?

திருமணமாகிவிட்ட மகள்கள் ஒப்புதலுடன், எனது பூர்வீகச் சொத்தை மகனுக்கு எழுதி கொடுத்து விட்டேன். அந்த பத்திரத்தில் எல்லோருமே கையெழுத்தும் போட்டுள்ளோம். இந்த சொத்தின் மீது பிற்காலத்தில் வேறு வாரிசுகள் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?

கே.ரவிச்சந்திரன், அரியலூர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்.ரமேஷ், வழக்கறிஞர்.

##~##
''பரம்பரை சொத்து என்று சொல்லியிருக்கிறீர் கள். பரம்பரை சொத்து எனும்போது நீங்களும், உங்கள் மகனும், மகள்களும் சேர்ந்து அதற்கு பாகஸ்தர்கள் ஆகிறீர்கள். அந்த சொத்தில் தங்களுக்கு மட்டும் தனிப்பட்ட உரிமை எதுவும் இல்லை. எனவே, அந்த சொத்தை தாங்கள் தங்கள் மகனுக்கு எழுதி கொடுக்க முடியாது. நீங்கள் உங்கள் மகன், மகள்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தி இருக்கும் ஆவணத்தைப் பாகப்பிரிவினை ஆவணமாகக் கருதி அதன் மூலம் தங்கள் மகனுக்குச் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டதாகக் எடுத்துக் கொள்ளலாம். மற்ற பாகஸ்தர்கள் தங்கள் பாகத்தைக் கோராமல் உங்களது மகனுக்கு விட்டுகொடுத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம். அதனடிப்படையில் வேறு எவரும் அந்த சொத்தில் பிற்காலத்தில் உரிமை கோர முடியாது.''
ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா?

கிசான் விகாஸ் பத்திரம் தொலைந்துவிட்டால் அதன் முதிர்வு தொகையினை வாங்குவது எப்படி?

சி.தரணிகுமார், சேலம்.

அனிதா பட், நிதி ஆலோசகர்.

''முதலில் தொலைந்து போன பத்திரத்தின் நகலை வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். முதலீடு செய்யும்போது உங்களுக்கு உதவிய முகவரின் உதவியோடு அல்லது அந்த பத்திரத்தின் பதிவு எண்ணைக் கொடுத்தால் தபால் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பப் படிவம் கொடுப்பார்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்தால் பத்திரத்தின் நகல் கிடைத்துவிடும். பத்திரம் குறித்த எந்தத் தகவலும் உங்களிடம் இல்லையென்றால் நிலைமையை விளக்கி தபால் துறை அதிகாரிக்கு கடிதம் எழுதுங்கள். அவர்கள் சரி செய்து கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு குறைந்தது 6 மாதங்களாவது ஆகலாம். தபால் துறையும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், இனி வருங்காலங்களில் இது போன்ற வேலைகள் எளிதாகலாம்.''

ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா?

மாதம் 5,000 வீதம் 5 வருடங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். எந்த மாதிரியான ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.?

அழகேசன், ஈரோடு.  

சுவாமிநாதன், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்ஸ்.

''உங்களது வயதைப் பொறுத்துதான் முதலீட்டு ஆலோசனைகள் சொல்வது சரியாக இருக்கும். என்றாலும், 5,000 ரூபாயையும் ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல் டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளில் ஏதேனும் ஒன்றில் 1,500 ரூபாயும், டெட் ஃபண்டுகளில் ஏதேனும் ஒன்றில் 3,500 ரூபாயுமாகப் பிரித்து முதலீடு செய்வது நல்லது. அதிக ரிஸ்க் எடுக்க தயாரானவர் என்றால் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டுக் காலம் ஐந்து வருடங்கள் என்பதால் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது. சிறப்பாகச் செயல்படும் ஃபண்டுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது அவசியம்!''    

ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா?

ஒரு பொதுத்துறை வங்கியில் தங்க நகையை அடகு வைத்தபோது உரிய ரசீதுகள் தராமல் சேவைக் கட்டணம் மற்றும் மதிப்பீட்டு கட்டணம் எடுத்துக் கொண்டனர். இது சரியா? இதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

கே.ரங்கராஜன், திப்பிராஜபுரம்.

ஜெ.ஃபிராங்ளின், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

''நடவடிக்கை எடுக்க முடியும். உங்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள சேவைக் கட்டணம் மற்றும் மதிப்பீட்டு கட்டணங்களுக்கு உரிய ரசீது கொடுக்கவில்லை என சம்பந்தப்பட்ட வங்கிக்கு முதலில் பதிவு தபால் மூலம் கடிதம் அனுப்புங்கள். அதற்கு பிறகும் உங்களுக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் மூலம் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.''

ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்ய முடியுமா?

சுந்தரபாண்டியன், தஞ்சாவூர்.

ரஜீஸ், கரன்சி முதலீட்டு ஆலோசகர், எம்.சி.எக்ஸ்.

''இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் கரன்சி வர்த்தகம் செய்ய முடியும். ஆன்லைன் மூலமாகவும் கரன்சி வர்த்தகம் செய்யலாம். ஏற்கெனவே பங்கு சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்பவர் என்றால் உங்களது புரோக்கிங் நிறுவனம் மூலமாக கரன்சி வர்த்தக கணக்கைத் தொடங்கி செய்யலாம். நீங்கள் பங்குச் சந்தைக்கு புதியவர் எனில், புரோக்கிங் அலுவலகத்தில் கே.ஒய்.சி. படிவம் கொடுத்து டிரேடிங் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். ஃபியூச்சர் அண்ட் ஆப்ஷனில் உள்ள  நடைமுறைதான் கரன்சி வர்த்தகத்துக்கும் பொருந்தும்.''

ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாமா?

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் லைஃப் டைம் சூப்பர் பென்ஷன் திட்டத்தில் ஜனவரி 2009 முதல் மாதம் ரூபாய் 1,000 முதலீடு செய்து வருகிறேன். பாலிசி காலம் 10 ஆண்டுகள். தற்போது நான் செலுத்திய தொகையைவிட குறைவான மதிப்புதான் இருக்கிறது. தொடர்ந்து இதில் முதலீடு செய்யலாமா? அல்லது 2018 முதிர்வு தேதி வரை தொடரலாமா?

எஸ்.கரண், பட்டுக்கோட்டை.

கே.ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

!''சந்தையின் ஏற்ற இறக்கத்துகேற்பதான் யூலிப்களின் மதிப்பும் இருக்கும். யூனிட்டின் மதிப்பு குறைவாக இருக்கிறது என்னும் பட்சத்தில் அதை சரண்டர் செய்துவிட்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 2010-ம் ஆண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ள பாலிசி என்பதால் மூன்றாவது வருடத்தில் சரண்டர் செய்ய முடியும்.

ஆனால், யூனிட் மதிப்பில் 96% தொகைதான் கிடைக்கும். பத்து  ஆண்டுகளில் யூலிப் பாலிசி மூலம் கிடைக்கும் தொகையைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அதிக ரிட்டர்ன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறந்த டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வது நல்லது.''

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்.