Published:Updated:

பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!
பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

பிரச்னை என்று வந்துவிட்டால் மனிதர்களை மட்டுமல்ல, பிராண்டுகளைக்கூட மக்கள் ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதைச் சமீபத்தில் நேரடியாக உணர்ந்தேன். பொதுவாக மும்பை போனால் கிங் ஃபிஷர் விமானத்தில் ஏறி நல்லபிள்ளையாக பெங்களூருக்கு வந்துவிடுவேன். ஆனால், அன்றைக்குப் பெங்களூருக்குப் பதிலாக சென்னைக்கு செல்லத் திட்டம் போட்டிருந்தேன். திட்டப்படி எனக்கான டிக்கெட்டை எல்லாம் வாங்கித் தந்துவிட்டனர் எனது அலுவலக ஊழியர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

மும்பையில் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, அதிகாலை ஒரு டாக்ஸியைப் பிடித்து, அரக்கபரக்க ஏர்போர்ட்டிற்கு வந்து, விமானத்தில் ஏறி உட்கார்ந்தால், வழக்கமாக நான் பார்த்த கூட்டம் இல்லை. என்னாச்சு என எனக்குள்ளேயே எழுந்த பல கேள்விகளுக்குப் பதில், பேப்பரை புரட்டிப் பார்த்தபோது புரிந்து கொண்டேன்.

ஆனாலும், விமானப் பணியாளர்கள் மனதில் எந்த கலவரமும் இல்லை. அவர்கள் வழக்கமானப் பயணிகளுக்கு எப்படி பணிவிடை செய்வார்களோ, அதே மாதிரி அன்றைக்கும் சிரித்தபடி இருந்தார்கள். விமானத்தைவிட்டு இறங்கும்முன், அன்றைய பயணம் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்யும் படிவத்தில் இப்படி எழுதினேன். ''கமான் கிங் ஃபிஷர். இந்த தொழிலை விட்டுப் போய்விடாதீர்கள். உங்கள் கடன் பிரச்னையைத் தீர்க்க என்னால் முடியாது. ஆனால், நான் உங்கள் விமானத்தில் பயணம் செய்யக் காத்திருக்கிறேன்'' என்று எழுதியதோடு, எனக்கு நல்லபடியாக பணிவிடை செய்த விமான ஊழியரின் பெயரையும் குறிப்பிட்டு நான்கு வார்த்தைகளைப் பாராட்டுதலாக எழுதி இருந்தேன்.  

நான் எழுதிக் கொடுத்ததை கிங் ஃபிஷர் நிறுவன அதிகாரிகள் படித்தார்களோ இல்லையோ தெரியாது. ஆனால், விமானச் சேவைக்கு சம்பந்தமில்லாத பிரச்னைகளால் மாட்டியிருக்கும் ஒரு நிறுவனத்தின் பிராண்டை மட்டும் என்னால் வெறுக்க முடியவில்லை. கிங் ஃபிஷர் மட்டுமல்ல, எல்லா பிராண்ட் நிறுவனங்கள் மீதும் எனக்கு எல்லையில்லாத காதல்தான்!

பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

டாடாவின் நானோ கார் அறிமுகமாவதற்கு முன்பு அந்த காரை நினைத்து பெருமைப்பட்ட பல கோடி இந்தியர்களில் நானும் ஒருவன். அந்த காரை வாங்குகிற மாதிரி எந்த ஐடியாவும் எனக்கு இல்லை என்றாலும், பல லட்சம் இந்தியர்கள் இந்த காரை வாங்கி ஓட்டுவார்களே என்கிற எண்ணம்தான் அந்த காரை பற்றி நான் அடிக்கடி பேசக் காரணம்.

##~##
ஆனால், இந்த கார் அறிமுகமான சில மாதங்களுக்குள்ளேயே பேச்சு வேறு மாதிரியாக திரும்பியது. சில நானோ கார்கள் திடீரென தீப்பிடித்துக் கொள்ள, அதுநாள் வரை அந்த காரை பற்றி பாசிட்டிவ் செய்திகளை மட்டுமே போட்டு வந்த மீடியாக்கள் திடீரென எதிர்பாட்டு பாட ஆரம்பித்தன. அந்த நெகட்டிவ் செய்திகளால் நான் பாதிப்படையவில்லை என்றாலும், நானும் நானோ கார் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தேன். நானோ கார் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற பட்டிமன்றத்திற்கு நான் தயாரில்லை. ஆனால், அது மிகப் பெரிய வெற்றி இல்லை என்று மட்டும் சொல்வேன்.

டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதுமே தோல்வியைத் தழுவுவதில்லை. அப்படி இருக்கும்போது நானோ மட்டும் இதிலிருந்து எப்படி தப்பியது? யோசித்துப் பார்த்ததில் ஒரு சின்ன விஷயம் விளங்கியது.

ஒரு பொருள் தயாராகி வெளிவருவதற்கு முன்பு ஓவராக அதுபற்றிய ஒரு எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கிவிடக் கூடாது. அப்படி உருவாக்கினால் அந்த எதிர்பார்ப்பை கட்டாயம் நிறைவேற்றி ஆகவேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராண்டை தூக்கி நிறுத்த நீங்கள் படாதபாடுபட வேண்டியிருக்கும்.

வி.ஐ.பி. சூட்கேஸ் என்றவுடன் உங்களுக்குள் எத்தனை ஞாபகங்கள் ஓடி வருகிறது என்பதை உணருகிறீர்களா? முதல் முதலாக ஊருக்கு வேலை தேடிப் புறப்படுகிறபோது ஒரு வி.ஐ.பி. வாங்கி, அதில் உங்கள் பேன்ட், சட்டைகளை அடுக்கிக் கொடுத்த உங்கள் அம்மாவும் அப்பாவும் ஞாபகத்திற்கு வருவார்களே! கல்யாணமாகிச் செல்லும் மகளின் சேலைகளை வி.ஐ.பி. சூட்கேஸில் வைத்து மாப்பிள்ளையோடு அவளையும் அந்த சூட்கேஸையும் ரயிலேற்றி விட்டு, அந்த ரயில் கண்ணிலிருந்து மறையும் வரை டாட்டா காட்டிய ஞாபகம் வருகிறதா?

இப்படி பாசமும், கண்ணீரும் சேர்ந்து கலந்து உருவானவைதான் வி.ஐ.பி. பிராண்ட். இந்த பாசப் பிணைப்பு சொற்ப பிராண்டுகளே இருந்த அந்த காலத்தில் சரியான விஷயம்தான். ஆனால், இளைஞர் பட்டாளமாக இருக்கும் நமது இந்த தேசத்தில் பாசத்தையும் சோகத்தையும் வைத்து ஒரு பொருளை விற்க முடியுமா? எனவேதான் தன் பிராண்ட் இமேஜை சுத்தமாக மாற்றிவிட்டது. இன்றைக்கு வி.ஐ.பி. டிராவல்பேக்குக்களை தூக்கிச் செல்பவர்கள் இளைஞர்கள். அவர்களும் சாதாரண ஆட்கள் இல்லை, ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் பெரிய நிறுவனங்களின் அதிகாரிகள். இன்றைக்கு வி.ஐ.பி. தயாரிப்புகளைப் பார்த்தால் அந்த கால ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று பாடத் தேவையில்லை.

பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

ரு பிராண்ட்டை பற்றி அதை உருவாக்கிய நிறுவனத்திற்கு நன்றாகத் தெரியுமா அல்லது அதை பயன்படுத்துகிற மக்களுக்குத் தெரியுமா? என்ன கேள்வி இது, அதை உருவாக்கிய நிறுவனத்திற்குமேல் அந்த பிராண்ட் பற்றி வேறு யாருக்கும் தெரிய நியாயமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உள்ளபடி பார்த்தால் நிறுவனங்களைவிட அதை பயன்படுத்துகிற மக்கள் அந்த பிராண்டை பற்றி அற்புதமான விஷயங்களைச் சொல்லி விடுகிறார்கள்.

டவ் சோப் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் கொடியிடைப் பெண்கள்தான் மாடல்களாக வருவார்கள். இதனால் இளம்பெண்கள் இந்த சோப்பை நிறைய வாங்குவார்கள் என்பது இந்த நிறுவனத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இந்த விளம்பரத்தால் கடுப்பாகிப் போனார்கள் சில குண்டுப் பெண்கள். 'நாங்கள் குண்டுப் பெண்கள். நாங்களும்தான் இதை பயன்படுத்துகிறோம்’ என்று பேசி அதை யூ-டியூப்-ல் போட்டுவிட்டார்கள். இதைப் பார்த்தபோது டவ் நிறுவனத்திற்குப் பளிச்சென ஒரு ஐடியா தோன்றியது. ஒல்லிக்குச்சி பெண்களுக்கு மட்டுமல்ல, குண்டுப் பெண்களும் டவ் சோப்பை பயன்படுத்துகிறார்கள் என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.

ஏறக்குறைய இதே பாணியில் செயல்பட்ட இன்னொரு நிறுவனத்தைச் சொல்ல வேண்டும் என்றால், லேஸ் ஸ்நாக்ஸை சொல்லலாம். இந்த நிறுவனம் புதிய சுவையுடன் ஒரு லேஸ் ஸ்நாக்ஸை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய லேஸ் பற்றி மக்களின் கருத்தை எழுதி அனுப்பும்படி சொன்னது. சற்றும் எதிர்பாராத விதமாக பத்து லட்சத் திற்கும் அதிகமான மக்கள் தங்கள் கருத்தைச் சொல்லி இருந்தார்கள். இதில் பெஸ்ட் ஆக இருக்கிற நான்கு பேரின் கருத்தை மட்டும் எடுத்துச் சொல்லி விளம்பரம் செய்ய, விளம்பரமும் சக்ஸஸ், லேஸும் சக்ஸஸ்.

பிராண்ட்! - காலத்திற்கேற்ப மாறணும்!

என்.காமகோடி சி.இ.ஓ., சிட்டி யூனியன் பேங்க்

ங்குச் சந்தை, பொருளாதாரம் பற்றி தமிழில் வெளிவரும் ஒரே பத்திரிகை நாணயம் விகடன் தான். எதிர்காலத்தில் நாணயம் விகடனின் சேவை வாசகர்களுக்கு இன்னும் அதிகமாகவே தேவைப்படும்.

ந்தியா இளைஞர் தேசம் என்பதைச் சொல்லவே தேவையில்லை. 2015-ல் இந்திய இளைஞர்களின் சராசரி வயது முப்பது என்று ஏற்கெனவே கண்டுபிடித்து விட்டார்கள். விளைவு, எல்லா நிறுவனங்களும் இன்றைக்கு இளைஞர்களைக் குறி வைத்தே தன்னுடைய பிராண்ட்டை கொண்டு செல்ல நினைக்கிறது. உதாரணம், ஏர்டெல். இன்றைக்கு ஏர்டெல் விளம்பரங்களில் இளைஞர் பட்டாளத் தைத்தான் பார்க்க முடிகிறது. ஜாலியாக கலாட்டா பண்ணும் இளைஞர்கள் இன்றைக்கு ஏர்டெல் விளம்பரத்தின் கதாநாயகர்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இளைஞர்களை நம் கையில் வைத்துக் கொண்டால்தான் எதிர்காலத்தில் பிஸினஸில் கவலை இல்லாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான் என்று நினைக்கிறது ஏர்டெல். காலத்திற்கேற்ப மாறத் தெரிந்த கம்பெனிகளின் பிராண்டுகள் என்றைக்கும் பிஸினஸ் உலகில் இருக்கவே செய்யும்.