Published:Updated:

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!
இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

ந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பல நிறுவனங் களில் இன்று அடிக்கடி ஒலிக்கும் வார்த்தை இன்னோவேஷன். இப்போது பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் அந்த கஷ்டத்திலிருந்து மீண்டு வருவோம் என்று நினைக்கிறது என்றால், இன்னோவேஷன் என்கிற ஒரே ஒரு விஷயத்தை நம்பித்தான். 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் துவண்டுபோன பல நிறுவனங்கள், மீண்டும் துள்ளிக் குதித்து மேலே வந்ததற்கு காரணம் இன்னோவேஷன்தான்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னோவேஷன், இன்னோவேஷன் என்கிறீர்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

இன்னோவேஷன் என்பது ஒரு பொருளிலேயோ, யோசனையிலோ, வழிமுறையிலோ அல்லது செயல் பாட்டிலோ புதிதாக ஒன்றைச் சேர்த்து அல்லது சில மாற்றங்களைச் செய்து, அதற்கு மேலும் மதிப்பேற்படும்படி செய்வது. இதற்குச் சமீபத்திய உதாரணம், டாடாவின் 'நானோ’ கார். கார் என்பது காலங்காலமாகவே ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை சாமானியர்களும் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காக அதன் தயாரிப்பு முறையிலும், மூலப் பொருட்களிலும், வடிவமைப்பிலும் சிலபல மாறுதல்களைச் செய்ததின் மூலம் உருவாகி வந்ததுதான் 'நானோ’ கார்.

##~##
புதுமையான விஷயங்களைக் கண்டு பிடிப்பதில் இந்தியா என்றைக்குமே முன்னணி யில் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். கி.மு. 3300 முதல் கி.மு. 1300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இது மிகவும் வளர்ச்சி அடைந்திருந்தது. இன்றைக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் மொகஞ்சதாரோதான் நகரத் திட்டமிடலுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தது. சமூகக் கிணறுகளில் இருந்து  தண்ணீர் எடுப்பதும், குளிப்பதற்கென்று தனியறையை வடிவமைத்ததும், கழிவு நீர் சாக்கடையைச் சென்றடையுமாறு குழாய்கள் அமைத்திருந்ததும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்த இன்னோவேஷன்கள்.  

இது மட்டுமல்ல, 'பூஜ்யம்’ என்கிற எண்ணையும், தசம ஸ்தான எண்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்தியாதான். கி.பி.497-ல் நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர்களும், 2,000 ஆசிரியர்களும் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

பல ஆயிரம் ஆண்டுகளாகவே புதுமைகளை படைத்து வரும் இந்தியா 2011-ம் ஆண்டுக்குரிய 'குளோபல் இன்னோவேஷன் குறியீட்டு’ப் பட்டியலில் 62-வது இடத்தில் இருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. சுவிட்சர்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், ஹாங்காங், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளன. அமெரிக்கா 7-வது இடமும், ஆஸ்திரேலியா 21-வது இடமும், சீனா 29-வது இடமும் பிடித்துள்ளன. இந்த பட்டியலைப் பார்த்தால், இந்தியா புதுமை படைப்பதில் பின்தங்கிவிட்டதோ என்கிற சந்தேகம் நமக்கு வரும். அதெல்லாம் இல்லை. இந்தியா இன்றைக்கு உலகத்தின் மிக முக்கியமான இன்னோவேஷன் ஹப் என ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் லண்டன் ஸ்கூல் பிஸினஸில் பேராசிரியராக இருக்கும் நிர்மால்ய குமார். பானிஷ் புராணம் என்பவரோடு சேர்ந்து 'இந்தியா இன்சைட்’ என்று ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்தியா இன்னோவேஷன் துறையில் எப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அந்த புத்தகத்தில் புட்டுபுட்டு வைத்திருக்கிறார் நிர்மால்ய குமார். அந்த விஷயங்களின் தொகுப்பு இனி:

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

இந்தியாவினால் கண்ணிற்குத் தெரியும்படியான (visible) பொருட்களை, அதாவது ஆப்பிள் 'ஐபேட்’, சோனியின் 'வாக் மேன்’, மருத்துவ உலகை கலக்கிய 'வயாகரா’ போன்றவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்த முடியாமல் போனாலும், கண்ணிற்குத் தெரியாத (invisible) பலவிதமான 'அப்ளிகேஷன்’களையும், செயல் பாடுகளையும் உலகளவில் இந்தியா ஏற்றுமதி செய்துகொண்டுதான் இருக்கிறது.

இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற பெரும்பாலான நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் இந்தியாவின் 'சிலிகான் வாலி’ (silicon valley) என அறியப்படும் பெங்களூருவில் உள்ளன. உதாரணத்திற்கு 1985-ல் ஆரம்பிக்கப்பட்ட 'டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’, அதைத் தொடர்ந்து 'ஆஸ்ட்ரா ஷென்கா’ (மருத்துவம்), ஜி.இ., இன்டெல், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ, நோக்கியா, ஜெராக்ஸ், சிஸ்கோ என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் வேலை பார்க்கும் நம்மவர்கள்தான் இந்நிறுவனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் பலவிதமான புதுமைகளின் சூத்ரதாரிகள். ஆனால், நமக்கு அவை பற்றி ஒன்றும் தெரிவதில்லை.

உலகத்திலேயே மிகவும் பெரிய விமானம் என அறியப்படும் 'போயிங் 787 ட்ரீம்லைனர்’ விமானத்தில் பயன்படுத்தப்படும் ஆகாயத்தில் விமான மோதலை தடுக்கக்கூடியக் கருவியையும் (airborne collisions), பனி அதிகமாக இருக்கும் பட்சத்தில் விமானம் வழக்கம்போல தரையிறங்க உதவக்கூடிய சாதனத்தையும் (landings in zero visibilit) வடிவமைத்தது நமது பிசிலி என்ஜினீயர்கள்தான்.

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

அதுபோல, ஜீ.இ. நிறுவனத்தில் ஆறுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தொழில்நட்ப வல்லுநர்கள் பெங்களூருவில் உள்ள அதனுடைய 'ஆர்-டி’ மையத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 2008-ம் ஆண்டு இன்டெல் அறிமுகப்படுத்திய 'ஙீமீஷீஸீ 7400 sமீக்ஷீவீமீs’ 'சிப்’புகள் உருவான இடம் பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில். இதுபோல எத்தனையோ விஷயங்களை  சொல்லிக் கொண்டே போகலாம். ஆக, உலக நிறுவனங்கள் பலவற்றின் பொருட்கள் மற்றும் சேவைகள் நம்மவர்கள் வடிவமைத்த புதுமைகளுடன் வெளிவந்துதான் சந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.  

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

உலகத்தில் இன்று பொருளாதார ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சில நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முக்கியமான நாடுகளாகும். எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களை மனதில் கொண்டு, குறிப்பாக, 'பாட்டம் ஆஃப் தி பிரமிட்’ என அறியப்படும் பொருளாதாரத்தில் சுமாரான நிலையில் உள்ளவர்களை மையப்படுத்தி தங்களின் பொருட்களையும், சேவைகளையும் வடிவமைக்க தங்களது ஆர்-டி மையங்களை வளர்ந்து வரும் நாடுகள் சிலவற்றில் அமைத்துள்ளன.

நமது இதயத் துடிப்பை அறிய பயன்படுத்தப்படும் இ.சி.ஜி. கருவிகள் பல லட்சம் மதிப்பு கொண்டது. எனவே, ஒரு சில ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இந்த மாதிரியான நவீன கருவிகள் இருக்கும். ஆனால், நலிவடைந்த மற்றும் கிராமப்புற மக்களுக்கும் இந்த வசதி சென்றடைய வேண்டும் என்பதற்காக ஜீ.இ. நிறுவனத்தின் இந்திய ஆர்&டி மையம் 500 டாலர்கள் மதிப்பில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இ.சி.ஜி. கருவியைக் கண்டுபிடித்தனர். இது செயல்படத் தேவை ஒரு லாப்டாப், ஒரு பாட்டரி. இதை ஒரு தடவை 'சார்ஜ்’ செய்தால் கிட்டத்தட்ட 100 இ.சி.ஜி. பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முன்புபோல 2,000, 3,000 ரூபாய் செலவு செய்யத் தேவையில்லை; வெறும் 20 சென்ட், அதாவது 10 ரூபாய் போதுமானது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த குறைந்த விலையிலான கருவி முன்னேறிய நாடுகள் பலவற்றில் பிரபலம். இதுபோல சீமென்ஸ் (Siemens) நிறுவனம் கண்டுபிடித்த எக்ஸ்ரே மெஷின்.

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

சங்கர் நரேன், முதன்மை முதலீட்டு அதிகாரி, ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட்

''நிதி தொடர்பான விஷயங்களை தெரிந்துக் கொள்ள ஆங்கிலத்தில் அதிக புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றைவிட மேலாக நிதி விஷயங்களைத் தருவதில் நாணயம் விகடன் முன்னணியில் இருக்கிறது. பங்குச் சந்தையில் தமிழர்கள் கணிசமாக லாபம் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு நாணயம் விகடன்தான் காரணம்''

இந்த மாதிரியான புதுமைகள் ஐ.டி., கார் உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் மட்டும்தான் சாத்தியம் என நினைத்தால் அது தவறு. நெஸ்லே தனது 'மாகி’ நூடுல்ஸை சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிராமப் புறங்களில் கிட்டத்தட்ட ரூ.5க்கு அறிமுகப்படுத்தியது.

இந்தியா: இன்னோவேஷன் ஹப்!

இந்தியாவின் ஆர்&டி துறையில் வேலைக்கு சேருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்குக் கிட்டத் தட்ட 1,00,000-லிருந்து 3,00,000 வரை உயர்ந்து கொண்டு இருக்கிறது. இதுவே, சீனாவில் 9,25,000 ஆகவும், ரஷ்யாவில் 4,70,000 ஆகவும், கொரியாவில் 1,50,000 ஆகவும் இருந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வெளிவரும் தொழில் நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

அரசாங்கம் கல்வித் துறையில் அதிகக் கவனம் செலுத்தினால் இந்தியா கண்ணால் 'பார்க்க முடியாத’ புதுமைகள் மட்டுமல்லாமல், பார்க்கக்கூடிய புதுமைகளாக பல பொருட்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ரூ.3,000-க்கான ஆகாஷ் டேபிளட், கோத்ரெஜ் நிறுவனத்தின் 'சோட்டு கூல்’ எனக் குறைந்த விலையிலான பாட்டரியால் இயங்கும் ரெப்ரிஜிரேட்டர் (மின்தடை, சுற்றுப்புறச்சூழல், மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது).

'இந்தியா இன்சைட்’ புத்தகத்தில் இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகும்  நிர்மால்ய குமார் அடுத்து சீன நிறுவனங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப் போகிறாராம்.