Published:Updated:

கிஃப்ட் டாக்ஸ்: இனி தப்பிக்க முடியாது!

கிஃப்ட் டாக்ஸ்: இனி தப்பிக்க முடியாது!

கிஃப்ட் டாக்ஸ்: இனி தப்பிக்க முடியாது!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துநாள் வரை கிஃப்ட் டாக்ஸ் கட்டாமல் டபாய்த்து வந்தவர் களை கையும் களவுமாகப் பிடிக்க பலமான வலை விரிக்க ஆரம்பித்திருக்கிறது வருமான வரித் துறை.

பொதுவாக, ஒரு நிதி ஆண்டில் 50,000 ரூபாய்க்கு கீழே உங்களுக்கு கிஃப்ட் கிடைத்தால் வரி எதுவும் கட்டத் தேவையில்லை. ஆனால், ஒரு நிதி ஆண்டில் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு  கிஃப்ட் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 50,000 ரூபாய் வரை ஏற்கெனவே வரி கட்ட வேண்டியதில்லை. மீதியுள்ள 50,000 ரூபாய்க்கு மட்டும் வரி கட்டினால் போதுமா? என்று கேட்டால், அதுதான் இல்லை என்பதே பதில். அப்படியானால் ஒரு லட்ச ரூபாய்க்கும் வரி கட்ட வேண்டுமா என்று கேட்டால், ஆமாம் என்கிறது வருமான வரிச் சட்டம்.

அது மட்டுமல்ல, ஒரு பொருளை அதன் உண்மையான மதிப்பை விட மிகவும் குறைவான மதிப்புக்கு வாங்கினாலும் அது கிஃப்ட் ஆகவே கருதப்பட்டு, வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. எப்படி என்கிறீர்களா?

உதாரணமாக, தேய்மான மதிப்பின்படி ஒரு காரின் மதிப்பு 5 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதனை நீங்கள் 3 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கினால், பாக்கியுள்ள 2 லட்ச ரூபாய் உங்கள் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி கட்ட வேண்டும். அதே காரை 4.6 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கினால் (வித்தியாசப்படும் தொகை 50,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பதால்) வரி எதுவும் கட்ட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

கிஃப்ட் டாக்ஸ்: இனி தப்பிக்க முடியாது!

காரோ, தங்க, வைர நகைகளோ எனில் இந்த அடிப்படையில்தான் வரி கட்ட வேண்டும். ஆனால், ஒருவர் ஒரு வீட்டை மிக குறைந்த விலையில் வாங்கியதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்று கேட்டால் இல்லை. ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை, அரசு வழிகாட்டி மதிப்புக்கும் வாங்கிய விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகை (50,000க்கு மேல்) பரிசாக எடுத்துக் கொள்ளப்பட்டு  வரி கட்ட வேண்டியிருக்கும்.

அதாவது, அன்பளிப்பாக தரப்படும் இடத்தின் மதிப்பு ஒருவரின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரி வரம்புக்கு (10-30%) உட்பட்டு வரிக் கட்ட வேண்டும். தவிர, அன்பளிப்பாக கிடைக்கும் இடத்தின் மூலம் வருமானம் கிடைத்தால் அதற்கும் வரி கட்ட வேண்டும். காரணம், வாடகையாக கிடைக்கும் வருமானம் உங்களின் இதர வருமானமாகவே கருதப்படும் என்பது முக்கியமான விஷயம்.  

அதே நேரத்தில், மைனராக இருக்கும் உங்கள் பிள்ளைக்கு ஏதாவது விலை மதிப்புள்ள கிஃப்ட் கிடைத்து அதன் மூலம் வருமானம் வந்தால், அது உங்களின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். உங்கள் மைனர் பிள்ளைகளுக்கு நீங்கள் வீடு/நிறுவனப் பங்குகள்/மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் போன்றவற்றைக் கொடுத்தால், அவை மூலம் கிடைக்கும் வருமானம் உங்களின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும்.

அதேநேரத்தில் நீங்கள் உங்களின் பெற்றோருக்கு கொடுக்கும் கிஃப்ட் மூலம் வருமானம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு வருமான ஆதாரம் எதுவும் இல்லை என்றால், இது அவர்களின் வருமானமாக கணக்கிடப்படும். அவர்கள் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப தேவைப்பட்டால் மட்டும் வரி கட்டினால் போதும்.

வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ.களுக்கு மனை, வீடு போன்ற சொத்தை அன்பளிப்பாக கொடுக்க முடியாது. ஆனால், குடியிருப்பு அல்லது வர்த்தக சொத்துகளை அன்பளிப்பாக கொடுக்கலாம்.

- சி.சரவணன்