Published:Updated:

கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?

கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?

கேள்வி பதில்

கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?

கேள்வி பதில்

Published:Updated:
கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?
கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?

சில நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் நான் முதலீடு செய்துள்ளேன். இது லாபகரமாக இருக்குமா? 

கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



சிவராஜ், கரூர்.

ப.ராமசுவாமி, தலைமை நிர்வாகி, ஈஸி இன்வெஸ்ட்மென்ட்.

``ஃபிக்ஸட் டெபாசிட் என்பது, ஒரு வகையான கடன் பத்திரம். நம்மில் பலர், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறோம் என்றால், அந்த வங்கிக்குக் கடன் கொடுத்திருக்கிறோம் என்றே பொருள். இதேபோல, பல நிறுவனங்களும் ஃபிக்ஸட் டெபாசிட் (கடன்) வாங்குவது உண்டு.

வங்கியாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி, ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுவதற்குமுன், வாங்கிய கடனைத் திருப்பித் தரும் தகுதியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முக்கியமாக, நிறுவன ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும்முன், அந்த நிறுவனம் லாபகர மாகச் செயல்படுகிறதா, அந்த நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள் நம்பிக்கையான வர்களா, எதற்காகக் கடன் வாங்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

மேலும், டெபாசிட் வாங்கும் நிறுவனத்தின் தரக் குறியீடு என்ன என்பதையும் அவசியம் பார்க்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் ஃபிக்ஸட் டெபாசிட் விண்ணப்பத்தில் அச்சிடப் பட்டிருக்கும்.

வட்டி விகிதம் குறைந்துவரும் இந்த வேளையில், அதிக வட்டி கிடைக்கிறதே என ஆசைப்பட்டு, அவசரப்பட்டு முதலீடு செய்யக்கூடாது.  தரமான, நம்பிக்கையான நிறுவனங்கள் கொடுக்கும் வட்டி சற்றே குறைவாக இருந்தாலும், முதலீடு செய்தபிறகு நாம் நிம்மதியாக இருக்கலாம்.

கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?

நான் மாதச் சம்பளம் வாங்குகிறவன். என் மனைவிதான் வீட்டைக் கவனித்துவருகிறார். என் வருமானத்திலிருந்து சேர்த்த ரூ.10 லட்சம் பணத்தை, அவரது பெயரில் வங்கி எஃப்.டி-யில்  டெபாசிட் செய்திருந்தேன். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு, யார் வருமான வரி செலுத்த வேண்டும்? 

மூர்த்தி, கடலூர்.


ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.

``உங்கள் மனைவியின் பெயரில் நீங்கள் முதலீடு செய்த நிரந்தர வைப்புத்தொகை (FD) மீதான வட்டி, உங்கள் வருமானத்துடன் இணைத்து வருமான வரியானது கணக்கிடப்படும். மாறாக, உங்கள் மனைவியின் பெயரிலுள்ள எஃப்.டி மூலம் பெறப்பட்ட வட்டியை மீண்டும் முதலீடு செய்து, அதில் வருமானம் ஈட்டியிருந்தால்,  அது உங்கள் வருமானத்துடன் இணைக்கப்படாது. அதற்கான வரியை அவர்தான் செலுத்த  வேண்டியிருக்கும்.’’

அவசரகால நிதியை ஏன் உருவாக்க வேண்டும்? அதனை எப்படி உருவாக்க வேண்டும்?

சி.மகேஷ், தென்காசி 

கம்பெனி டெபாசிட்டில் முதலீடு செய்தால் லாபமா?



சா.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் திடீர் தேவை ஏற்படும். இதனைச் சமாளிக்க சிறிது தொகையை உடனே எடுத்துப் பயன்படுத்தும்விதமாகச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்தத் தொகை என்பது பொதுவாக ஒருவரின் மாதச் சம்பளத்தை போல் சுமார் ஐந்து மடங்காக இருப்பது நல்லது. 

இந்த அவசரகால நிதியில் சுமார் 30 சதவிகிதத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், அவசரத் தேவைக்கு ஏடிஎம் கார்டு மூலம் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியும்.

இன்னொரு 30 சதவிகிதத் தொகையை லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைத்திருக்கலாம். இதில் செய்யப்படும் முதலீட்டைப்  பணமாக்குவது இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், ஏடிஎம் கார்டுகூட கொடுத்துள்ளன. அப்படி இல்லையென்றால்கூட, இன்றைக்குக் காலையில் யூனிட்களை விற்றால் நாளை காலையில் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும். 

அடுத்து, மீதியுள்ள 40 சதவிகிதத் தொகையைக் குறுகிய கால டெபாசிட்டில் போட்டு வைக்கலாம். இதற்கான மொத்தத் தொகையை ஒரேநாளில் திரட்டுவது என்பது கடினம். அதற்கு என்றே மாதம் ரூ. 1,000, ரூ.2,000 என வசதிக்கேற்ப சேமித்து வந்தால், சில ஆண்டுகளில் அவசர கால நிதி தயாராகிவிடும்.”

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism