Published:Updated:

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

Published:Updated:
ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

ந்தியாவின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையாக தற்போது தொலைத் தொடர்பு துறை வளர்ந்து வருகிறது. இந்தத் துறையைப் பிடிப்பதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களெல்லாம் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதே துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டுகொண்டிருப்பது ஆச்சரியமே. அந்த நிறுவனம், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.   

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?

ஆர்.காம்-ஏர்செல் இணைப்பு ரத்து

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெரும் கடன் சுமையிலிருந்து வெளியே வரவும், தொழிலைக் காப்பாற்றிக்கொள்ளவும் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதற்கு முடிவு செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த இரண்டு நிறுவனங்களும் இணைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், இந்த இணைப்புக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. காரணம், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை ரீதியிலான நிச்சய மற்றத் தன்மை, இந்த இரு நிறுவனங்களின் முதலீடுகளில் இருக்கும் சிக்கல் ஆகியவை காரணமாக அனுமதி கிடைப்பது தாமதமானது.  ஆனால், அனுமதி கிடைத்தபின் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதில் உறுதியாக இருந்தது ஆர்.காம் நிறுவனம்.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் இந்த இணைப்புக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், ஆர்.காம்-ஏர்செல் இணைப்பை ரத்து செய்வதாக இந்த இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இந்த இணைப்பின் மூலமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது கடனைக் கணிசமாகக் குறைக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தது. ஓராண்டு காலம் அதற்காகக் காத்திருந்தும் அந்த முயற்சி இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது.

இனி ஆர்.காம் நிறுவனத்தின் நிலை என்ன, இந்தப் பங்கை வைத்திருப்பவர்கள் என்ன செய்யலாம் என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஆர்.காம் நிறுவனத்தின் கடன் சுமை

“ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.44,345 கோடி கடன் நிலுவையில் உள்ளது. தங்களுக்குத் தரவேண்டிய கடனை விரைந்து கொடுக்குமாறு வங்கிகள் இந்த நிறுவனத்துக்குக் கடந்த ஒரு வருடமாகவே அழுத்தம் தந்து வருகின்றன. ரிசர்வ் வங்கியும் இந்த நிறுவனத்துக்குக் காலக்கெடு விதித்துள்ளது. இந்த நிலையில்தான் ஏர்செல் உடனான இணைப்புக்கு ஒப்பந்தம் போட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோர் ரேட்டிங் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் தெரிவித்தன. ஆர்.காம் மட்டுமல்ல, ஏர்செல் நிறுவனமும் கடன் அதிகமுள்ள நிறுவனம்தான். ஆனால், தொலைத்தொடர்பு பிசினஸில் ஓரளவுக்கு இன்னும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை ஏர்செல் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்துவருகிறது.

ஆனால், இரு நிறுவனங்களுமே அதிகக் கடன்  சுமை கொண்டுள்ளதால், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படலாம். மேலும், ஏர்செல் நிறுவனமம் ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டு மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள நிறுவனமாகும். என்றாலும் இரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் அவற்றின் பிசினஸில் குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்து, வருமானம் அதிகரிக்கலாம் என இரு நிறுவனங்களுமே நம்பின.

கடனைத் திரும்பக் கேட்டு வங்கிகள் அழுத்தம் தந்தபோது அனில் அம்பானி ஒரு அறிக்கை   வெளியிட்டார். ‘‘ஆர்.பி.ஐ-ன் எஸ்.டி.ஆர் திட்டம் மூலம், கடன்களைச் செலுத்த ஏழு மாத காலம் அவகாசம் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் 60 சதவிகிதக் கடன்கள் அடைக்கப் பட்டுவிடும். ஏர்செல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் கோடி  வருவாய் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும். இதுவே 60 சதவிகிதக் கடன்களை அடைக்க உதவியாக இருக்கும்’’ என்றார். இந்த இணைப்பின் மூலம் தனக்குப் புது வாழ்வு கிடைக்கும் என்று நம்பிய அனில், இப்போது வேறு வழிகளைத் தேடி வருகிறார்.  

இனி என்ன?

தற்போது ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு ரத்தாகியுள்ளதால், ஆர்.காம் நிறுவனத்தின் கடன் சீரமைப்புத் திட்டங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் செயல்பாடுகள் இனி தாமதமாகலாம். அதேசமயம், ஆர்.காம், வங்கிகளுக்கான கடனைத் திருப்பித் தருவதற்கான காலக்கெடு நெருங்குவதால் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அது தன்னுடைய டவர், ஃபைபர், அலைக்கற்றை மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றுக் கடனை அடைக்கத் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு ரத்து... இனி என்ன ஆகும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்?



ஆனால், சொத்துகளை விற்றுக் கடனை அடைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. விற்பவரை விட வாங்குபவரின் கையில்தான் முடிவானது இருக்கிறது. மேலும், வாங்குபவர் நிர்ணயிக்கும் விலைதான் வரும். ஆர்.காம் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தையும் விற்றாலும் அதன் மொத்தக் கடனையும் அடைக்க முடியாது. அப்படியிருக்க, ஆர்.காம்  நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை விற்றுக் கடனைத் தீர்க்கும் முடிவானது எந்த அளவு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

மேலும், ஆர்.காம் நிறுவனத்தின் எதிர்காலமும் நிலையற்றத்தன்மையுடன் இருக்கிறது. அவற்றின் சொத்துகள் விற்கப்பட்டு கடன் அடைக்கப் பட்டால்கூட, ஐந்தில் மூன்று பங்கு கடன் மீதமிருக்கும் நிலைதான் உண்டாகும். மேலும், அதன் சொத்துகள் விற்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் பிசினஸுக்குப் புதிய ஓனர்களிடம் டவர்களுக்கு வாடகை செலுத்த வேண்டியிருக்கும். வருமானம் ஈட்டாத பிசினஸுக்கு மேலும் மேலும் செலவிடுவதால், கடன் அதிகரிக்குமே தவிர, குறையாது. அதேபோல, வருமானம் ஈட்டிவரும் ஃபைபர் பிசினஸை விற்பதால், அந்த வருமானமும் கையை விட்டுப்போய்விடும்.

இந்தத் துறையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அதிகப்படியான முதலீடுகள் அவசியமாகின்றன. எனவே, நிதிநிலை வலுவாக உள்ள நிறுவனங்களால் மட்டுமே இப்போதிருக்கும் போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியும். ஜியோ அறிமுகமானபிறகு ஆர்.காம் நிறுவனத்தின் மொத்த வருவாய் 30%  குறைந்திருக்கிறது. மேலும், ஆகஸ்ட் 2016- ஜூலை 2017-க்கு இடைப்பட்ட காலத்தில், இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 15% குறைந்திருக்கிறது. ஆனால், இதே காலத்தில் மொத்த டெலிகாம் துறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10% உயர்ந்திருக்கிறது. 2008-09-ல் ரூ.4,803 கோடி நிகர லாபம் கண்ட ஆர்.காம், கடந்த நிதியாண்டில் ரூ.1,796 கோடி நிகர நஷ்டத்தை அடைந்துள்ளது. அலைக்கற்றைகளுக் கான செலவு அபரிமிதமாக உள்ளது. அலைக்கற்றைகளை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் 4ஜி, 5ஜி என்று திட்டமிட்டுக் கொண்டிருக்க இன்னும் 2ஜி சேவையிலேயே திணறிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தால் சமாளித்து மீள முடியுமா என்பது கேள்விக்குறியே.

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஏர்செல் உடனான இணைப்பு ரத்தான செய்தி வெளியானதுமே ஆர்.காம் நிறுவனத்தின் பங்கு விலை 13%  சரிந்து, ரூ.16.75-க்கு இறங்கியது. இது, அந்த நிறுவனம்  பட்டியலான மார்ச் 2006-க்குப் பிறகு  கண்ட வரலாற்று இறக்கம் இது. ஆனால், பல மாதங்களாகவே இந்தப் பங்கு இறக்கத்தில்தான் இருந்து வருகிறது. இந்த வருடத்தில், இதுவரை மட்டுமே 50%  இறக்கம் கண்டுள்ளது. ஆர்.காம் பங்குகளை வைத்திருப்பவர்கள், அதிலிருந்து எப்போதோ வெளியேறியிருக்க வேண்டும். இடையில் ஏர்செல் நிறுவனத்துடன் இணையப் போவதாக வந்த அறிவிப்புக்குபிறகு ஆர்.காம் பங்கின்மீது சிறு நம்பிக்கை உண்டானது. ஆனால், இப்போது அந்த இணைப்பும் இல்லை யென்றாகிவிட்ட நிலையில், அதன் நிலை இன்னும் மோசமாகும் வாய்ப்புள்ளது.

ஆர்.காம் பங்கு கூடிய விரைவில் பங்குச் சந்தையிலிருந்து டீலிஸ்ட்  ஆகவும் வாய்ப்புள்ளது. எனவே, இப்போதே அந்தப் பங்கிலிருந்து வெளியேறுவது நல்லது” என்றார். இந்தப் பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்! 
 
- ஜெ.சரவணன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism