ஏப்ரல் 21, 1969. அதிகாலை மணி 2.56. அப்போலோ 11 என்னும் அமெரிக்க விண்கலத்தில் பயணம் செய்த நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் தன் இடதுகாலை எடுத்து வைத்த நேரம்.

இது முடிந்து 48 வருடங்கள் ஓடிவிட்டன. இன்றைக்கு இஸ்ரோவும், நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்வதில் பல சாதனை களைப் படைத்துவிட்டன. அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. கோடிகளைக் கொட்டி வளர்த்தெடுக்கக்கூடியதாக மாறியிருக்கிறது விண்வெளி பிசினஸ். இந்த விண்வெளி பிசினஸில் முதலிடத்தில் இருக்கிறார் ஜெஃப் பெசோஸ்.

நம்பர் 1 பணக்காரர்

ஜெஃப், அமேசான் நிறுவனத்தின் அதிபர். வயது 53. 94.6 பில்லியன் டாலர்களுக்குச் (சுமார் 6,16,224 கோடி ரூபாய்) சொந்தக்காரர். பில் கேட்ஸ், வாரன் பஃபெட் ஆகிய இரு வரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தவர்.

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் அடியெடுத்து வைப்பதை ஐந்து வயதுச் சிறுவனாகத் தன் தாத்தாவோடு உட்கார்ந்து ஜெஃப் பார்த்தான். ‘மனிதர்கள் விண்வெளிக்குப் பயணம் போவது விரைவில் சாத்தியமாகப் போகிறது' என்னும் நம்பிக்கையைப் பேரன் மனதில் தாத்தா ஆழமாகப் பதிய வைத்தார். ஜூல்ஸ் வெர்ன், ராபர்ட் ஹென்லின், ஐசக் அஸிமோவ் ஆகிய அறிவியல் புதின எழுத்தாள ஜாம்பவான் களின் படைப்புகளையும் அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்தப் பாதிப்பால், ஜெஃப், ஸ்டார் ட்ரக் என்னும் விண்கலப் பிரயாணம் பற்றிய தொலைக்காட்சித் தொடரின் தீவிர ரசிகன் ஆனான். ‘‘நீ பெரியவன் ஆனதும், என்னவாகப் போகிறாய்?” என்று யாராவது கேட்டால், “விண்வெளி வீரன் ஆகப்போகிறேன்” என்று பதில் சொல்வான்.

மியாமி ஹெரால்ட் என்னும் லோக்கல் நாளிதழ் பள்ளியிறுதி வகுப்பை முடித்த பலரைப் பேட்டி கண்டார்கள். ‘‘வாழ்க்கையில் உன் லட்சியம் என்ன?’' என்று அவர்கள் கேட்டதற்கு ஜெஃப் சொன்ன பதில், ‘‘20 முதல் 30 லட்சம் மனிதர்களை விண்ணில் குடியேற்றுவேன். அதற்காக, அங்கே ஹோட் டல்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், வீடுகள் கட்டுவேன்.”

ஜெஃப், அமேசான் தொடங்கி 22 வருடங்களாகி விட்டன. விண்வெளியில் சாதனைகள் படைக்க ஆசைப் பட்டவரின் கனவு நிறைவேறியதா?

ஜெஃபின் கனவுத் துரத்தல்

சிறுவயது முதலே அவரின் தோழியாக இருக்கும் உர்சுலா வெர்னர் சொல்கிறார். ‘‘அமேசானில் ஜெஃப் பல்லாயிரம் கோடி முதலீடு செய்வதல்லாம், தன் விண் வெளிக் கனவை நனவாக்கத் தான்.”

இந்தக் கனவுத் துரத்தலை ஜெஃப் 2000–ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். ப்ளூ ஆரிஜின் (Blue Origin) என்னும் கம்பெனியைப் பதிவு செய்தார். இது அமேசானின் அங்கமல்ல; பொது நிறுவனமுமல்ல; அவருடைய தனிப்பட்ட சொந்த நிறுவனம். ஏனோ, இந்த முயற்சியை ரகசியமாக வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால், விவரங்கள் வெளிவரத் தொடங்கின. 2005 வாக்கில் அவர் டெக்சாஸ் மாகாணத்தில் 2,90,000 ஏக்கர் நிலப்பரப்பை விண்வெளி ஆராய்ச்சிக்காக வாங்கினார். வேலை மும்முரமாக நடந்தது. பல ஆரம்பப் பரிசோதனைகளுக்கும், தோல்விகளுக்கும் பிறகு, வெற்றி வெளிச்சம் வரத் தொடங்கியிருக்கிறது.

2011-ல் முதல் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து வானில் வெடித்துச் சிதறியது. ஏப்ரல் 2015 - இரண்டாம் விண்கலம், இலக்காக நிர்ணயித்த 3,07,000 அடி உயரத்தையும், மணிக்கு 2,284 மைல் வேகத்தையும் எட்டி, வெற்றிக் கொடி கட்டியது. நவம்பர் 2015 - மூன்றாம் விண்கலம், 3,30,000 அடி உயரம் சென்று விண்ணைத் தொட்டது.

ஜனவரி 2016-ல் ஏவிய விண்கலம் விண்ணைத் தொட்டு, மறுபடியும் பயன்படுத்தும் வகையில், பத்திரமாகப் பூமிக்குத் திரும்புகிறது. ஏப்ரல், ஜூன் 2016-ல் ஏவிய விண்கலச் சோதனைகள் தொடர் வெற்றி அடைந்தன.

வருங்காலத் திட்டங்கள்

2017-ல் மனிதர்கள் விண்ணுக்குப் போய்த் திரும்பும் சோதனை ஓட்டங்கள்; 2020 - பஸ், ரயில், விமான சர்வீஸ் போல் விண்ணுக்குப் போய்வரும் விண்கல சர்வீஸ். இவைதான் ஜெஃப்-ன் வருங்காலத் திட்டம்.

ப்ளூ ஆரிஜினில் ஆயிரத்துக் கும் அதிகமானோர் பணி புரிகிறார்கள். ஜெஃப் செய்திருக்கும் முதலீடு சுமார் ஆறு பில்லியன் டாலர்கள் (சுமார் 39,000 கோடி ரூபாய்). அத்தனையும் சொந்தப் பணம்.

இதுவரை வருமானம் எதுவும் இல்லை. என்றாலும், நம்பிக்கையுடன் இருக்கிறார் ஜெஃப். ‘லட்சக்கணக்கான மக்கள் செவ்வாய் மற்றும் கிரகங்களுக்குப் பொழுது போக்கவும், புலம்பெயரவும் பயணம் செய்வார்கள்’ என்கிறார் ஜெஃப்.

செவ்வாய் கிரகத்தை நோக்கி...

விண்வெளியை நோக்கிய ஜெஃபின் முயற்சிகள் இப்படி இருந்தாலும், இன்றைக்கு விண்வெளிப் பயணம் என்றால் அது சந்திரனை நோக்கியல்ல, செவ்வாய் கிரகத்தை மையமாகக் கொண்டு இருக்கின்றன. ஏன்?

சந்திரன் பூமியிலிருந்து 3,84,400 கிலோ மீட்டர்கள் தூரம். சுக்ரன் (Venus) நமக்கு அருகில் இருக்கும் கிரகம். கிரகங்கள், பூமி ஆகியவற்றின் சுழற்சியால், இந்த தூரம் மாறுபடும். ஆனால், சராசரியாக 4 கோடி கிலோ மீட்டர். அடுத்து அருகிலிருக் கும் கிரகம், செவ்வாய் (Mars). இதன் சராசரி தூரம் 5,46,00,000 கிலோ மீட்டர்கள். சந்திரன் அருகே இருப்பதால், நம் ஆராய்ச்சிகளின் ஆரம்ப முயற்சிகள் சந்திரனை மையமாகக் கொண்டிருந்தன.

ஆனால், சந்திரனில் பல பிரச்னைகள். அங்கே காற்று மண்டலமே இல்லை. சந்திரனின் வட, தென் துருவங்களில் மட்டுமே தண்ணீர் பனிவடிவில் உள்ளது. இது உருகுவதற்கான சூரிய வெப்பம் இல்லை. இதனால் தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் வாழ முடியாது.

ஆகவே, விஞ்ஞானிகளின் கவனம் சந்திரனிலிருந்து சுக்ரனுக்குப் போனது. இங்கும் உயிரினங்கள் வாழும் பருவ நிலை இல்லை. அடுத்த நெருங்கிய கிரகமான செவ்வாயில் ஆரம்ப ஆராய்ச்சி கள் தொடங்கி ஊக்கமூட்டும் தகவல்கள். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது. அதன் மண்ணைத் தாவரங்கள் வளரத் தகுதியானதாக மாற்ற முடியும். மனித இனமும், சில முன்னெச் சரிக்கைகளோடு செவ்வாயில் குடியேற முடியும். இதனால்தான், பல விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்களின் கவனம் இப்போது செவ்வாய்மீது உள்ளது.

இந்தியா, சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திராயனை செவ்வாய்க்கு வெற்றிகரமாக அனுப்பியது. இன்னும் சில ஆண்டுகளில் 50, 60 ஆள்களுடன் அமெரிக்காவிலிருந்து ஒரு ராக்கெட் செவ்வாய்க்குக் கிளம்பினாலும் ஆச்சர்ய மில்லை. இதுவரை நடக்காததை நடத்திக் காட்டுவதுதான் அறிவியல். அந்த அறிவியலில் பிசினஸும் கலந்திருப்பதுதான் நிஜம்!

இலான் மஸ்க்... சபாஷ், சரியான போட்டி!

ஜெஃப்பை போல், விண்வெளி என்பது இலான் மஸ்க்கின் சிறுவயதுக் கனவல்ல; 30 வயதில் வந்த லட்சியம். இவரது சொத்து 21 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,36,794 கோடி ரூபாய்). உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 80-ம் இடத்தில் இருப்பவர். வயது 46.

இலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். அப்பா தென் ஆப்பிரிக்கர். அம்மா கனடா நாட்டுக்காரர். பத்து வயதிலேயே இவருக்கு கம்ப்யூட்டரில் ஈடுபாடு வந்தது. 12-ம் வயதில் வீடியோ கேம் கண்டுபிடித்தார். ஒரு பத்திரிகைக்கு அதை விற்றதன் மூலம் 500 டாலர் கிடைத்தது.

கம்ப்யூட்டரில் டாக்டர் பட்டம் வாங்குவதற்காக, அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 24–ம் வயதில், தம்பியோடு சேர்ந்து Zip2 என்னும் சாஃப்ட்வேர் கம்பெனியைத் தொடங்கினார். அந்த கம்பெனியை காம்ப்பாக் (Compaq) நிறுவனத்துக்கு விற்றார்கள். இலான் மஸ்க் பங்குக்கு 22 மில்லியன் டாலர்கள் கிடைத்தது.

பணம் கைக்கு வரும்முன்பே, செலவு ஐடியா இலான் மஸ்க் மூளையில் காத்திருக்கும். 1999–ல் Xcom என்னும் டிஜிட்டல் பேமென்ட் கம்பெனியைத் தொடங்கினார். அடுத்த வருடமே PayPal என்று பெயர் மாற்றப்பட்ட இந்த நிறுவனத்தை 2002–ல் 1.5 பில்லியன் டாலர்களுக்கு விற்றார். இலான் மஸ்க் கைகளில் சுமார் 165 மில்லியன் டாலர்கள் குவிந்தன.

பெரிய பணம் ஆகவே, அடுத்துப் பெரிய கனவு. 2002–ல் Space Exploration Technologies Corporation (சுருக்கமாக SpaceX) பிறந்தது. கம்பெனி லட்சியம் விண்வெளிப் பயணத்துக்கு ராக்கெட் போக்குவரத்து நடத்துவது என்று அறிவித்தார். பல்லாயிரம் கோடிகள் முதலீடு, வருமானம் இருக்கிறதா என்றே தெரியாத பிசினஸ். அரசாங்கங்களே திணறும் விண்வெளி ஆராய்ச்சியில் தனிமனிதரா என்று எல்லோரும் கைகொட்டிச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு இப்போது ஆச்சர்யமாக மாறியிருக்கிறது.

2008–ல் முதல் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பினார். தனியார் ஒருவர் வெற்றிகரமாக செலுத்திய ராக்கெட் இதுதான். 2010–ல் திட்டமிட்டபடியே, ராக்கெட் விண்ணுக்குப் போய்த் திரும்பிவந்தது. 2012 – ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட், சுமார் 1000 பவுண்ட் (453 கிலோ) எடையுள்ள பொருள்களை அமெரிக்க நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சப்ளை செய்துவிட்டுத் திரும்பியது. 2017 – முதல் சரக்கு விண்கலத்தின் வெற்றிப் பயணம்

‘‘2024-ல் செவ்வாய் கிரகத்துக்குப் பயணிகள் போக்குவரத்துத் தொடங்குவேன். 30 வருடங்களுக்குள் செவ்வாயில் மனிதர்களை வசிக்கவைப்பேன்” என்கிறார். நினைத்ததை முடித்துக் காட்டுபவர் அவர். ஆகவே, கைகொட்டிச் சிரித்தவர்கள், இப்போது கைதட்டிப் பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள். விண்வெளி பிசினஸில் இலான் மஸ்க், ஜெஃப்பைத் தோற்கடிப்பாரா என்பதே பதில் தெரிய வேண்டிய கேள்வி!

விண்வெளிப் போக்குவரத்து!

ரிச்சர்ட் பிரான்சன் - தொட்ட தெல்லாம் துலங்கும் கைராசி பிசினஸ் மேன். சொத்து ஐந்து பில்லியன் டாலர் (சுமார் ரூ.32,570 கோடி). உலகப் பெரும் பணக் காரர்களில்
324-ம் இடம் இவருக்கு. வயது 67.

பிரான்சன், இங்கிலாந்தில் பிறந்தார். வசதியான குடும்பம். பிறவியிலேயே உரை மாறுபாடு (Dyslexia) என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிப் படிப்பையே பாதியில் விடவேண்டிய கட்டாயம். 17–ம் வயதில் ஸ்டூடன்ட் (Student) என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். செலவு முழுவதையும் தானே விளம்பரங்கள் வாங்கிச் சரிக்கட்டினார். அடுத்து அவர் தொடங்கிய வெர்ஜின் ரெக்கார்ட்ஸ் என்னும் இசைத்தட்டுகள் தயாரிக்கும் கம்பெனி மாபெரும் வெற்றி கண்டது. 1983–ல் வெர்ஜின் குடையின் கீழ் 50 கம்பெனிகள். அடுத்த வருடமே, கடும் போட்டிகள் நிறைந்த விமானப் போக்குவரத்தில் இறங்கினார். அதிசயிக்கும் வகையில் அதில் தாக்குப் பிடித்தார்.

வானத்தை வென்றவரின் அடுத்த இலக்கு, அதையும் தாண்டிய விண்வெளி. 2004–ல் வெர்ஜின் கலாக்டிக் (Virgin Galactic) தொடங்கினார். ‘கலாக்டிக்’ என்றால் நட்சத்திர மண்டலம் என்று பொருள். 2009 முதலே, ‘விரைவில்’ விண்வெளிப் போக்குவரத்து தொடங்கும் என்று பிரான்சன் அறிவித்தார். தலா 2.5 லட்சம் டாலர்கள் தந்து 300 பேர் அட்வான்ஸ் புக்கிங் செய்தனர். இதுவரை கலாக்டிக் கம்பெனியின் மொத்த முதலீடு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,257 கோடி). இதில் பிரான்சன் பங்கு 120 மில்லியன்; சவுதி அரசாங்கம் 380 மில்லியன்.

அக்டோபர் 26, 2017-ல் இன்னும் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்வதாக சவுதி அரேபிய மன்னர் அறிவித்திருக்கிறார். இந்தப் புது ரத்தத்தால், 2018–ல் முழுவீச்சில் விண்வெளிப் பயணப் போக்குவரத்துத் தொடங்கும் என்கிறார் பிரான்சன். இவர் ஜெஃப்பையும், இலானையும் விஞ்சுவாரா?