தமிழகத்தில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் முடிந்து விட்டன. உழவர் சந்தைகள் இன்றைக்கு எப்படி இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள மதுரையில் முதல்முதலாக தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கும், 2000-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி சென்னை பல்லாவரத்தில் தொடங்கப்பட்ட நூறாவது உழவர் சந்தைக்கும் ஒரு விசிட் அடித்தோம்.

மதுரை உழவர் சந்தை

தி.மு.க ஆட்சியில், அன்றைய முதல்வர் கருணாநிதியால் முதல்முதலாக மதுரை அண்ணா நகரில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. பல மாவட்டங்களில் உழவர் சந்தைகள் சரியாகச் செயல்படவில்லை என்கிற புகார்கள் இருந்தாலும், இந்த உழவர் சந்தை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கடை வைத்த கிராமப்புற விவசாயிகளே, கடந்த 18 ஆண்டுகளாகத் தங்களின் கடையை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்குத் தராசு முதல் கூட்டுறவு வங்கிக் கடன் வரை இங்குள்ள தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் மூலம் வாங்கித் தரப்படுகிறது. பக்கத்துக் கிராமங்களிலிருந்து வீடுகளிலும், தோட்டங்களிலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள் ஃப்ரெஷ்-ஆக இங்கு கொண்டு வரப்படு வதால், சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் இங்கு தினமும் காய்கறிகளை வாங்குவதைப் பார்க்க முடிகிறது.

இந்த உழவர் சந்தையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பதுபோல் விவசாயிகளுக்கு வரிசையாகக் கடை ஒதுக்கப்படுகிறது. இவர் கள் ஒவ்வொருவரும் உண்மை யான விவசாயிகள்தான் என்பதை இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை தோட்டக் கலைத் துறை அலுவலரிடம் ஒப்பம் வாங்கிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை.

பல்லாவரம் உழவர் சந்தை

சென்னை பல்லாவரம் சர்ச் சாலையில் உழவர் சந்தை இருக்கிறது. இதுதான் தமிழகத்தில் தொடங்கப் பட்ட நூறாவது உழவர் சந்தை. தொடக்கத்தில் 50 கடைகள் இங்கு இருந்தன. இந்த உழவர் சந்தையில் இப்போது பத்துக் கடைகளே உள்ளன. இங்கு கடை வைத்திருக்கும் ஆண்டான் குப்பத்தைச் சேர்ந்த காமராஜுடன் பேசினோம்.

“பதினேழு வருடங் களாகக் கடை நடத்துகிறேன். என் நிலத்தில் விளையும் காய்கறிகளை இங்கு கொண்டு வருகிறேன். குன்றத்தூர் மேத்தா நகரில் பிற விவசாயி களிடம் இருந் தும் காய்கறிகளை வாங்கி வந்து இங்கு விற்கிறேன். அரசு சார்பில் எனக்கு அடையாள அட்டை தந்துள்ளனர். தினமும் காலையில் ஏழு மணிக்கு வேளாண் விற் பனைத் துறை அதிகாரிகள் விலையை நிர்ணயம் செய்து எங்களிடம் சொல்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் விலையில்தான் காய்கறி களை விற்கிறோம். தினமும் 7,000 ரூபாய் வரை விற்பனை நடக்கிறது. நாளொன்றுக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆண்டான் குப்பத்தைச் சேர்ந்த இன்னொரு விவசாயி ஏ.சுந்தரமூர்த்தி, “கிராமத்திலிருந்து இங்கு காய்கறிகளைக் கொண்டுவருவதற்கு முன்பு பேருந்து வசதி இலவசமாகக் கிடைத்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பேருந்தும் வருவதில்லை. எனவே, இப்போது வேனில் வாடகை கொடுத்துத்தான் இங்கு விளை பொருள்களைக் கொண்டுவருகிறோம். முன்புபோல, இலவச பேருந்து வசதி செய்தால், எங்களுக்குக் கூடுதலாக லாபம் கிடைக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.

தேனியில் உழவர் சந்தை

தேனியில் மீறுசமுத்திரம் கண்மாய் அருகே ஓர் உழவர் சந்தை இருக்கிறது. இந்தச் சந்தைக்குள் நுழைந்தோம். கடைகளில் பரபரப்பாக வியாபாரம் நடந்துகொண்டி ருந்தது. 70 கடைகள் சந்தைக்குள் காட்சியளித்தன. இங்கு காய்கறிக் கடை வைத்துள்ள பாலகுருவிடம் பேசினோம். “மக்களுக்கு உழவர் சந்தையின்மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. வெளியில் வாங்குவதைவிட இரண்டு, மூன்று ரூபாய் குறைவு என்பதால், காலையில் வாக்கிங் செல்லும்போதே காய்கறி வாங்கிச் செல்வார்கள். இங்கு கடை இல்லாமல் சில விவசாயிகள் தரையில் வியாபாரம் செய்கிறார்கள். அவர்களுக்குக் கடை கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றார் புன்னகையோடு,

கூடுதல் கடைகள்

தேனி மாவட்ட உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் சின்ன வெளியப்பனிடம் பேசினோம். “விவசாயிகளை காலை 5.30 மணிக்குதான் சந்தைக்குள் அனுமதிக்கிறோம். அதேபோல். மதியம் ஒரு மணிக்கு மேல் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை விவசாயிகளுடன் கலந்துபேசி போர்டுகளில் எழுதிவைத்து விடுவோம். அந்த விலையைவிட அதிகமாக பணம் வாங்கினால் சந்தைக்குள்ளேயே இருக்கும் என் அலுவலகத்தில் புகார் செய்யலாம். தற்போது ஒரு சில சிறு விவசாயிகளுக்கும் கடை கொடுக்கும்விதமாக ரூ.15 லட்சம் மதிப்பில் 20 கடைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளா, வியாபாரிகளா?

இந்தச் சந்தையில் ஒருவர் கடை வைக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. முதலில், அவர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும். அவர் என்ன விவசாயம் பார்க்கிறார், எவ்வளவு நிலத்தில் பார்க்கிறார் என்பது குறித்த முழு விவரமும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சான்றோடு, பத்திரத்தில் எழுதிப் பதிவு செய்யப்பட்ட பின்னர் தான் உழவர் சந்தை அடையாள அட்டை தரப்படும். ஒரு சில விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் போது, அவரின் ரத்த உறவினரை அறிமுகப்படுத்தி, ‘இவர் எனக்குப் பதிலாக சந்தையில் கடை நடத்தலாம்’ என எழுதித் தருவார்.இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் குறை சொல்கிறார்கள்'' என்றார்.

உழவர் சந்தைகள் தொடங்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என விவசாயிகளின் சங்க நிர்வாகி சண்முகத்திடம் பேசினோம். “உழவர்களுக்கு நேரடியாகப் பயன் இல்லை. காய்கறி விற்கும் சிறு வியாபாரி களுக்குத்தான் பயன்படுகிறது. உழவர் சந்தைகளுக்கு என அறிமுகப் படுத்தப்பட்ட பேருந்துகள் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டு விட்டன. தவிர, விவசாயிகள் ஓர் இடத்தில் உட்கார்ந்து வியாபாரிகள் போல தொழி லில் ஈடுபடுவது சாத்திய மில்லை” என்றார்.

தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட உழவர் சந்தைகள், அரசின் ஆதரவை இழந்தபின்புதான் அழுதுவடியத் தொடங்கி யிருக்கின்றன. பலவகை யிலும் மக்களுக்கு உதவியாக இருக்கும் உழவர் சந்தை களை எல்லா ஊர்களிலும் தொடங்கி, சிறப்பாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.பாலசுப்பிரமணி, செ.செல்மான், எம்.கணேஷ்

படங்கள்: வீ.நாகமணி, ஈ.ஜே.நந்தகுமார், சக்தி அருணகிரி

நங்கநல்லூர் உழவர் சந்தை

சென்னை நங்கநல்லூரில் இருக்கும் உழவர் சந்தையை மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். பூவழகி மகளிர் குழுவைச் சேர்ந்த சாந்தியிடம் பேசினோம். “கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள் வாங்கிவந்து விற்கிறோம். அதிகாரிகள் தினமும் விலை நிர்ணயம் செய்து எங்களுக்குச் சொல்வார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் கடை திறந்திருக்கும். இந்த உழவர் சந்தை ஆரம்பித்தபோது 24 கடைகள் இருந்தன. இப்போது 10 கடைகள்தான் இருக்கின்றன. காய்கறிகளை வேனில் வாடகை கொடுத்துத்தான் கொண்டு வருகிறோம். காய்கறிகள், பழங்கள் எனத் தினமும் 3,000 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது” என்றார்.

காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர் சரஸ்வதியிடம் பேசினோம். “ நங்கநல்லூர் பகுதியில் மற்ற பகுதிகளை விட உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கிறது'' என்றார்.

சந்தைப் புள்ளிவிவரம்

விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில், 1999-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் அப்போதைய தி.மு.க அரசால் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.

அரசு தரும் தகவல்கள்படி, தற்போது தமிழகம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் இருக்கின்றன. இதில் 90 சதவிகித உழவர் சந்தைகளில் விவசாயி களும், 10 சதவிகித உழவர் சந்தைகளில் மகளிர் குழுக்களும் கடைகள் வைத்துள்ளனர். நேரடியாக விவசாயிகள் விற்கும் உழவர் சந்தைகள் வெற்றிகர மாகவே செயல்படுகின்றன!

அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டில்...

தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உழவர் சந்தையைக் கண்காணிக்க, நிர்வாக அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டி ருப்பார். அவர், சந்தைக்கு வரும் காய்கறிகளின் தரம் மற்றும் விற்பனையைச் சோதிப்பார். மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி, அன்றைய காய்கறிகளின் விலையை நிர்ணயிப்பார். அந்த விலைதான் அனைத்துக் கடைகளிலும் இருக்கும். அதிக விலையில் விற்கப்பட்டால் அந்த கடையின்மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் அவருக்கே உண்டு.