‘உலோகப் பொருள்களில் ஆரம்பித்து, உணவுப் பொருள்கள் வரை பல்வேறு பொருள்களின் தரத்தைப் பரிசோதனை செய்யும் முக்கியமான பணியைச் செய்து வருகிறது சென்னை மெட்டெக்ஸ் லேப் (Chennai Mettex Lab). வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பால் மற்றும் மதுபானம், உள்நாட்டில் உற்பத்தியாகும் கார் உதிரிபாகங்கள், ரயில்வே பயன்பாட்டுப் பொருள்கள் எனப் பலவிதமான பொருள்களையும் ஆய்வுசெய்து தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது இது. இந்த ஆய்வகத்தின் உரிமையாளர் வி.கே.செல்வகுமாரைச் சந்தித்துப் பேசினோம்.

``வெறும் 250 ரூபாயுடன் ஆரம்பித்த வாழ்க்கை... இன்று 170 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என் சொந்த ஊர் ஈரோடு. பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு, வேலை தேடி 1982-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த `இன்ஸ்பெக்ஷன் இந்தியா’ என்ற நிறுவனத்தின் சென்னைக் கிளையில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தேன். நான் கல்லூரியில் படித்ததை அப்படியே சோதனை செய்து பார்ப்பதற்கு இங்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு பேர் இணைந்து ஒவ்வொருவரும் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து தனியாக ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டார்கள். கடைசி நேரத்தில் ஒருவர் கலந்துகொள்ளாததால், என்னைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டனர். அப்போது, என்னுடைய அம்மா சீட்டு போட்டுச் சேர்த்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து உதவினார்.

1991-ம் ஆண்டில் நிறுவனத்தில் பங்குதாரர் களாக இருந்த இரண்டு பேர் பிரிந்து விட்டனர். நானும் என்னுடைய நண்பரும் இந்த நிறுவனத்தை ஏற்று நடத்தினோம். 1999-ம் ஆண்டு முதன்மைப் பங்குதாரராக இருந்த என் நண்பரும் பிரிந்து சென்று விட்டார். அப்போது, ஊரிலிருந்த வீட்டை அடமானம் வைத்துதான் அவருக்கு மிகப் பெரிய தொகையைக் கொடுத்து நிறுவனத்தைத் தக்கவைத்துக் கொண்டேன். அதன்பிறகு வங்கியில் கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் நிறுவனத்தை மேம்படுத்தத் தொடங்கினேன்.

இன்றைக்கு நான் வாடகை இடத்தில் நிறு வனத்தை நடத்தி வந்தாலும், 170 பேருக்கு வேலை வாய்ப்பைத் தருகிறோம் என்பதை நினைக்கும்போது எனக்குப் பூரிப்பாகத்தான் இருக்கிறது’’ எனத் தன் நிறுவனம் வளர்ந்த கதையை விவரித்த செல்வகுமார், தன் நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை யும் விளக்கினார்.

``ஆரம்பத்தில் நாங்கள் மெட்ரியாலஜி ஆய்வு கள்தான் செய்துவந்தோம். அப்போது பத்துப் பேர் மட்டுமே வேலை பார்த்து வந்தனர். 2002-ம் ஆண்டி லிருந்து ஒவ்வோர் ஆய்வுக்கும் தரச் சான்றிதழ் பெற ஆரம்பித்தோம். என்.எ.பி.எல் (NABL -National Accreditation Board for Testing and Calibration Laboratories) என்பது தரச் சோதனைக்கான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும் அமைப்பு. இந்த அமைப்பிடமிருந்து பரிசோதனை நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் `சரியான ஆய்வு நிறுவனம்’ எனச் சான்றிதழ் பெற வேண்டும். இதை என்.எ.பி.எல் நிறுவனம் நேரடியாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும். என்னென்ன சோதனைகள் செய்யலாம் என்பதையும், எப்படிச் செய்யலாம் என்பதையும் இவர்கள் காட்டும் வழி முறைகளின் அடிப்படையில்தான் செய்ய வேண்டும். தற்போது என்.எ.பி.எல் அமைப்பின் பல நூறு ஆய்வுகளுக்கான சான்றிதழைப் பெற்றுள் ளோம்.

இதைத் தவிர, எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI - Food Safety and Standards Authority of India) சான்றிதழ்கள், அபேடா (APEDA - Agricultural and Processed Food Products Export Development Authority) சான்றிதழ்கள் எனப் பல தரச் சான்றிதழ் களையும் பெற்றுள்ளோம். இந்தியா விலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள் களையும், இறக்குமதி செய்யப் படும் பொருள் களையும் பரிசோதனை செய்து வருகிறோம். பச்சைப்பயறு, நிலக்கடலை, உளுந்து என ஒவ்வோர் உணவுப்பொருளுக் கும் தனித்தனி சோதனைக்கான சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒருவித தர மேலாண்மையைக் கடைப்பிடிக்கின்றனர். உதாரணமாக, இங்கிலாந்துக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனில், அங்குள்ள ஜி.எ.எஃப்.டி.ஏ (GAFTA - Grain and Feed Trade Association) தரச் சான்றிதழ் பெற்ற ஆய்வகத்தில் பொருளை பரிசோதித்து வாங்க வேண்டும். ஜி.ஏ.எஃப்.டி.ஏ அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 250 முதல் 300 ஆய்வகங்களுக்குப் பொருளை அனுப்பி பரிசோதனை செய்யச் சொல் வார்கள். அனைத்து ஆய்வக முடிவுகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டும்தான் ஆய்வகங்களுக்குத் தரச் சான்றிதழ் அனுமதி வழங்கு வார்கள். இந்தச் சான்றிதழை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெற வேண்டும். இந்த அமைப்பின் தரச் சான்றிதழை நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து பெற்றுவருகிறோம்'' என்றார்.

இந்தோனேஷியாவுக்கு நிலக்கடலை அனுப்புவதற் கான பரிசோதனை செய்ய, முதன்மையான பரிசோதனைக் கூடம் இந்த நிறுவனத்திடமே உள்ளது.

இண்டியன் ரயில்வே, எல் அண்ட் டி, ஹூண்டாய், ஃபோர்டு, பி.ஹெச்.சி.எல், எம்.ஆர்.எஃப், செயின்ட் கோபைன், காக்னிசன்ட், விப்ரோ, ராயல் என்ஃபீல்டு என 500-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களும், பல நூறு சிறு நிறுவனங்களும் இதன் வாடிக்கையாளராக உள்ளன.இந்த ஆய்வகத்தில் உயர்தர ஆய்வகக் கருவிகளும், சோதனைமுறைகளும் உள்ளன. ஒவ்வொரு கருவியும் கோடிக்கணக்கில் மதிப்பு கொண்டது.

``ஒரு நிறுவனத்தின் இளநிலை ஆய்வக உதவியாளராக இருந்து வளர்ந்திருப்பதால், பணியாளர்களுக்கு எந்த விதமான இலக்கையும் நிர்ணயிப்பதில்லை. எந்த ஆய்வைச் செய்தாலும், அதைத் தரத்தோடு செய்ய வேண்டும் என ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்குச் சொல்கிறோம். தரம்தான் மிக முக்கியம். பணியாளர்கள்தான் எங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய சொத்து. முதுநிலை வேதியியல், உயிரி வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி படிப்பவர்கள், இந்தத் துறையைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்று முடித்தார் செல்வகுமார்.

- ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: ப.பிரியங்கா