Published:Updated:

இனி உன் காலம் - 2 - முதலடி!

இனி உன் காலம் - 2 - முதலடி!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 2 - முதலடி!

டாக்டர் வி. விஐய் ஆனந்த் ஸ்ரீராம்

இனி உன் காலம் - 2 - முதலடி!

டாக்டர் வி. விஐய் ஆனந்த் ஸ்ரீராம்

Published:Updated:
இனி உன் காலம் - 2 - முதலடி!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 2 - முதலடி!

ஷாலினி தன்னுடைய வண்டியை வேகமாகக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள். மின்சாரம் இல்லை. அவள் கணவனும், குழந்தையும்  மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஏதேதோ கதை சொல்லி விளையாடிக் கொண்டிருந்தனர்.   

இனி உன் காலம் - 2 - முதலடி!

வேகமாக வீட்டுக்குள் வந்த ஷாலினி  உடை மாற்றிவிட்டு வந்தவுடன், அவள் கணவன் விக்ரமிடம் சொன்னாள்.

ஷாலினி: விக்கி, இன்னிக்கு லேடிஸ் கிளப் மீட்டிங் இருக்கு. நான் அங்கே போறேன். நீ வேணும்னா, பையனைக் கூட்டிட்டுப் பூங்காவுக்குப் போயேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி உன் காலம் - 2 - முதலடி!விக்கி: ஆமா, இன்னைக்குப் புதுசா என்னப்பா பேசப்போறீங்க? யாராவது புதுப் புடவை எடுத்திருக்காங்களா என்ன?

ஷாலினி: விக்கி, உனக்கு எப்பவுமே கிண்டல்தான். நான் சொல்லிக்கிட்டே இருந்தேன்ல, நம்ம அப்பார்ட்மென்டைச் சுத்தி மரம் வைக்கலாமுன்னு. அதைப்பத்திதான் பேசப்போறோம்.

விக்கி: என்னத்த மரம் வச்சி... என்னத்த செய்யப்போறீங்க..! போன மாசமும் இதேமாதிரி ஒரு மீட்டிங் போட்டீங்க, என்னாச்சு?

ஷாலினி:
ஆமாப்பா. அது போன மாசம். இப்ப நான் சொல்றது இந்த மாசம்.

விக்கி: நீங்க மாசம் மாசம் மீட்டிங் போட்டு பேசுறீங்க, உருப்படியா ஒண்ணும் நடந்தமாதிரி தெரியலையே!‌

ஷாலினி: எப்பப்பாரு... எங்களுக்கு எதிராகப் பேசறதே உங்களுக்கு வழக்கமாயிடுச்சு. நாங்களாவது ஏதோ ஒரு முயற்சி எடுக்குறோமில்ல. இந்த விஷயத்துல  ஆம்பளைங்க எல்லாரும் ஒரேமாதிரி இருக்கீங்க. சரி சரி... எனக்கு டைம் ஆயிடுச்சு. நான் கெளம்புறேன். 

விக்கி: ஓகே, ஓகே.... போய்ட்டு வாங்க மேடம்.

இரவு 8:30

விக்கி: என்னம்மா, மீட்டிங் முடிஞ்சுதா? கமிட்டிக் கூட்டத்துல என்ன முடிவெடுத்திருக்கீங்க?

ஷாலினி: என்னது, என்ன டின்னரா?

விக்கி: இந்த நக்கலெல்லாம் வேணாம். உங்க மீட்டிங்ல மரம் நடுவிழா என்னிக்குன்னு முடிவு பண்ணிட்டீங்களா?   

இனி உன் காலம் - 2 - முதலடி!

ஷாலினி : அதெல்லாம் சூப்பரா முடிவு பண்ணிட்டோம். எந்தவொரு விஷயத்தையும் பிளான் பண்ணி  பண்ணணுமுன்னு எங்க தலைவர் வடிவேல் சொல்லியிருக்கார்.

விக்கி: ஓ, நீங்க அப்படி வர்றீங்களோ! பிளான் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி,  செயல்ல இறங்கணுமில்ல?

ஷாலினி: அத நாங்க பார்த்துக்குறோம். நீங்க சாப்பிட்டுட்டுப் போய் படுங்க.

விக்கி: ம்ஹூம். நல்லதுக்கே காலமில்லடா சாமி.

ஷாலினி:  போதும் போதும், உங்க நல்லெண்ணமெல்லாம்..!

விக்கி : ரைமிங் கவுன்ட்டர் கொடுக்குறீங்களோ?

ஷாலினி : நாங்கெல்லாம் யாரு?

மறுநாள் காலை

விக்கி : ஷாலுமா, மணி ஒன்பது தாண்டிடுச்சு, ஏந்திரிடிமா என் ராசாத்தி..!

ஷாலினி: இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. ப்ளீஸ், இன்னும் கொஞ்சநேரம் தூங்குனாத்தான் என்ன? டிபன் வேணும்னா, தோசை மாவு ஃப்ரிட்ஜ்ல இருக்கு, எடுத்து ரெண்டு தோசை ஊத்திச் சாப்பிடுங்களேன்! 

விக்கி: அம்மா தாயே, டிபனுக்காக உன்னை ஒண்ணும் எழுப்பல. உனக்கொரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு. அதுக்காகத்தான் எழுப்பினேன்.

ஷாலினி: என்னப்பா நீங்க, இப்படி படுத்துறீங்களேப்பா?

விக்கி: உனக்கொரு சர்ப்ரைஸ் காத்திருக்கு, வா.

ஷாலினி: சரி,  வர்றேன்.

விக்கி: அப்படியே வந்துடாதேம்மா, போய் பல் விளக்கிட்டு டிரஸ் மாத்திட்டு வா.

ஷாலினி: ஓகே.

சிறிது நேரம் கழித்து

ஷாலினி: 
ஆமா, நாம் இப்ப எங்கப் போறோம்?

விக்கி:
வா வா, சொல்றேன்.

ஷாலினி: எங்கதான் என்னைக் கூட்டிக்கிட்டுப் போறீங்க?

விக்கி: அட... பொறுமையா இரு  என் தங்கமே.

ஷாலினி: ஹலோ என்னன்னு சொல்லிட்டு செஞ்சா, சஸ்பென்ஸ் குறைஞ்சுடுமா என்ன?

விக்கி: ரொம்ப நாளா பெண்கலெல்லாம் கூடிக்கூடி பேசிக்கிட்டிருக்கீங்களே ஒரு விஷயத்தைப் பத்தி..!

ஷாலினி: யு மீன் மரம் நடவா? 

விக்கி: யெஸ், அதுக்கேதான்.

பிளாட்டின் ஓரத்தில் ஓர் அடிக்குத் தோண்டி வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு அழகான செடி.

விக்கி: ஷாலு, வா. இந்த மரத்தை நாமே சேர்ந்து இங்க வைப்போம். இந்த அப்பார்ட்மென்ட் முழுக்க மரங்கள் பூத்துக் குலுங்குறதுக்கு நாம வைக்கிற இந்த மரம் ஒரு முதலடியாக இருக்கட்டும்!

ஷாலினி:
வாவ், நேத்து பூராவும் எங்களைக் கிண்டல் அடிக்கிறமாதிரி பேசிக்கிட்டிருந்தீங்க... ஒரே நாள் நைட்ல மனசுமாறி இத்தனை பெரிய விஷயத்தைச் செஞ்சிட்டீங்களே. யூ ஆர் ரியலி கிரேட்!

விக்கியும், ஷாலினியும், தன் மகனுடன் அந்தச் செடியைப் பதமாக அந்தக் குழியில் வைத்து, அடிப்பாகத்தில் மண்ணைப் போட்டார்கள். செடிக்கு உடனே தண்ணீரையும் ஊற்றினார்கள். செடி சிரித்தபடி காற்றிலாடத் தொடங்கியது.

விக்ரமும், ஷாலினியும் மரம் நடுவிழாவினை நடத்தி முடிக்கையில், அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். முதலில் வந்தார் கணேசன்.

கணேசன்: என்ன விக்கி, குடும்பத்தோட இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

விக்கி:
இல்ல அங்கிள், நம் அப்பார்ட்மென்ட் லேடீஸ் டீம் ரொம்ப நாளாவே மரக்கன்று நடுறத பத்தி பேசிக்கிட்டு இருக்குறாங்க.

கணேசன்:
கேள்விப்பட்டேன்.

விக்கி: அதுக்கு முதலடியா நாங்க ஒரு மரத்தை வெச்சுடலாம்னு முடிவெடுத்து வெச்சுட்டோம்.

கணேசன்:
வெரிகுட், அடுத்த வாரம் ஏன் நாம் எல்லோரும் சேர்ந்து இதைச் செய்யக் கூடாது? நானும் உங்களோட சேர்ந்துக்கவா?

விக்கி: கண்டிப்பா, செய்யலாமே!

ஷாலினி: வாவ், பொம்பளைங்க நாங்க பேசிக்கிட்டிருந்த விஷயத்தை நீங்க எல்லோருமே சேர்ந்து செய்ற விஷயமா மாத்தீட்டிங்களே!

விக்கி :  எதையும் பிளான் பண்ணி செய்றதுல தப்பில்லை. ஆனா, வெறும் பிளானிங் பண்றதுலேயே நேரம் போச்சுனா, அப்ப அந்த விஷயத்தை நாம எப்பத்தான் செய்றது? அதான் இப்ப அதிரடியா களத்துல இறங்கி முடிச்சுட்டோம்.

ஷாலினி: ஒப்புக்கிறேன்ப்பா!

இன்னும் சிலர்: விக்கி நாங்களும் உங்களோட சேர்ந்து செய்யறோம்.

விக்கி: வரவேற்கிறோம்.

எந்த ஒரு விஷயத்தையும் அது சிறியதோ பெரியதோ, நாம் செய்ய முடிவெடுத்து விட்டால், அதற்கான முன்னேற்பாடுகள் இருக்க வேண்டும். திட்டமிட வேண்டும்  என்பதெல்லாம் சரிதான். ஆனால், அதைச் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். மற்றவர்கள் செய்யட்டும் என்று நாம் காத்திருக்காமல், அதற்கான முதலடியை எடுத்து வைத்தோமென்றால், நம் பின்னால் ஆயிரம் பேர் வருவார்கள். எடுத்து வைப்போமா முதல் அடியை?

 (காலம் வெல்லும்)

படங்கள்: ப.சரவணகுமார், க.பாலாஜி