வெளிநாட்டில் வேலைபார்ப்பது பலருக்கும் கனவாக இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து இந்தத் துறையில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். சென்னையில் உள்ள `யுனிவர்சல் ஓவர்சீஸ் கன்சல்டன்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் விஜயகுமாரிடம் பேசினோம்.

``வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து தற்போது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் தகவல் அனுப்புகிறார்கள். இவ்வாறு அனுப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கான ஆலோசனை நிறுவனங்கள், வெளியுறவுத் துறையின் கீழ் பதிவுபெற்றதாக இருக்க வேண்டும். இவ்வாறு பதிவுபெற்ற நிறுவனங்கள் விளம்பரம் செய்யும்போது, அதில் நிறுவனத்தின் பதிவு எண்ணையும் வெளியிட்டிருப்பார்கள். பதிவுபெற்ற நிறுவனங்கள் குறித்த விவரங்களை https://emigrate.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கில் செலவாகும் என்பதெல்லாம் தவறு. வெளியுறவுத் துறை அமைச்சகமானது, வெளிநாட்டு வேலைக்காகப் பதிவுபெற்ற ‘நிறுவனங்கள் 20,000 ரூபாய்க்குக் குறைவாகவே கட்டணம் பெற வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. இந்தத் தொகையைவிட கூடுதலாக 10,000 ரூபாய் செலவாகலாம். அதற்குமேல் செலவாக வாய்ப்பில்லை. தற்போது அரபு நாடுகளில் பொறியியல் பட்டம் படித்தவர்கள், டிப்ளோமா, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ஆயில் & காஸ் பிரிவுகளில் நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பி.இ., பி.டெக் இன்ஜினீயரிங் படித்தவர்கள்,

பி.எஸ்ஸி வேதியியல், இயற்பியல் படித்தவர்கள், பாதுகாப்பு மேலாண்மை குறித்து படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் எவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும் என நிர்ணயித்திருக்கிறது வெளியுறவுத் துறை. இன்ஜினீயரிங் பட்டம் பெற்றிருந்தால் 60,000 ரூபாய் முதல் 70,000 ரூபாயும், டிப்ளோமா படித்தவர்களுக்கு 40,000 ரூபாயும், ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 20,000 ரூபாயும், படிப்பறிவு இல்லாதவராக இருந்தால் 12,000 ரூபாயும் குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும். வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் மட்டுமே. கூடுதல் நேரம் வேலை பார்த்தால் அதற்கான ஊதியத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். வேலை வழங்கும் நிறுவனங்கள், குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. நிறுவனங்கள் எந்த வேலைக்காக ஆள்களைத் தேர்வுசெய்கிறார்கள் என்ற விவரங்களை முன்னரே வழங்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார் விஜயகுமார்.

அரபு நாடுகளுக்குச் செல்லும்போது, குடிபெயரத் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டியது அவசியம். இதற்கான சேவையைச் செய்துவருகிறது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகம். இதன் மண்டல அலுவலகம் சென்னை அசோக்நகரில் செயல்பட்டு வருகிறது.

குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலக அதிகாரி ரவிச்சந்திரனிடம் பேசியபோது, ``வேலைவாய்ப்பு குறித்து அணுகும் போது அதற்குரிய கோப்புகளைப் பார்வையிட வேண்டும். வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தும்போது எங்கள் துறையின் அனுமதியைப் பெற்றிருக்கிறார்களா என அறிய வேண்டும். குறிப்பிட்ட நிறுவனம் வேலைவாய்ப்பு முகாமை நடத்திய பிறகு, அதே இடத்தில் போலி நிறுவனங்களும் முகாமை நடத்திப் பணம் பறிப்பதாகச் செய்திகள் வருகின்றன. மேலும், பதிவுபெற்ற நிறுவனங்களைத் தவிர, இடைத் தரகர்களுக்கு நாங்கள் அனுமதி வழங்குவதில்லை. இவர்களையும் நம்பி ஏமாறக் கூடாது.

வெளிநாடுகளில் நர்ஸிங் பணிகளுக்குத் தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தையும், சிறப்பு அனுமதியாக சில தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கியிருக்கிறோம். இவர்களை மட்டும் அணுகி வேலைவாய்ப்பு விவரத்தைப் பெற வேண்டும். குடிபெயர தடையில்லாச் சான்றிதழ் எங்களிடம் பெற்றால் மட்டுமே, 18 நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெறமுடியும். இந்தச் சான்றிதழ் பெறும்போது நாங்கள் அடையாள அட்டையை
வழங்குகிறோம். அதில் வேலை பெறுபவர் குறித்த விவரம், வேலை வழங்கும் நிறுவனம், தூதரக அலுவலக முகவரி, உதவி தொலைபேசி எண்கள் அனைத்தையும் வழங்குகிறோம்” என்றார்.

வெளிநாட்டில் வேலை பெற இனியும் `லட்சக்கணக்கில் செலவாகும்’ எனச் சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள்.

- ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: ப.பிரியங்கா