நம்பிக்கையானவர் நடத்தும் குலுக்கல் சீட்டில் பணம் கட்டுகிறேன். ஆனால், அரசு அனுமதி பெறப்படாமல் நடத்தப்பட்டு வருகிறது. அரசு அனுமதியோடு குலுக்கல் சீட்டு நிறுவனங்கள் இயங்குகின்றனவா? அப்படி குலுக்கல் சீட்டு நிறுவனம் நடத்துவதற்கு என்னென்ன வழிமுறை?

செபஸ்டியன், நாகர்கோவில்

கே.அழகு ராமன். வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்.

“அரசு அனுமதி பெறாமல், நம்பிக்கை யானவரால் நடத்தப்படும் சீட்டு எனப் பணம் கட்டி வரும் நிலையானது பரவலாகக் காணப்படுவது. அரசின் முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் சீட்டு நிறுவனங்களும் உள்ளன.

அரசு அனுமதி என்பது, நிதி நிறுவனத்தைப் பதிவு செய்துவிட்டு, சீட்டுப் பதிவாளர் முன்பாக என்ன தொகைக்கான சீட்டு, எவ்வளவு நபர்கள், எவ்வளவு காலத்திற்கானது என அனைத்தையும் குறிப்பிட்டு, அந்தந்தப் பதிவேடுகளில் ஒப்பம் பெறப்பட்டு, சார் பதிவக அறிவிப்புப் பலகைகளில், இதனை அனைவருக்கும் தெரிவிக்கும்விதமாக, அந்த அறிவிப்பை இடம் பெறச் செய்வார்கள். அதன் பின்பு, பணம் செலுத்த ஆரம்பித்தவுடன், மாதாந்திர வரவு-செலவுக் கணக்குகளைத் தவறாமல் காட்ட வேண்டும். அதில், ஏதாவது குறை இருப்பது தெரிய வந்தாலோ அல்லது அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து எவரேனும் ஆட்சேபம் தெரிவித்தாலோ, அந்நிறுவனத்திற்கு சீட்டுப்பதிவாளரால் வழங்கிய அனுமதி ரத்து செய்யப்படும்.”

ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் என்ற வீதத்தில் 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய நினைக்கிறேன். 5-வது ஆண்டின் முடிவில் எனக்கு 22 முதல் 24 சதவிகிதம் வளர்ச்சி விகிதம் தேவைப்படுகிறது. சிறந்த 5 ஃபண்டுகளைப் பரிந்துரைக்க இயலுமா?

திருப்பதி, சென்னை-18

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“மியூச்சுவல் ஃபண்டில் லாப இலக்காகக் குறிப்பிட்ட சதவிகிதத்தை நிர்ணயித்திருப்பதே தவறு. இலக்கென்பது கிடைக்கக்கூடிய தொகையாகத்தான் இருக்க வேண்டும். அதேபோல நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஐந்து ஆண்டுகள் காலக்கெடுவும் குறுகிய காலமே. கால அளவு அதிகமாக இருப்பதே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை லாபகரமாக்க உதவும். நீங்கள் கேட்டுள்ளதால் ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு நிறுவனங்களைக் குறிப்பிடுகிறேன். ஹெச்.டி.எஃப்.சி கேப்பிட்டல் பில்டர், ஏ.பி.சி.எல் ப்யூர்வேல்யூ ஃபண்ட், ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட், சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ ஃபோகஸ்டு ப்ளூசிட் ஃபண்ட், இந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் 15-16% வரை எதிர்பார்க்கலாம். ஆனால், உறுதியாகக் கூற முடியாது.”

கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு ஏக்கர் காலி மனையை லே அவுட்டாக மாற்றி, விற்பனைக்கு விட வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்?

கார்த்திகேயன், மணப்பாறை

ஷியாம் சுந்தர், வழக்கறிஞர்

“ உங்களிடமுள்ள காலி மனை, விவசாய நிலமா, இல்லையா என்பது பற்றி நீங்கள் குறிப்பிடப்படவில்லை. விவசாய நிலமென்றால் அதற்கு நீர்ப் பயன்பாட்டிற்கு வழியற்ற சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது அந்த நிலமானது, நீர் வறட்சி மிகுந்த பகுதி என உறுதி செய்யப்பட்டால் அந்த விவசாய நிலத்தை, விவசாயப் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலம் என மாற்றிப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்தபின் சரியாக இருக்கும்பட்சத்தில், அந்த நிலத்தை, விவசாயப் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலம் என்று பெயர் மாற்றுவதற்கான ஒப்புதலை மாவட்ட ஆட்சியர் வழங்குவார். அப்படி ஒப்புதல் வழங்கும்போது அதற்குரிய செயல்பாட்டுக் கட்டணமாக, அந்த நிலத்திற்கான வழிகாட்டல் மதிப்பில் 3%் தொகையை ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அதன் பின்னர், லே அவுட்டுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கு, நகர் ஊரமைப்பு இயக்கக (Directorate of Town & Country Planning (DTCP)) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இணையதள முகவரி http://www.tn.gov.in/tcp/. காலிமனை ஒரு ஏக்கர் எனும்போது, அதில் 10% அளவிலான இடத்தை, சாலை வசதிகளுக்காகக் காலியாக விட்டுவிட்டு, அந்த நிலப்பகுதிகளை மட்டும் (for Open Space Reservation Purposes-OSR purpose) அரசாங்கத்திற்குத் தானப் பத்திரமாக எழுதிக் கொடுக்க வேண்டும். அதன்பிறகு நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு, அந்த நிலம் அமைந்துள்ள பகுதிக்குரிய அரசு அலுவலகத்தில் (பஞ்சாயத்து அல்லது ஊராட்சி போன்று) இதற்குண்டான தொகையைச் செலுத்தி விண்ணப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகே அந்த லே அவுட்டானது பயன்பாட்டிற்கு வரும். அதன் பின் மனை விற்பனையைச் செயல்படுத்தலாம்.”

நான் என்.ஆர்.ஐ. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்காக, எனது என்.ஆர்.ஐ அக்கவுன்ட்டிலிருந்து எனது சேமிப்புக் கணக்குக்கு மாற்றியபின், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறேன். உள்நாட்டில் வருமான வரி கட்ட வேண்டுமா?

வசந்த்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா

“வெளிநாட்டிலிருந்து முதலீடு செய்யும்போது இரண்டு விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒன்று, முதலில் வெளிநாடு வாழ் இந்தியராகப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும் (கே.ஒய்.சி பதிவு). அடுத்ததாக, அப்படிப் பதிவு செய்தபிறகு, உங்களுடைய என்.ஆர்.ஐ அக்கவுன்ட்டிலிருந்து நேரடியாக முதலீடு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், வருமான வரி விஷயங்கள் சீராக, முறையாகச் செயல்படும். இப்படிச் செய்யாமல், சேமிப்புக் கணக்கிலிருந்து முதலீடு செய்வது தவறான அணுகுமுறை. பின்னர் அது கண்டறியப்பட்டால், பிரச்னைகள் வரும். செய்த தவறுக்காக அதிக வரி செலுத்தும்படியும் ஆகலாம். விதிமுறைப்படி முறையாகச் செய்தால், முதலீடு செய்யும் பணத்திற்கு வரிச் செலுத்த வேண்டிய தேவை இருக்காது; லாபத்திற்கு மட்டும், எல்லாரையும் போல வரிச் செலுத்தினால் போதுமானது.”

குடும்பப் பொதுச்சொத்துக்கு (காலி மனை) உரிமை கோரி நான் தொடுத்த வழக்கில், ஆண், பெண் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் சம பங்கு என்று தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகு அந்தப் பொதுச்சொத்தைப் பிரித்து அவரவர் பயன்பாட்டுக்கு மாற்ற, அடுத்து என்னென்ன செய்ய வேண்டும்?

செந்தில்குமார், திருநெல்வேலி

ஜீவா, வழக்கறிஞர்

“தீர்ப்பு வெளியான பின்பு, அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று மனு (Execution Petition - EP) போட வேண்டும். அதன்பிறகு, ஒரு கமிஷனரை இதற்கென கோர்ட் நியமிக்கும். அவர், சார்பதிவாளர் மற்றும் சர்வேயர் மூலமாக அந்தச் சொத்தை அளந்து, பாகப்பிரிவினை செய்வதற்கென இருக்கும் நடைமுறைகளின்படி ஒவ்வொருவருக்கும் உரிய பகுதிகளை எல்லைக் கோடிட்டுக் காட்டுவார். அதன்பின்னர் ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் தனித்தனியே பத்திரப் பதிவு செய்து ஒப்படைக்கப்படும். இந்தச் செயல்பாடுகளுக்கென குறிப்பிட்டத் தொகை செலவாகும். நிறைவேற்று மனு போடுவதைப் பொறுத்தவரை, பொதுவாக வழக்கு தொடுத்தவரே இந்த மனுவையும் தாக்கல் செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால், வழக்கு தொடுத்தவர் என்றில்லாமல் அந்தச் சொத்தில் பங்குதாரர்களாக உள்ள எவர் வேண்டுமானாலும் தாக்கல் செய்ய உரிமையுள்ளது.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.