மனித வாழ்க்கை என்பது நிலையற்றது. காப்பீடு என்பது நம்மால் கணிக்க முடியாத விபத்துகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான். விபத்துக் காப்பீடு (Accident Insurance) என்பது ஒருவரின் விபத்தினாலான இறப்பு அல்லது விபத்தினால் ஏற்படும் ஊனத்துக்கான இழப்பீடு தருவதாகும்.

விபத்து என்பது ஒருவரை இறப்புக்கோ அல்லது ஊனத்துக்கோ தள்ளக்கூடும். இத்தகைய விபத்தினால், ஒருவருடைய வருவாய் ஈட்டும் தகுதிகூட போய்விடலாம். இத்தகைய சூழ்நிலை களிலிருந்து, அவரை விபத்துக் காப்பீடு காப்பாற்றும். ஒருவருக்கு விபத்தினால் அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கக்கூடியது இந்த விபத்துக் காப்பீடு பாலிசி. பகுதி ஊனம், நிரந்தர ஊனம், காயம் ஏற்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்.

விபத்துக் காப்பீடு பலன்கள்

1. இறப்பு நிகழ்தல்

2. கைகள், கால்கள், கண்கள் போன்ற இரண்டு உறுப்புகள் / ஓர் உறுப்பு இழந்தால்

3. நிரந்தர முழு ஊனம், சிறு ஊனம் ஏற்ட்டால், தற்காலிக முழு ஊனம் ஏற்பட்டால்

இந்தப் பலன்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடக்கூடும்.

காப்பீடு பாலிசியின் சிறப்பு அம்சங்கள்

1. இந்த பாலிசியை எடுக்க மருத்துவப் பரிசோதனைத் தேவையில்லை.

2. குறைந்த பிரீமியத்தில் போதுமான காப்பீடு.

3. உலகளாவிய கவரேஜ்

4. இழப்பீட்டை ஓரளவு சுலபமான முறையில் அளிப்பது

தொழில் மற்றும் பணியைப் பொறுத்து இந்த பாலிசியில் பிரீமியம் கணக்கிடப்படும். மருத்துவச் செலவுக்கும் (24 மணி நேரம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால்) இழப்பீடு கிடைக்கும்.

இந்த பாலிசியை தனிநபர் ஒருவர் தனி பாலிசியாகவும் எடுத்துக் கொள்ளலாம். நிறுவனங்கள் அவற்றின் பணியாளர்களுக்குக் குழு காப்பீடாகவும் இந்த பாலிசியை எடுத்துத் தரலாம்.

எப்படி செயல்படுகிறது?

ஒருவர் 10 லட்ச ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு எடுத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சிறு ஊனமாக இருந்தால் கவரேஜ் தொகையான 10 லட்ச ரூபாயில் 50% அதாவது, ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும். அதுவே, நிரந்திர முழு ஊனமாக இருப்பின் 10 லட்ச ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படும்.

பிரீமியம் எவ்வளவு?

விபத்துக் காப்பீடு பாலிசியைப் பொறுத்தவரையில், ஜனதா பாலிசி பிரபலமானது. ஒருவர் 10 வயதிலிருந்து 80 வரை இந்த ஜனதா பாலிசியை எடுத்துக்கொள்ளவும்.

ரூ.25,000 முதல் ரூ. 2 லட்சம் வரைக்கும் இந்த பாலிசியை எடுக்க வருமானச் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை. அதற்கு மேல் எடுத்தால், வருமானச் சான்று தேவைப்படும்.

ஜனதா பாலிசியில் ரூ.25,000 கவரேஜ் கொண்ட விபத்துக் காப்பீட்டுக்கு 15 ரூபாய் மட்டுமே பிரீமியம். ரூ.25,000-ன் மடங்குகளாக கவரேஜ் தொகையை உயர்த்திக்கொள்ளலாம். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கவரேஜ் உண்டு.

நிறுவனங்களின் நிபந்தனைகள், விதிமுறைகளைப் புரிந்துகொண்டு விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டும். ஏனென்றால், இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும் தன்மை கொண்டவை என்பதை மனதில் கொள்வது அவசியம்.

இழப்பீடு பெறுவது எப்படி?

இழப்பீடு (Claim) கோரும் போது, நினைவில் கொள்ள வேண்டியவை...

1. விபத்து குறித்த தக வலை உடனடியாக (Immediate Notice) இன் ஷூரன்ஸ் நிறுவனத் துக்குத் தெரிவிக்க வேண்டும்.

2. க்ளெய் படிவம் மருத்துவச் சான்று, மருத்துவமனை பில்களுடன் இணைத்து தரப்பட வேண்டும்.

3. விபத்தினால் இறப்பு ஏற்பட்டால், நாமினி,இறப்புச் சான்றிதழ்,ஒரிஜினல் இன்ஷூரன்ஸ் பாலிசி, போலீஸ் ரிப்போர்ட் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறுபடக் கூடும்