சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்குப் பணப்பலன் தருவதோடு முற்றுப்பெற்று விடாது. கமிஷனின் பரிந்துரை அடிப்படை யிலேயே பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய நிலைகள் மேம்படும். அடுத்து, தனியார் துறை ஊழியர்களுக்கும் இதன் பலன் போய்ச் சேரும். அதைத் தொடர்ந்து தின ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியம் உயரவும் வழிவகுக்கும். பரிந்துரை, இதற்கு மேலும் பயணித்து அரசின் அடிப்படைப் பதவி முதல் அதிகபட்ச பதவி வரைக்கும் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உயரச் செய்யும்.

உயர்த்தப்பட்ட உச்சவரம்பு

பணிக்காலத்தில் தரப்படும் ஊதியத்துக்கு மட்டுமல்லாமல் ஓய்வுக்காலப் பணப்பலனுக்கும் கமிஷனின் பரிந்துரைதான் அடிப்படை. ஓய்வுக்கால பலனில் முதன்மை யானது பணிக்கொடை (Death - cum - Retirement Gratuity). இதற்கு, இதுவரை இல்லாத ஒரு புதிய சலுகை ஒன்றைத் தந்துள்ளது 7-வது சம்பள கமிஷன். அதாவது, 6-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படியான பணிக் கொடை உச்சவரம்பு ரூ.10 லட்சம். கடந்த பத்தாண்டுகளாக நிலைகொண்டிருந்த இந்த வரம்பை இரட்டித்து, ரூ.20 லட்ச மாக்கியது 7-வது சம்பள கமிஷன். அத்துடன் ஓர் அழகான பரிந்துரையையும் தந்தது.

ரூ.20 லட்சம் என்ற உச்சவரம்பானது அடுத்த பத்தாண்டுகளுக்கு அப்படியே இருந்துவிடாமல், இடைப்பட்ட காலத்திலேயே உயர்த்திக் கொள்ளும் உபாயம் ஒன்றையும் பரிந்துரைத்தது. அதன் படி, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை தரப்படும் அகவிலைப்படியானது, 50 சதவிகிதத்தைத் தாண்டினால், பணிக்கொடை உச்சவரம்பு 25% அதிகரித்து, ரூ.25 லட்சமாக உயரும். இதே அகவிலைப் படி மேலும் உயர்ந்து 100 சதவிகிதத்தைத் தொட்டுவிட்டால், பணிக் கொடையானது தனது உச்ச வரம்பில் 50% உயர்வு பெற்று ரூ.30 லட்சமாக இருக்கும். இதுதான் 7-வது சம்பள கமிஷனின் ஏற்றமிகு பரிந்துரை.

மத்திய - மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அமலாக்கம் செய்யப்பட்டுள்ள பணிக் கொடை பரிந்துரையின் பலன் தனியார் துறை ஊழியர்களும் பயன்பெறும் வகையில், 1972-ம் வருஷத்திய பணிக் கொடை வழங்கும் சட்டத்துக்கான சட்டத் திருத்த (Amendment) மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிராஜுட்டி சட்டம் 1972

கிராஜுட்டி சட்டத்தின்படி (Payment of Gratuity Act 1972) தொழிலகங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், தோட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே கம்பெனிகள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வணிக நிலையங்களில் (shop) பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கொடை பெற்று வருகின்றனர். மேற்கண்ட நிறுவனங்கள் ஒன்றில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் அவர்களுக்குப் பணிக்கொடை தரப்படுகிறது.

பணிக்கொடையின் அளவுகோல்

அவ்வாறு தரப்படும் பணிக்கொடையின் அளவுகோல் (Scale) ஒரு வருடப்பணிக்கு 15 நாள் ஊதியம் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்பதுதான். இதே அளவுகோல்தான் அரசு ஊழியர்களுக்கும். சட்ட வடிவம் மட்டும் சற்றே மாறுபட்டிருக்கும். அதாவது, ஆறு மாதப் பணிக்கு கால் மாத ஊதியம் என்பதே சட்ட வடிவம். அப்படி என்றால், ஓராண்டுக்கான பணிக்கொடை அரைமாத ஊதியம். அரை மாத ஊதியம் என்பதும் 15 நாள் ஊதியம் என்பதும் சமமே!

மேற்கண்ட அளவுகோலின்படி தரப்பட்டு வரும் தனியார்துறை ஊழியர்களுக்கான பணிக்கொடையின் தற்போதைய உச்சவரம்பு பத்து லட்சமாக உள்ளது. இதனை அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.20 லட்சமாக உயர்த்த, திருத்த மசோதா (Amendments) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, உச்ச வரம்பை உயர்த்து வதற்கு மட்டுமல்ல, ஊதிய உயர்வு மற்றும் எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்றாற்போல் பணிக்கொடை உச்சவரம்பை, எந்தச் சட்டத் திருத்தமும் இல்லாமல், மத்திய அரசே உயர்த்தி ஆணையிடவும், மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

உச்சவரம்பு இருவகை

பணிக்கொடையின் உச்ச வரம்பு இருவகையானது. ஒன்று, காலம் சார்ந்த உச்சவரம்பு. மற்றொன்று, பணம் சார்ந்த உச்சவரம்பு.

ஓர் ஆண்டு பணிக்கு அரை மாத ஊதியம் வீதம் அதிகபட்ச பணிக்கொடை 16.5 மாத ஊதியம். அதாவது 33 ஆண்டு பணிக்கானது 16.5 மாத ஊதியம். ஓர் ஊழியர் 42 ஆண்டுகள்கூட பணிபுரிய வாய்ப்பு உண்டு. என்றாலும் பணிக்கொடை யானது அவரது 33 ஆண்டுகால பணிக்கு மட்டுமே தகுதி பெறும். இது பணிக்கொடை யின் காலம் சார்ந்த உச்சவரம்பு. இதில் எந்த மாற்றமும் கிடையாது.

நடைமுறைக்கு வந்துள்ள மாற்றமானது, பணம் சார்ந்த உச்சவரம்புக்கு மட்டும்தான். இதன் பயன் என்னவெனில், உச்ச வரம்பு ரூ.10 லட்சம் என்றிருந்தால், ரூ.60,600 ஊதியம் பெறுபவரும், ரூ.1,21,200 ஊதியம் பெறுபவரும் தமது பணிக் கொடையாக ரூ.10 லட்சம் மட்டுமே பெற்றிருப்பர். உச்சவரம்பு ரூ.20 லட்சம் என்றானதால், ரூ.1,21,200 ஊதியம் பெறுபவரின் பணிக்கொடை 100% உயர்வு பெற்று ரூ.20 லட்சம் ஆகிவிடுகிறது.

அகவிலைப்படி, பணவீக்கம் இவற்றைப் பொறுத்துப் பணிக் கொடை உச்சவரம்பு உயர்த்தப் படுவதால், இந்தச் சமநிலை தொடர வாய்ப்பு நிலைப்படும். சம்பள கமிஷன் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தனியார் துறை ஊழியர்களைப் பொறுத்தவரை, சட்டத் திருத்த மசோதாவும் அவசியமில்லை. எனவே, அரசு ஊழியர்கள் மட்டு மல்ல, தனியார் ஊழியர்களும் இனி மகிழ்ச்சி அடையலாம்!