Published:Updated:

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!
பிரீமியம் ஸ்டோரி
2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

Published:Updated:
2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!
பிரீமியம் ஸ்டோரி
2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

92 வருட வழக்கத்தில் மாற்றம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசித் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தை மாற்றி, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தது  மத்திய அரசாங்கம். அது மட்டுமல்ல, ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன்  இணைத்து, ஒரே பட்ஜெட்டாக சமர்ப்பித்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.   

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

இந்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறை களுக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. சிறு, குறு நிறுவனங்களின் வரியை 25 சதவிகித மாகக் குறைத்தது, பணப் பரிவர்த்தனை யில் முறைகேடுகளைத் தடுக்க ரூ.3 லட்சத்துக்கு மேலான ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை, கார்ப்பரேட் நிறுவனங்களில் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை எனப் பல முக்கியமான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டன.

2018 பட்ஜெட் எப்படி இருக்குமோ!

வாராது வந்த ஜி.எஸ்.டி

2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது ஜி.எஸ்.டி. இது வந்தால் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஆரம்பத்தில் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஓட்டல், சினிமா என்று எங்கு போனாலும் விலை ஏற்றம் பர்ஸைப் பதம் பார்த்தது. ஆனாலும் ஜி.எஸ்.டி-யினால் தொழில் துறையில் மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தன. ஜி.எஸ்.டி எண்ணுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் மூலம் இதுவரை கணக்கில் வராத தொழில்முனைவோர்கள் முறைப்படுத்தப்பட்ட துறைக்குள் வந்தார்கள்.  ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த சில மாதங்களில் மக்களுக்கு அவசியமான பொருள்கள் மற்றும் சேவைகளின் வரி சதவிகிதத்தைக் குறைத்தது மத்திய அரசாங்கம். ஜி.எஸ்.டி-யில் சில குழப்பங்கள் நீடித்தாலும், நாளடைவில் அவை முடிவுக்கு வந்து பாசிட்டிவ் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

அரசு மனது வைத்தால் என்னதான் நடக்காது?

10 ஆண்டுகளுக்குப்பின் தலைநிமிர்ந்த சர்வதேச பொருளாதாரம்

2008-ல் அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு, சர்வதேச பொருளாதார வளர்ச்சியையே கேள்விக்குறியாக்கியது. அது நடந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சர்வதேசப் பொருளாதாரம் மீண்டும் நன்றாக வளர்ச்சியடைய தொடங்கியிருக்கிறது. ஐஎம்எஃப் கணிப்பின்படி, சர்வதேச பொருளாதார வளர்ச்சி விகிதம் 2017-ம் ஆண்டில் சராசரியாக 3.6 சதவிகிதமாக இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. அதன் வளர்ச்சி 10 வருட உச்சத்தை அடைந்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. 2017-க்கான வளர்ச்சி இலக்காக உள்ள 6.5 சதவிகிதத்தைத் தாண்டி அதன் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

இந்த வளர்ச்சி இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!

உலக அளவில் அதிக வசூல் படைத்த முதல் இந்தியப் படம்

அமீர்கான் நடித்து, கடந்த வருடம் வெளியான ‘தங்கல்’ திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் பெற்ற முதல் இந்தியத் திரைப்படமாக விளங்குகிறது. மல்யுத்தத்தில் ஆண்கள் மட்டுமே இருந்துவந்த சமயத்தில் மஹாவிர் சிங்க் போகாட் என்பவர் தன் இரு மகள்களையும் மல்யுத்தப் போட்டிக்குத் தயார் செய்து அனுப்பினார். அவர்கள் இருவரும் இந்தியாவுக்காகச் சர்வதேச மல்யுத்த விளையாட்டு போட்டிகளில் ஜெயித்துப் பதக்கங்களைப் பெற்றனர். இந்த உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘தங்கல்’. அனைத்து மொழிகளிலும் சேர்த்து ‘தங்கல்’ திரைப்படம் ரூ.2,000 கோடி வசூல் சாதனை செய்தது.

அமீர்ஜி, ‘தங்கல்’ மாதிரி இன்னொரு படம் தாங்க!

மக்களைப் பயமுறுத்திய மசோதா

வாராக் கடனால் வங்கிகளைத் திவாலாகாமல் தடுக்கவும், நஷ்டத்திலிருந்து மீட்கவும், ‘வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு 2017’ என்ற மசோதாவை மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்தது. இந்த மசோதா ஆலோசனை நிலையில் இருந்துவரும்போது,  ‘பெய்ல்-இன்’ என்கிற புதிய அம்சம் இதில் சேர்க்கப்பட்டது. இதன்படி, திவாலாகும் நிலையிலுள்ள வங்கிகளைப் பாதுகாக்க, அதன் வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் எடுத்துக்கொள்ளப்படும் என்கிற தகவல் வேகமாக சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். ஏனெனில், இந்தியக் குடிமக்களின் 63 சதவிகித சேமிப்பு வங்கிகளில்தான் இருக்கிறது.  

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

இந்த மசோதாவுக்கு  எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், நிதி அமைச்சகமோ இதனால் மக்களின் டெபாசிட் பணத்துக்கு எந்தப் பங்கமும் வராது என்று கூறிவருகிறது.

சும்மா சொல்லிப் பிரயோஜனமில்லை; மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று சட்டமாக இயற்ற வேண்டும்!

அதிகரித்த டிஜிட்டல் வளர்ச்சி

மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் வளர்ச்சியானது 2017 வருடத்தில் அபரிமிதமாக இருந்தது.  ‘பாய்ன்ட் ஆஃப் சேல்’ பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதால், வங்கிகள் அதன் டெர்மினல்களை 10 லட்சமாக உயர்த்தியிருக்கின்றன. 2017-ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் டெபிட் கார்டுகளை வைத்துச் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே ரூ.2.2 லட்சம் கோடி ஆகும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, அக்டோபரில் மட்டுமே நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 96.5 கோடி ஆகும். இந்தப் போக்கு நீடித்தால் அரசின் டிஜிட்டல் பொருளாதாரக் கனவு நனவாவது வெகு தொலைவில் இல்லை.  ரூ.5,000 வரை பரிவர்த்தனைக் கட்டணம் இல்லை என்றால் நன்றாக இருக்குமே!  

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

தோல்வியடைந்த இணைப்புகள்

2017-ல் நடந்த நிறுவன இணைப்புகளில் ஹெச்.டி.எஃப்.சி-மேக்ஸ் லைஃப் இணைப்பு, ஐ.டி.எஃப்.சி -ஸ்ரீராம் குழுமம், சி.எஸ்.பி-வாட்சா மற்றும் ஆக்சிஸ்-கோட்டக் ஆகிய இணைப்புகள் வெற்றியடையவில்லை. ஹெச்.டி.எஃப்.சி-மேக்ஸ் லைஃப் இணைப்பில் இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒப்பந்தத்துக்கு வரமுடியவில்லை. ஐ.டி.எஃப்.சி- ஸ்ரீராம் குழும இணைப்பில் ஒப்பந்தம் செய்துகொள்வதில் இழுபறி நீடிக்கிறது. சி.எஸ்.பி-வாட்சா இணைப்புத் தோல்வியில் முடிந்தது.

சில இணைப்புகள் தோல்வியில் முடிந்தாலும், பல இணைப்புகள் வெற்றிகரமாக முடிந்திருக்கின்றன என்பதும் உண்மை.

வங்கி மறுமூலதனம் 

வங்கிகளுக்கு இந்த வருடத்தில் அரசு செய்துள்ள மிக முக்கியமான விஷயம், வங்கி மறுமூலதனம் (Recapitalisation). கடனை வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதால், வங்கிகள் வாராக் கடன் சுமையால் செயல்பாடு குறைந்து காணப்படுகின்றன. எனவே, வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி மூலதனத்தை அரசு வழங்க முடிவெடுத்தது. இதில் ஓரளவுதான் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியாகும். மற்றவை வங்கிகளிடமிருந்தே கடனாக வாங்கி வங்கிகளுக்கே மூலதனமாகக் கொடுக்கவிருக்கிறது. சபாஷ்! 

- ஜெ.சரவணன்

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

சரவெடியாக உயர்ந்த சென்செக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை  இந்த வருடத்தில் கண்ட உச்சத்தைப் போல கடந்த காலத்தில் எந்த வருடத்திலும் கண்டிருக் காது. சர்வதேச அளவில், இந்தியப் பொருளாதாரத் தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு முதலீடுகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றன. இதனால் ஜனவரி மாதம் 2-ம் தேதி 26595 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், தற்போது 34 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. நிஃப்டி 8179 புள்ளிகளில் இருந்தது தற்போது 10400க்கும் மேல் உயர்ந்து வர்த்தகமாகிறது.

2017... கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள்!

முகேஷ் அம்பானியின் இலக்கு

ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ்  நிறுவனத்தை உல கின் டாப் 20 நிறுவனங் களுக்குள் கொண்டுவர ஆசைப்படுவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் உற்பத்தி துறை யில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நிலை யில் ஜியோ மூலம் சேவைத் துறையிலும் சாதனை படைக்க தொடங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம் பானியின் 85-வது பிறந்த நாள் மற்றும் நிறுவனம் ஆரம்பித்த 40-வது ஆண்டு விழாவில் பேசும் போது இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார். எரிசக்தி துறையில் முன் னணி நிறுவனமாகவும் உற்பத்தி துறைக்கு தீர்வுகள் அளிக்கும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகவும் மாற வேண்டும் என அவர் தெரிவித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism