Published:Updated:

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

Published:Updated:
இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

“அம்மா, என்னோட ஐ.டி கார்டு எங்கம்மா?” யாழினி கத்தினாள். அதற்கு அவள் அம்மா வசந்தி, “நான் பார்க்கலை; நீ உன்னோட செல்ஃபில் பார்” என்றாள். “டேய், ரமேஷ், நீ எடுத்தியா” என்று தன் தம்பியை நோக்கிக் கத்தினாள். அவன் பதிலேதும் சொல்லாமல் திருதிருவென்று விழித்தான்.  

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

‘‘அம்மா ப்ளீஸ்ம்மா, ஐ.டி. கார்டு இல்லேன்னா உள்ள விடமாட்டாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா...’’ என்று கெஞ்சினாள் யாழினி.

வீடு முழுக்க எவ்வளவு தேடியும் ஐ.டி கார்டு கிடைக்கவே இல்லை. அது இல்லாமலே கல்லூரிக்கு யாழினி கிளம்ப,  10 நிமிஷம் காலதாமதம். வகுப்புக்குள் நுழைந்தவுடன் ஆசிரியரின் கண்ணில் முதலில் பட்டது யாழினி ஐ.டி கார்டு இல்லாமல் இருந்ததுதான். ‘‘போயி பிரின்ஸிபாலைப் பார்த்துட்டு வந்துடும்மா’’ என்று சொன்னார் பேராசிரியர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!யாழினிக்குப் பயம் பிரின்ஸிபாலைப் பார்க்க. வகுப்பாசிரியரிடமே மன்னிப்புக் கேட்டாள். ‘‘ஸாரி மிஸ். ஐ வில்நாட் டு இட் அகெய்ன்’’ என்று கெஞ்சினாள். மனமிறங்கிய ஆசிரியர், சிறு எச்சரிக்கை யோடு அவளை உட்காரச் சொன்னார்.

யாழினி வகுப்பில் உட்கார்ந்த சமயம்,  அவள் அப்பா ருத்ரன்,  தன் பொருள் ஒன்றைக் காணவில்லை என்று வீட்டைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த வசந்திக்கு எரிச்சலோ எரிச்சல். உடனே வீட்டைச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். அவளது தோழி ஆராதனா வேறு இன்று மாலை வீட்டுக்கு வருகிறாள். சிற்பிகளுக் கான மிகப் பெரிய போட்டியில் கலந்துகொள்ள அவள் இங்கு வருகிறாள் என்று நினைத்தபடி யாழினியின் அறையைச் சுத்தம் செய்ய நுழைந்தாள்.

அனைத்து இடங்களையும்  ஒழுங்குபடுத்தி முடித்தபோது நேரம் மாலை ஐந்தாகியிருந்தது. யாழினியும், ரமேஷும் வந்து விட்டனர். வசந்தியின் தோழி ஆராதனாவும் வந்துவிட்டாள். பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தது.  

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

ஆராதனா வசந்தியிடம், “ஏன் வசந்தி ரொம்ப டயர்டா இருக்க” என்றாள். வசந்தி, “இன்னைக்கு வீடு முழுக்க நான் ஒருத்தியே க்ளீன் பண்ணினேன். சரி, அதை விடு, உன்னுடைய கண்காட்சி பத்திச் சொல்லு” என்றாள்.

“இது மிகப்பெரிய கண்காட்சி. இதுல கலந்துக்க வெளிநாட்டி லிருந்தெல்லாம் வருவாங்க, இத பாத்தியா... இந்தக் கல் அதுக்காகதான் எடுத்து வந்திருக்கேன்” என்றாள். “என்னடி இது ரொம்பச் சின்னதா இருக்கு, அதோட கோணல் மானலா இருக்கு, நல்ல கல்லா எடுத்து வந்திருக்கலாமே” என்றாள்.

ஆராதனா சிரித்துக்கொண்டே ‘‘சரிடி, அடுத்ததடவ நல்ல கல்லா பார்த்து எடுத்துட்டு வர்றேன்” என்றவள், ஒரு புதிய சிற்பத்தைச் செய்யத் தொடங்கினாள். சில மணி நேரத்துக்குப் பின் அவள் கொண்டுவந்த கல் அழகான சிற்பமாக மாறியது. யாழினியும், ரமேஷும் அந்தச் சிற்பத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். ‘‘எப்படி ஆன்ட்டி உங்களால இதைச் செய்ய முடிஞ்சது?’’ என்று கேட்டார்கள்.

“சிலைக்கு மேல ஒட்டியிருந்த அதிகபடியான கல்லை எடுத்துட்டேன். இப்ப எனக்குத் தேவையான சிலை கிடைச்சிடுச்சு” எனச் சொல்லிவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள். “ஆமா, நீ காலையில ஐ.டி கார்டைத் தேடினியாமே... கிடைச்சுதா?” என்று கேட்டாள்.

யாழினி, “ஆமாம் ஆன்ட்டி. எங்க தேடியும் கிடைக்கல” என்றாள். “ஏன் கிடைக்கலைன்னு யோசிச்சியா..? நம்ம வீடுங்கறது இந்தக் கல்லு மாதிரிதான். இந்தக் கல்லுல எப்படித் தேவையில்லாத பகுதியை நீக்கிட்டா, அழகான சிலை கிடைக்குமோ, அந்த மாதிரி நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற நமக்குத் தேவையில்லாதவற்றை நீக்கிட்டா நமக்குத் தேவையானது கிடைச்சுடும், சரியா” என்றாள்.

ஆராதனா சொன்னதை வசந்தியும் கேட்டுக்கொண்டிருந்தாள். மறுநாள் ஆராதனா கிளம்பும்போது, “இதையெல்லாம் பார்த்தியா?’’  என்று அவள் காட்டிய இடத்தில் சிலபல மூட்டைகள் இருந்தன. ஆராதனா அதைப் பார்த்தவாறு, “என்னடி இதெல்லாம்..?” என்றாள். “நேற்று நீ செதுக்கியது சிற்பம் மட்டுமல்ல, எங்கள் உள்ளங்களையும்தான். எங்க வீட்டுல நாங்க சேர்த்து வெச்சிருந்த பயனில்லாத பொருள்கள்தான் இவை’’ என்றாள் வசந்தி.

வசந்தியின் குடும்பத்தைப் போல்தான் பல குடும்பங்கள் இருக்கின்றன. நமக்குத் தேவையானதைத் தவிர்த்து, தேவையற்ற குப்பைகளைச் சேர்த்து எப்போதும் நம்முடனே வைத்துக்கொண்டுள்ளோம். இதனால் பல நேரங்களில் நமக்குத் தேவையானதை நமக்குத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த இயலாமல் போகிறது.

நாம் பணம் வைக்கத்தான் பர்ஸ் வைத்திருக்கிறோம். ஆனால், பணத்தைத் தவிர மற்ற எல்லாம் இருக்கும். தேவையில்லாத பில்கள் மற்றும் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்த ரெசிப்ட் மாதிரியான விஷயங்கள்தான். எத்தனையோ பொருள்களை நாம் வாங்குகிறோம். அவற்றில் பலவற்றைப் பயன்படுத்துகிறோம். பயன்படுத்தி முடித்த பொருள்கள், ரிப்பேராகி திரும்பப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் பொருள்கள், நல்ல நிலையில் இருந்தும் பயன்படுத்த முடியாத பொருள்கள் எனப் பல பொருள்களை நாம் வீட்டுல மூட்டையாக வெச்சுருக்கோம். இனிமேல் நமக்குத் தேவைப்படாத பொருள்களைக் காயலாங்கடையில் போட்டு ஒழித்துக்கட்டிவிடுவதுதான் நல்லது. இதனால் வீடும் சுத்தமாகும்; புதுப் பொருள்களை வாங்கி வைப்பதற்கு இடமும் கிடைக்கும்.

ரிப்பேரான பொருள்களை உடனே சரிபார்த்துப் பயன்படுத்துவதுதான் சரி. அப்படி சரிசெய்ய முடியவில்லையெனில், அந்தப் பொருளைக் கிடைக்கிற விலைக்கு விற்றுவிடலாம். அதை விட்டுவிட்டு வீட்டின் மூலையிலேயே போட்டு வைப்பதில் என்ன பிரயோஜனம்?

முகநூலிலும் அப்படித்தான். நமது புகைப்படத்தைப் பதிவிட்டு விட்டு அதற்கு யாரேனும் லைக் போட்டிருக்கிறார்களா என்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பார்க்கிறோம். காலையில் எழுந்தவுடன் குட் மார்னிங், படுக்கச் செல்லும்போது குட் நைட் என நமது நேரத்தை முடிந்த அளவு வீணாக்குகிறோம். இதுமாதிரியான சமூக வலைதளங்களை  முற்றிலும் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல. அதற்கான நேரத்தைக் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள் என்பதே எனது எண்ணம். புறத்தில் சேர்ப்பது மட்டுமே குப்பைகளல்ல. இது மாதிரியான விஷயங்களும் நம் மூளையில் சேரும் குப்பைகளே.

பழுத்து இலைகளை உதிர்த்த மரமே, பிறகு பசுமையாகக் காட்சித்தரும். தேவையற்ற குப்பைகளை அகற்றிய இல்லமே பளிச்சிடும். உங்கள் இல்லங்களிலிருந்தும், உள்ளங்களிலிருந்தும் முள்செடிகளை வெட்டித் தள்ளுங்கள். அதனுள் ஒளிந்திருக்கும்  பாதை புலப்படும். உங்கள் இலக்கு எதுவென்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்!

(காலம் வெல்லும்)

படம்: ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 7 - வெட்டித்தள்ளு!

ஆன்லைனில் கலக்க வரும் பதஞ்சலி!

எஃப்.எம்.சி.ஜி துறை யில் கலக்கிவரும் பதஞ்சலி நிறுவனம், தனது அனைத்துத் தயாரிப்பு களையும் ஆன்லைனுக்கு கொண்டுவரத் திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக எட்டு முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பதஞ்சலி. இந்தப் பேச்சு வார்த்தையில் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா கலந்துகொண்டு பேசுகின்றனர். ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் சில பொருள்கள் ஆன்லைனில் விற்கப்பட்டாலும், இனி அனைத்துத் தயாரிப்பு களையும் விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது பதஞ்சலி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism