Published:Updated:

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

Published:Updated:
இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?
பிரீமியம் ஸ்டோரி
இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

வினோத்துக்கும், உஷாவுக்கும் இடையே அன்றும் வழக்கம்போல வாக்குவாதம். டிவி ரிமோட்டை யார் இயக்குவது என்பதில்தான் பிரச்னை. ஒரு சேனலைப் பார்த்தாலும் ஒழுங்காக பார்க்க வேண்டும் என்பது உஷாவின் எண்ணம்.  எல்லா சேனலையும் மேய வேண்டும் என்பது வினோத்தின் பழக்கம். ஒரே டிவிதான், ஒரே ரிமோட்தான். எனவேதான் இந்த வாக்குவாதம்.

தான் சொல்கிற சேனலைத்தான் பார்க்க வேண்டும் என உஷா வலியுறுத்தக் காரணம், அவள் சொன்ன சேனலில் ஒளிபரப்பாகவிருந்த பட்டிமன்றம். அதில் அவளது மாமாவின் மகன் பேசப் போகிறான். ‘விஷன் 2020 சாத்தியமா?’ என்பதே பட்டிமன்றத் தலைப்பு. சாத்தியம் என ஒரு அணியும், சாத்தியமில்லை என இன்னொரு அணியும் பேசத் தயாராக இருந்தனர்.

  பட்டிமன்றம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. நடுவர் இரண்டு அணிகளின் உறுப்பினர்களை அறிமுகம் செய்துவிட்டுப் பேச ஆரம்பித்தார். ‘‘பொதுவா இரு அணியிலிருந்தும் உறுப்பினர்கள் மாறி மாறிப் பேசுவார்கள். ஆனா, இன்று ஒரு அணியைச் சார்ந்த அனைவரும் பேசிமுடித்த பிறகே அடுத்த அணி உறுப்பினர்கள் பேசுவார்கள்’’  என்றவர், ‘விஷன்-2020 சாத்தியமில்லை’ என்கிற அணி உறுப்பினர்களை முதலில் பேச அழைத்தார்.

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

“ஏண்டி, உங்க மாமா பையன் ரிஷபன்  பேசுறதைக் கேக்குறதுக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ணணும்போல இருக்கே!’’ என்று நொந்து கொண்டான் வினோத். ஆனால், உஷா முறைத்த முறைப்பில் சட்டென்று அமைதியானான்.

முதலில் பேசவந்தவர் விஷன்-2020 சாத்தியமே இல்லை என்று ஒரே போடாகப் போட்டார். ‘‘என்னடி இவரு, எடுத்த எடுப்பிலேயே இப்படி நெகட்டிவா பேசுறாரு?’’ என்றான் வினோத். ‘‘அவரு எந்த டீம்னு தெரியும்ல. அவரு எப்படி பாசிட்டிவா பேசுவாரு?’’ என்று உஷா கேட்க, வினோத் அமைதியானான்.

முதல் நபர் பேசி முடித்தபின் இரண்டாம் நபர் மைக்கைப் பிடித்தார். “சினிமாவினால் கெட்டிருக் கும் சமுதாயத்தினால் எப்படி விஷன்-2020 என்பது சாத்திய மாகும்?  நல்ல கருத்துள்ள படங்கள் ஒருசில வருகின்றன... நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், பலரும்  கருத்தற்ற, வெறும் பிம்பங்களும் வெற்று வசனங்களும் கொண்ட படங்களையே எடுக்கின்றனர், அதைப் பெரும்பான்மையான மக்களும் விரும்புகின்றனர். சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம். அதில் போய் ஏன் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். எல்லோரும் இப்படி யோசித்தால் விஷன்-2020 எப்படிச் சாத்திய மாகும்?’’ என்று கேட்டு விட்டு, உட்கார்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?


அடுத்து விளம்பரம் வந்தது. அது முடிந்தபின் அடுத்தவர் பேசத் தொடங்கினார்.  ‘‘விவசாயம் நலிவடைந்து விட்டது. விவசாயி களின் வாழ் நிலையும் மோசமாகி கொண்டு வருகிறது. விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். ஒருசிலர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித் தாலும், நம்மில் எத்தனை பேர் களம் இறங்க தயாராகயிருக்கிறோம்? அவரவர் தட்டில் உணவு இருக்கும் வரை அதனை உற்பத்தி செய்பவர் களின் பட்டினியைப் பற்றிய கவலை இங்கு யாருக்கும்  இல்லை. உண்மை இப்படியிருக்க, எப்படி இந்த நாட்டில் விஷன்-2020 சாத்தியமாகும்?’’ என்று முழங்கி விட்டு, உட்கார்ந்தார்.

வினோத் உஷாவைப் பார்த்தான். ‘‘ஏம்மா, இந்த டீம் ஆளுங்க பேசுறதைப் பார்த்தா உங்க மாமா பையன் பருப்பு வேகுமா?’’ என்று கிண்டலாகக் கேட்க, ‘‘கொஞ்சம் பேசாம டிவியைப் பாக்குறீங்களா” என்று டென்ஷனாகப் பேசினார்.

அடுத்து, விஷன் 2020 சாத்தியமே என்கிற அணியின் உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். இந்த அணி உறுப்பினர்கள் வைத்த ஒவ்வொரு வாதமும் பலத்த கரவொலியை ஏற்படுத்தியது. கடைசியில் ரிஷபன் பேசத் துவங்கினான். கல்லூரியில் இளங்கலை பொருளாதாரத்தில்  மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் அவன்.

‘‘சிந்தனை பெரிதாக இருந்தால் தான் விஷன்-2020 சாத்தியமாகும். சிந்தனைகள் இலக்கில்லா இறகு களாய் இருப்பதைவிட, சிகரம் தொடத் துவங்கும் சிறகுகளாய் விரிய வேண்டும். குழந்தைகள் தொடங்கிப் பெரியவர்கள் வரை அவர்களின் புத்தியைப் பட்டை தீட்டி கூர்மையாக்கினால், விஷன்-2020 சாத்தியமே. நம்மிடம் சிந்தனை இருக்கிறது. அதனை விரி வாக்குங்கள், சிகரத்தினை அடையுங்கள்.

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

நிலவை வெறும் கண் குளிர்ச்சிக் காகப் பார்ப்பவர்கள் மத்தியில், அதனை அடைய துடிப்பவர்கள் தான் சாதனை படைக்கிறார்கள். எந்தச் செயலைச் செய்வதற்கும் சமூகத்தைக் காரணம் காட்டிடும் மனிதர்கள் மத்தியில், சாதிப்பதற்குச் சமூகம் தடையில்லை என்று வாழ்பவர்கள் சாதிக்கின்றனர்.

எப்போதும் நல்லதை மட்டுமே பேசுங்கள். நாம் செய்கின்ற செயல் மட்டுமல்ல, சொல்கின்ற சொல்லும் நல்லவையாக இருந்தால் அது கேட்பவருக்கு ஊக்கமும், பயனும் தருவதுடன், சொல்பவருக்கும் அதன் பயன் கிடைக்கும். நம் எண்ணங்களே நமது சொல்லாக வெளிப்படும், நம் சொற்களே செயல்வடிவம் பெறும்.  ஒப்புக்கொண்ட வேலையைச் செய்து முடிக்க முடியாமல் சோர்ந்துபோகாதீர்கள். அது உங்களை வியாதியில்தான் வீழ்த்தும். தோல்வி யடைந்தவர்களின் வாழ்கையை ஆராய்ந்தால், அவர்கள் மனம் இறந்து சிந்தனை உறைந்தவர்களாகவே இருப்பார்கள். இதுதான் தாழ்ந்து போவதற்கான முதல்படி.

நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன், தங்கம் வென்றார். அவர் தன்னை ஒரு மாற்றுத்திரனாளி என்றோ, தன்னால் எதுவும் இயலாது என்றோ நினைத்துச் சோர்ந்திருந்தால் வெற்றியிலக்கை அடைந்திருக்க இயலாது. அவர் தன்னையெண்ணி சோர்ந்து போகவில்லை. உயரிய எண்ணங்கள் வளர்த்தார், வெற்றியை அடைந்தார். இன்று இந்த உலகம் அவரை உற்று நோக்குகிறது.

நான்கு வகை காரணங்களால் நாம் சோர்ந்து போகிறோம் அதைத் தவிர்த்தால் விஷன்-2020 சாத்தியமே. அவை, 1. என் உடல் நலம், மனநலம் சரியில்லை என்னும்போது. 2. ‘உனக்கு அனைத்தும் சாதகமாய் இருக்கிறது, எனக்கு இல்லை’ என்ற ஒப்பிட்டுப் பார்க்கும்போது. 3. வயதாகிவிட்டது; இனி சாதித்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றும்போது. 4. எப்போதும் பிறரால்தான்தான் இப்படி இருப்பதாய் எண்ணும்போது.

இதிலிருந்து விடுபட நான்கு வழிகளைச் சொல்கிறேன். 1. உனக்கென நல்கருத்துகளும், கொள்கைகளும் வகுத்துக் கொள், 2. உன் கருத்துககளை நோக்கி நீ பயனப்படு, முயன்றவரை மற்றவர்களையும் அந்தப் பாதையில் வழிநடத்து, 3. அவர்கள் பயணிக்கும் பொழுது அவர்களுக்கு நீ உறுதுணையாக இரு, 4. உன்னுடன் வருபவர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும், அவர்களுக்குத் தலைமை பொறுப்பைக் கொடுத்து அடுத்தவர்களை வழிநடத்தும் சுதந்திரத்தைக் கொடு. இதையெல்லாம் செய்தால் விஷன்-2020 சாத்தியமே’’ என்று பேசி முடித்தபோது, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, உஷாவும், ஏன் வினோத்தும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

நடுவர் பேசத் துவங்கினார். ‘‘விஷன்-2020 என்பது சாத்தியமே. நாடு நமக்கு என்ன செய்தது என்று நினைப்பது எஸ்கேப்பிஸம். நாட்டுக்காக நாம் செய்ய நினைக்கும் எல்லா நல்ல விஷயங்களும ஹீரோயிஸம். எல்லோரும் ஹீரோக்களாக மாறினால், விஷன்-2020 சாத்தியமே’’ என்று  சொல்லி, கூட்டத்தை முடித்தார்.

‘‘உஷா, உங்க மாமா பையன் பிச்சு வாங்கிட்டானே!’’ என்று வினோத் சொல்ல, ‘‘பெறகு, அவன் எங்க மாமா பையன்ல’’ என்று உஷா பெருமைப்பட, அந்த சமயத்தில் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிக் கொண்டிருந்தான் வினோத்.

(காலம் வெல்லும்)

படம்: ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா?

தங்கம் இறக்குமதி குறைய என்ன காரணம்?

நம் நாடு இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் நம் நாடு மொத்தம் 30 டன் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2017 ஜனவரியில் நாம் 47.9 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. கிராமப் புறங்களிலும், சிறு நகரங் களிலும் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துபோனதே வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப் படுவது குறைய முக்கியக் காரணம் ஆகும். தவிர, கடந்த ஓராண்டில் தங்கம் 4.8 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே லாபம் தந்துள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism