Published:Updated:

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?

கேள்வி - பதில்

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?

கேள்வி - பதில்

Published:Updated:
திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?
திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?

வங்கிக் கடன் மூலம் வாங்கியுள்ள கார் திருடு போய்விட்டது. இ.எம்.ஐ இன்னும் சில தவணைகள் பாக்கி உள்ளன. க்ளெய்ம் செய்யும் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் என்னிடம் கொடுக்குமா அல்லது கார் கடன் வழங்கிய வங்கியிடம் தருமா?

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



மேத்யூஸ், நாகர்கோவில்


பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்


‘‘கார் கடன் முழுமையாகக் கட்டப்படாமல் தவணைகள் மீதமிருப்பதால், இன்ஷூரன்ஸ் நிறுவனமானது, இன்ஷூரன்ஸ் தொகையை, கார் கடன் வழங்கிய வங்கிக்கே அளிக்கும். அந்த வங்கியானது, கார் உரிமையாளர் செலுத்த வேண்டிய மீதித் தவணைகளுக்கான தொகையைக் கணக்கிட்டு, அதைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையை வங்கிக்குப் பரிமாற்றம் செய்வார்கள். எனவே, கார் உரிமையாளரான உங்களுக்கு நேரடியாக இன்ஷூரன்ஸ் தொகை கிடைக்காது.’’

பங்குச் சந்தை உச்சநிலையில் இருக்கும்போது ஸ்மால்கேப் பங்குகளில் முதலீட்டைத் தொடரலாமா?

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?



சக்திவேல், நெய்வேலி

எம்.எஸ்.ஓ. அண்ணாமலை,  பங்குச் சந்தை ஆலோசகர்


‘‘பங்குச் சந்தை உச்சநிலையில் இருக்கும்போது, அது ஒரு நிலைத் தன்மைக்கு வரும்வரை காத்திருந்து அதன்பின் முதலீட்டைத் தொடரலாம். இது உங்களுக்குச் சரிப்படாவிட்டாலோ அல்லது   உங்கள் முதலீட்டு விதிமுறைகள் அதற்கு இடம்கொடுக்காவிட்டாலோ  பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும்போது முதலீட்டு  அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.’’

ரூ.10 லட்சத்தை ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 என ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்கும்விதத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன். முதலீட்டிலிருந்து எடுக்கும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டுமா?

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?


ராஜேந்திரன், பட்டுக்கோட்டை

எஸ்.சதீஷ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘ரூ. 10 லட்சம் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டதே. ஆனால்,  உங்களின் மொத்த வருமானம் குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.2.50 லட்சத்தைவிடக் குறைவாக இருந்தால் வரி கட்டத் தேவையில்லை. எனவே, உங்கள் மொத்த வருமானத்தைப் பொறுத்து அந்தத் தொகைக்கு வரி கட்ட வேண்டிவரும். அதேபோல், முதலீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்தை எப்படி சம்பாதித்தீர்கள் என்கிற விவரத்தையும் முறையாகக் கணக்கில் காட்டிவிட்டால் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.’’

எனது வங்கி வைப்பு  ரூ.5 லட்சம், அடுத்த மாதம் முதிர்வடைகிறது. அடுத்த ஒரு வருட காலத்திற்கு இந்தத் தொகையை எதில் முதலீடு செய்தால் அதிகபட்ச வருவாய் கிடைக்கும்?

ரஞ்சித், கோபிச்செட்டிபாளையம்

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?



என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்


‘‘ஓராண்டு கால முதலீடு என்கிறபோது சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. குறுகிய கால கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வைப்பு நிதியில் முதலீடு செய்தால், ரிஸ்க் இல்லாத வருமானத்தைக் கொடுக்கும். குறுகிய கால ஃபண்டுகள் என்கிறபோது,  டி.எஸ்.பி. பி.ஆர். மணி மேனேஜர் ஃபண்ட் அல்லது   ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ஃப்ளெக்ஸிபிள் இன்கம் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அதிக வருவாயை எதிர்பார்த்தால், அதற்கேற்ப அதிகப்படியான ரிஸ்க்கையும் சந்திக்கும் துணிவு வேண்டும். எனவே, அத்தகைய துணிவு இருந்தால், வேறு சில ரிஸ்க்கான ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். ஆனால், மூலதனம் மற்றும் வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை.’’

நான் டேர்ம்  இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். பாலிசிதாரரின் வயது ஏற ஏற ஒவ்வொரு வருடமும் பிரீமியம் அதிகரிக்குமா?

திருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி?



விஸ்வநாதன், திருமங்கலம்

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ்  ஆலோசகர்


‘‘டேர்ம் இன்ஷூரன்ஸில் வயது ஏறுவதற்கும் பிரீமியம் தொகைக்கும் தொடர்பில்லை. பிரீமியம் தொகை அதிகரிக்காது. பாலிசி எடுக்கும்போது என்ன பிரீமியம் இருக்கிறதோ, அதே தொகைதான் கடைசி வரைக்கும் இருக்கும். இளம் வயதிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிடுவது நல்லது.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism