Published:Updated:

சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்துக்கு டெமிங் விருது!

தெ.சு.கவுதமன்
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்துக்கு டெமிங் விருது!
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்துக்கு டெமிங் விருது!

சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடேட் நிறுவனத்தின் 17 ஆலைகளின் பல்வேறு தயாரிப்புகளுக்காக `டெமிங் விருது' வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய விஞ்ஞானிகள் & பொறியாளர்கள் அமைப்பின் சார்பாக, தரத்துக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய கார்ப்பரேட் நிறுவனம் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடேட் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விருதைப் பெறும் முதல் பெண் எம்.டி-யான ஆரத்தி கிருஷ்ணா இதுகுறித்து கூறும்போது, "கடந்த ஆறே ஆண்டுகளுக்குள், கார்கள், வணிகரீதியிலான வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் விமானங்களுக்குத் தேவையான இயந்திர பாகங்களை காஸ்டிங் & ஃபோர்ஜிங் தொழில்நுட்பத்தில் தரமாகத் தயாரித்த சாதனைக்காக இந்த விருதைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதானது, எங்களது ஆலைகளில் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிப்புகளை உருவாக்கும் நடைமுறையை உறுதிப்படுத்தியுள்ளது. தரத்தை முதன்மையாகக்கொண்ட எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிந்துகொள்வதற்கு இந்த விருது ஒரு சாட்சியாக உள்ளது. எங்கள் நிறுவனப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் சேர்ந்து எங்களது இலக்கை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்தியுள்ளது" என்றார்.