Published:Updated:

‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்!’ - தர்மேந்திர பிரதான்

‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்!’ - தர்மேந்திர பிரதான்
‘பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு சென்டிமென்ட் தான் காரணம்!’ - தர்மேந்திர பிரதான்

பெட்ரோல் விலையேற்றம், தற்போதைய பா.ஜ.க அரசுக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ள சூழலில், இதற்கு சென்டிமென்ட் தான் காரணமென்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுக் கருத்தைக் கூறியுள்ளார். 

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் மூன்றாவது இடத்தில் இருக்கும்  இரான் மீது அமெரிக்கா தொடுக்கும் வர்த்தகத்தடைகள் காரணமாக, எண்ணெய் விலை ஏற்றத்தில் இருக்கிறது. இன்னொருபக்கம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிவடைந்துவருகிறது. இச்சூழலில், வரும் நவம்பர் 4-ம் தேதியிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய  இரானுக்கு அமெரிக்கா விதிக்கும் தடை,  நடைமுறைக்கு வர உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு மாற்று ஏற்பாடுகளை யோசித்துவருகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட மற்ற நாடுகளிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு முயற்சி எடுத்துவருகிறது.


இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, "ஈரான் மீதான அமெரிக்காவின் தடை இந்த பெட்ரோலிய விலை உயர்வுக்குக் காரணமல்ல. நமக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிசெய்யும் முக்கியமான சப்ளையரை இழப்பதால் ஏற்படும் சென்டிமென்ட் எண்ணம்தான் இந்த விலையேற்றத்துக்குக் காரணம்" என்றார். இத்தகைய சென்டிமென்ட் விஷயங்கள், பங்குச் சந்தையைப் பாதிப்பது வழக்கம். பெட்ரோல் விலையேற்றத்துக்கு,  இரானுக்கு தடை, கச்சா எண்ணெய் சப்ளை குறைவு, நம் நாட்டில் பெட்ரோலியப் பயன்பாடு அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.