Published:Updated:

`ஆதார் தகவல்களை நீக்குங்கள்!’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்

`ஆதார் தகவல்களை நீக்குங்கள்!’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்
`ஆதார் தகவல்களை நீக்குங்கள்!’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆதார் தகவல்களைப் பெறுவதற்கு எவ்வித சட்ட அனுமதியும் இல்லை என்று கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் ஆதார் தகவல்களை நீக்குவதற்கான நடவடிக்கையை முதலில் ஆதார் ஆணையம் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது, டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை நீக்கும் நடவடிக்கையில் ஆதார் ஆணையம் இறங்கியுள்ளது.  

இதுதொடர்பாக அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களது வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆதார் e-KYC முறையில் பெறப்பட்ட ஆதார் தகவல்களை நீக்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இனிவரும் காலத்தில் ஆதார் எண்கள் பெறப்படுவதைக் கைவிடுவதற்கான செயல்திட்டம் குறித்து தெரிவிக்கும்படி ஆதார் ஆணையம் கூறியுள்ளது. இந்த ஆதார் e-KYC முறையானது, வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இ-வாலட்கள் எனப் பல்வேறு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருந்தது. ஆதார் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ள வங்கிகளல்லாத டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களின் பட்டியலில் பே டிஎம் நிறுவனம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்துவந்தன. தற்போது அவற்றை இழக்க நேர்வதால் அவர்களின் வணிகத்தைப் பெரிதும் பாதிக்கும் எனத் தெரிகிறது.