. க.டந்த வாரத்தில் பிஸினஸ் செய்தித்தாள்களில் பெரும் பங்கு இடத்தை அடைத்தது ஐ.ஐ.பி. டேட்டாதான். நம் நாட்டின் தொழில் துறை உற்பத்தி ஏறியிருக்கிறதா, இல்லை இறங்குகிறதா என்பதை எடுத்துச் சொல்வதுதான் இந்த ஐ.ஐ.பி. டேட்டா (இண்டெக்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரியல் புரொடக்ஷன் என்பதன் சுருக்கம்தான் ஐ.ஐ.பி.). கடந்த திங்கள்கிழமை வெளியான ஐ.ஐ.பி. டேட்டாபடி, சென்ற இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் துறை உற்பத்தி குறைந்துள்ளது..
கடந்த அக்டோபர் மாத ஐ.ஐ.பி. -5 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதாவது, அக்டோபர் (2010) மாதத்துடன் ஒப்பிடும்போது 5% சரிந்திருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம். குறிப்பாக, கேப்பிட்டல் குட்ஸ் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடும்போது 25 சதவிகிதம் சரிந்திருக்கிறது.

இதற்கு பலவிதமான காரணங்களை தொழில் துறையின் முக்கிய புள்ளிகள் சொல்கிறார்கள். முதலாவது, கடந்த வருட அக்டோபர் மாதத்தில் நல்ல வளர்ச்சி இருந்தது. அந்த வளர்ச்சி அதிகமாக இருப்பதினால் இந்த வருட வளர்ச்சி மிகவும் குறைந்ததுபோல் இருக்கிறது. இரண்டாவது, வட்டி விகிதம். ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பலமுறை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது பணவீக்கம் குறையும் என்றாலும் நாட்டின் வளர்ச்சியும் குறையும். அதாவது, பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது பணவீக்கமும் உயரும். ஆனால், நாட்டின் வளர்ச்சியைவிட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே முக்கியம் என்று நினைக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

இப்படி பலமுறை வட்டி விகிதத்தை உயர்த்தியதினால், கடந்த ஒரு வருடத்தில் எந்த நிறுவனமும் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. இதனால், உற்பத்தி பெரிய அளவில் குறைந்திருக்கிறது. ஆனால், உற்பத்தி குறைந்தாலும் நம் தேவை குறையவில்லை. இதன் காரணமாக அதிகளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படவே, அதிகளவு இறக்குமதி செய்தோம். இதனால், ரூபாயின் மதிப்பு அதிகமாகச் சரிந்தது. ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு இது மட்டுமே காரணம் இல்லை என்றாலும், இதுவும் ஒரு காரணமாகவே வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை ரிசர்வ் வங்கி அறிவித்த சில நடவடிக்கைகளால் ரூபாயின் மதிப்பு உயர ஆரம்பித்திருக்கிறது. சிலர் இதை ஒரு தற்காலிக நடவடிக்கை என்று சொன்னாலும், இதுவே ரூபாய் சந்தித்த அதிக சரிவாக இருக்கலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் பலரிடமும் பேசினோம். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே பதிலைதான் சொன்னார்கள்.

வட்டி விகிதம் உயர்ந்தது ஒரு காரணமாக வைத்துக் கொண்டாலும், அதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக எந்தவிதமான பெரிய, புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அறிவித்த பல திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை. அந்த திட்டங்களுக்கு ஆகும் அதிக நிதியையும் கொடுக்க முடியவில்லை. இதற்கு காரணம், தொழில் துறை சீர்திருத்தங்கள் நடக்காததே என்கிறார்கள் அவர்கள்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பு கூட்டம் நடந்தது. கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.) குறைத்து பணப் புழக்கத்தை அதிகரிக்கலாம்; பணவீக்கம் குறைந்ததால் வட்டி விகிதத்தை 0.50 சதவிகிதம்வரை குறைக்க வாய்ப்பிருக்கிறது என்கிற யூகங்கள் பலமாக அடிப் பட்டாலும், அதுபோல எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் தற்போதைய நிலையை அப்படியே தொடர போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரிசர்வ் வங்கியினால் வட்டி விகிதங்களை ஏற்ற முடியும் அல்லது குறைக்க முடியும். ஆனால், ஒருபோதும் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. அது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. புதிய தொழிற் சாலைகளை அமைப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இன்ஃப்ரா துறைக்கு அதிக முதலீடுகளை கொண்டு வருவது போன்றவற்றைச் செய்யும்போதுதான் நாட்டின் வளர்ச்சி இருக்கும் என்று சொன்ன அவர்கள், மேலும் சில விஷயங்களையும் சொன்னார்கள்.

தற்போதைய நிலையில் பணவீக்கம் கட்டுக்குள்தான் இருக்கிறது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக வட்டி விகிதங்கள் அப்படியேதான் தொடர்கிறது. பணவீக்கம் இன்னும் குறைந்த பிறகே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும். எப்படி இருந்தாலும், வளர்ச்சி என்பது ஒரே இரவில் வந்துவிடாது. அதற்கு இன்னும் சில மாதங்கள்கூட ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

தாமதமாக அளிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று சொல்வார்கள். அது போலத்தான் சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவும். மத்திய அரசு கடந்த சில மாதங்களாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால்தான் தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் தான் புதிய பாடங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அப்படி ஒரு நெருக்கடி யான சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம். மத்திய அரசு எடுக்கும் துணிச்சலான முடிவில்தான் இந்திய தொழில் துறையின் எதிர்காலமே இருக்கிறது.

செய்யுமா இந்த அரசு?

- வா.கார்த்திகேயன்