Published:Updated:

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

Published:Updated:
ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

யில்வே துறையில் ஒரு லட்சம் பணியிடங் களுக்கு மூன்று கோடிப் பேர் விண்ணப்பித்திருப்பது ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பணியிடத்துக்கு சுமார் 300 பேர் போட்டியிடுகின்றனர். 17,849 தொழில்நுட்பப் பணிகளுக்குப் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு, ப்ளஸ் டூ வரை படித்திருந்தாலே போதும். இதில், ரயிலை இயக்கும் உதவி லோக்கோ பைலட் பணிக்கு மட்டுமே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வேலைகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்க என்ன காரணம், இந்தப் போக்கு சரியானதா என சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் தலைவர் எஸ்.கணபதி சுப்ரமணியனிடம்  கேட்டோம்.

``நம்முடைய கல்வி, வேலைவாய்ப்புக்குச் செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தைத் தொடங்குவது குறித்தோ, நிறுவனத்துக்கான மூலதனத்தைப் பெருக்குவது குறித்தோ கற்றுத் தரப்படுவதில்லை. பொறியியல் அல்லது இதர படிப்புகள் படித்தவுடன் வேலைக்குப் போக வேண்டும் என்ற அடிப்படை யில்தான் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இதனால் இந்தியாவில் நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எளிதானதல்ல என்கிற கண்ணோட்டத்திலேயே மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

ஒரு நிறுவனத்தைத் தொடங்க பத்து வருடங்கள் உழைக்க வேண்டும் என்றால், அதற்கான பொறுமை நம் இளைஞர்களிடம் இல்லை. வங்கியும் எளிதில் அணுக முடியாத அளவுக்கே இருக்கிறது. இதனால் ஏற்கெனவே நிறுவனத்தை நடத்திவருபவர்களின் சந்ததியினரே தொடர்ந்து தொழில் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவரும் சூழ்நிலை நிலவுகிறது. தற்போது மத்திய மாநில அரசுகளும், இதர நிறுவனங்களும் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கவும் நிதி உதவி செய்யவும் தயாராக இருந்தாலும் அதுகுறித்து இளைஞர்களுக்கு விழிப்புஉணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் மாணவர்கள் எந்தத் துறைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்தத் துறை குறித்து ஆராய்ச்சி செய்து நிபுணத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் சென்று கல்வியைப் பெறுகின்றனர். ஆனால், இந்தியா வில் கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்பும் 45 நிமிடம் என்று வரை யறுத்தே கல்வி போதிக்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தகுதியிலுள்ள பணிக்கு முனைவர் பட்டம் பெற்ற வர்களும் விண்ணப்பிக்கின்றனர். இதற்குக் காரணம், வேலைக்குத் தகுதியானவர்களை உருவாக்குவ தில்லை என்பதுதான். நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்குத் தகுந்த ஆள்கள் கிடைப்பதில்லை என்பது ஒருபுறம் எனில், சரியான தகுதி இருந்தாலும், நல்ல நிறுவனத்தை அடையாளம் காண முடியாதது இன்னொருபுறம்.

இன்றைக்குத் தகவல் சாதனத்தின் பயன்பாடு சிறந்த முறையில் இருந்தாலும், அதை எதிர்கால வளர்ச்சிக்கு எந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்பது குறைவாகவே இருக்கிறது. இன்றைக்கு இணையதளத்தில் ‘Coursera’ என்ற தளத்தில் இலவசமாக ஏகப்பட்ட கோர்ஸ்கள் படிப்பதற் கான வாய்ப்புகள் உள்ளன. அதை யாரும் பயன் படுத்துவதில்லை” என்றார்.

இதுபற்றிக் கோவைத் தொழிலதிபர் `இயகோகா’ என்.சுப்பிரமணியம், ``எல்லோரும் அரசு வேலைக்கு முண்டியத்துச் செல்லக் காரணம், அதிலுள்ள பாதுகாப்பு. தனியார் துறையில் வேலை பார்க்கும்போது, நிறுவனம் நல்ல முறையில் செயல்படவில்லை என்றால்  வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால், அரசு வேலையில் இதுபோல் வீட்டுக்கு அனுப்புவதில்லை. தவறு செய்தாலும் பெரிய அளவுக்குத் தண்டனைகளும் வழங்குவதில்லை. பொறுப்பும் குறைவானதாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு லட்சம் பணிக்கு 3 கோடி பேர்! என்ன காரணம்?

இன்றைக்குப் பெரும்பாலான அரசுத் துறைகளில் சேவை சரியில்லை எனத் தனியார் நிறுவனங்களை நோக்கி ஓடுவது இதனால்தான். எளிதாக இருக்கும் வேலையைத் தேர்ந்தெடுக்கும் மனப்பான்மையும் அரசு வேலைக்கு முண்டியடிக்க முக்கியக் காரணம்.

131 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில் தனியார் நிறுவனத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பை வழங்கிட முடியாது. நிறுவனங்கள் லாப நஷ்டக் கணக்கு பார்த்தே குறிப்பிட்ட அளவில் மட்டுமே பணி யாளர்களைத் தேர்வு செய்கின்றன. அதனால் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் அரசு நிறுவனங் களில் வேலைவாய்ப்பு வழங்கும் போது பலரும் விண்ணப்பிக்கின்றனர். இதில் தவறு ஒன்றுமில்லை. 

அரசுத் துறையில் ஒரு லட்சம் பேருக்கு வாய்ப்பு வழங்குவது பெரிய விஷயம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்தி வேலைவாய்ப்பைப் பெற வேண்டும். அதிகக் கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிப்பது நாட்டுக்கு நல்லது. இதன்மூலம் பணியில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.

அரசு வேலைக்கு இருக்கும் மவுசு கொஞ்சம்கூட குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

-ஞா.சக்திவேல் முருகன்

படம்: ஆ.முத்துக்குமார்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism