Published:Updated:

`10 நாளில் விளக்கம் வேண்டும்!' - அமேஸான், ஃப்ளிப்கார்ட்டு மத்திய அரசு கெடு

`10 நாளில் விளக்கம் வேண்டும்!' - அமேஸான், ஃப்ளிப்கார்ட்டு மத்திய அரசு கெடு
`10 நாளில் விளக்கம் வேண்டும்!' - அமேஸான், ஃப்ளிப்கார்ட்டு மத்திய அரசு கெடு

கடந்த அக்டோபர் 5, 6 தேதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருந்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தினார்கள். போலி மற்றும் கலப்பட ஒப்பனைப் பொருள்களை விற்பனை செய்வதாகக்கூறி ஃப்ளிப்கார்ட், அமேஸான் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய மருந்துக் கட்டுப்பாடு மையம் (DCGI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸுக்கு பத்து நாள்களுக்குள் உரிய பதில் அளிக்கத்தவறினால் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போலித் தயாரிப்புகளில், இறக்குமதி செய்யப்பட்ட பிரான்டட் நிறுவனத் தயாரிப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய மருந்துக் கட்டுப்பாடு மையம் நடத்திய சோதனையில், உரிய அங்கீகாரம் பெறாமல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புகளும், பதிவுச் சான்றிதழ் இல்லாத இறக்குமதிப் பொருள்களும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், தரச்சான்றளிக்கும் பிஸ் (BIS) நிறுவனத்தால் ஏற்கப்படாத மூலப்பொருள்களின் சேர்க்கையால் தயாரிக்கப்பட்ட பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உரிய உரிமம் இல்லாமலும், தவறான மூலப்பொருள்களைக்கொண்டும் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற, போலியான பொருள்களை விற்பனை செய்வதும், விநியோகம் செய்வதும் டிரக்ஸ் & காஸ்மெட்டிக்ஸ் ஆக்ட், 1940-ன்படி தண்டனைக்குரிய சட்டம் என்பதை இந்த ஆன்லைன் நிறுவனங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.