Published:Updated:

தொடர்ந்து விலை சரிந்தது! - கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் சவுதி அரேபியா

தெ.சு.கவுதமன்
தொடர்ந்து விலை சரிந்தது! - கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் சவுதி அரேபியா
தொடர்ந்து விலை சரிந்தது! - கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் சவுதி அரேபியா

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் விலைச்சரிவைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதுகிறது.

கடந்த வெள்ளியன்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 70 டாலர்கள் என்ற அளவுக்கும் கீழாகக் குறைந்தது. இந்த ஆண்டில், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிவடைந்துள்ளது. இந்த விலைச்சரிவு, பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் நம்பர் ஒன் இடத்திலிருக்கும் சவுதி அரேபியாவைக் கவலைகொள்ளச் செய்துள்ளது. 

எனவே, விலைச்சரிவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, பெட்ரோல் உற்பத்தியாளர் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பில் இல்லாத தயாரிப்பாளர்களோடு, சவுதி அரேபியா ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதன் பின்னர், அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் கலீத் அல் ஃபாலி, ``வரும் டிசம்பர் முதல், கச்சா எண்ணெய் உற்பத்தி தினமும் 5,00,000 பேரல்கள் குறைக்கப்படும்" என்று அறிவித்தார். தற்போது தினசரி 10.7 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் உற்பத்தியை மற்ற நாடுகளும் குறைப்பது குறித்து கூட்டமைப்பின் மற்ற உற்பத்தியாளர்களுடன் எந்தவித உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரியவருகிறது.