''வீட்ல தண்ணி குழாய் உடைஞ்சு நாலு நாள் ஆகுது. நானும் சரி பண்றதுக்கு பிளம்பர கூப்பிட்டா இப்ப வர்றேன், அப்புறம் வர்றேங்கிறார்'' என்றார் புறநகரில் குடியிருக்கும் நண்பர். ''பில்டர்கிட்ட கொடுக்காம நாமளே வீடு கட்டினா காசு கொஞ்சம் மிச்சப்படுத்தலாம் என்று வேலையை ஆரம்பிச்சுட்டு, இப்ப கொத்தனார் கிடைக்காம தவிச்சு கிடக்கிறேன்'' என்று அங்கலாய்த்தார் மற்றொரு நண்பர்.

''சம்பளம் அதிகம் தரத் தயார் என்றாலும், இதுபோன்ற வேலைகளை திறமையாகச் செய்யும் ஆட்கள் நம்மூரில் குறைந்து கொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தனித்திறமை வாய்ந்த ஆட்கள் கிடைக்காமல் பல வேலைகள் தேங்க ஆரம்பித்துவிட்டன. நமது இந்த பிரச்னையைத் தீர்க்க ஆஸ்திரேலியா உதவத் தயாராக இருக்கிறது'' என்கிறார் கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸ் நிறுவனத்தை நடத்திவரும் சிவகுமார். அண்மையில் ஆஸ்திரேலியா முழுக்க பிஸினஸ் டூர் சென்றுவந்த அவருடன் பேசினோம்.

''நம்மிடம் தகுதி வாய்ந்த இன்ஜினீயர்கள் இருக்கும் அளவுக்கு தகுதியான சூப்பர்வைஸர்கள் கிடையாது. நம் குழந்தைகள் அனைவரும் ஐ.டி. படித்துவிட்டு, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், ஹேர் ஸ்டைலிங் செய்வதன் மூலம் உள்ளூரிலேயே கை நிறைய சம்பாதித்து, நிம்மதியாக இருப்பதை நாம் கண்டுகொள்வதே இல்லை.

. உலகளவில் மிக அதிகமான மனிதவளமும் பல ஆயிரம் வகையான தொழில்களும் கொண்டது நம் நாடு. இதில் சுமார் 170 தொழில்களே வரையறுக்கப் பட்ட தொழில்கள் என்கிற கேட்டகிரியில் வருகின்றன. இந்த தொழில்களை முறையாகச் சொல்லித்தர 5,100 ஐ.டி.ஐ.கள், 600 தொழிற்கல்வி பள்ளிகள் மட்டுமே உள்ளன. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைவு..
இந்த குறையை தீர்க்க, உயர் தொழில்நுட்ப கல்வியில் நாம் காட்டும் ஆர்வத்தை ஒருங்கிணைக்கப்படாத தொழில்களிலும் காட்ட வேண்டும். நம் கல்விக்கூடங்களில் இருக்கும் பழைய பாடத் திட்டங்களைச் சீரமைத்து உலகத்தின் தேவைக்கேற்ப, தனித்திறமை கொண்ட புரொஃபஷனல்களை உருவாக்க வேண்டும்.

இந்த லட்சியத்தை அடைய ஆஸ்திரேலியாவின் (Techinical And Further Education) கல்விமுறை சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். இந்த 'டாஃபே’ முறையில் ஒவ்வொரு துறையிலும் உள்ள வேலைகளை பட்டியலிட்டு எல்லாவற்றுக்கும் தனித்தனியாக பயிற்சி அளித்து வருகிறது.

'டாஃபே’யில் அளிக்கப்படும் பயிற்சியானது உலகம் முழுக்க உள்ள வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த பாடத் திட்டங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்போட்டு வருகிறது. தகுதி உள்ள நிறுவனங்கள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை அணுகினால் போதும், இந்த பாடத் திட்டங்களுக்குத் தேவையான பயிற்சி உபகரணங்களை தருவதோடு, அந்நாட்டிலிருந்து நிபுணர்களை அனுப்பி அந்த பாடத் திட்டத்தைக் கற்றுத் தரவும் அந்த அரசாங்கம் தயாராக இருக்கிறது.

எதிர்கால இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்க ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சி நமக்கு நிச்சயம் கைகொடுக்கும்'' என்று முடித்தார் சிவகுமார்.

நல்ல வாய்ப்பை நாம் ஏன் நழுவவிட வேண்டும்?

- நீரை.மகேந்திரன்.