''புது வருஷம் வருதே! இந்த சாமி பாட்டுக்கு சிங்கப்பூரில போய் உக்காந்துகுச்சே! ஷேருச்சாமி ஊரில இருந்தா, எந்த பங்கில முதலீடு செய்யலாமுன்னு விலாவாரியா கேட்டு வாசகர் களுக்குச் சொல்லலாமே!'' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சாமி இன்டெர்நெட் சாட்டிங்கில் வந்தார்.

''ஆர் யூ?!'' என்று கேட்டுவிட்டு, ''கண்ணு, செல்லு உங்க ரெண்டு பேருக்கும் பிளைட் டிக்கெட் போட்டுட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில என் டிராவல் ஏஜென்ட் மெயில் அனுப்புவான். வருஷக் கடைசியில மூன்று நாள் சிங்கப்பூருக்கு வந்துட்டு போங்க'' என்று சொல்லிவிட்டு, நான் பதிலை டைப் செய்வதற்குள் அவர் ஆப்லைனில் போய்விட்டார்.

. அடுத்த சில மணி நேரத்தில், சிங்கப்பூர் சென்றுவர டிக்கெட், வெஸ்டர்ன் யூனியனில் இருந்து 2,000 சிங்கப்பூர் டாலர் வந்து சேர்ந்தது. லோக்கல் டிராவல் ஏஜென்டிடம் இருந்து விசா போடுவதற்காக பாஸ்போர்ட் கேட்டு போன்வர, நடப்பது நிஜமா, இல்லை கனவா என்று நினைத்தபடி விமானத்தில் ஏறினோம். அடுத்த மூன்று மணி நேர பயணத்தில் சிங்கப்பூர் ஏர்போர்ட்..
சிங்கப்பூரில் இறங்கி ஏர்போர்ட்டை விட்டு வெளியே போகும்போதே சாமியின் வெடிச்சிரிப்பு கேட்டது. ''அட, கரெக்ட்டா பிளைட்டை புடிச்சிட்டு வந்துட்டீங்களே! நீங்க தேறிடுவீங்க'' என்றபடி காரில் ஏறச் சொன்னார். அங்கேயும் சாமிதான் காரை ஓட்டினார். இந்த சாமிக்கு மட்டும் எப்படிதான் எல்லா ஊர்லயும் வழி தெரியுதோ என்றபடி, குழந்தை மாதிரி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போனோம்.

அவர் தங்கியிருந்த ஃபிளாட்டுக்கு போனவுடன், ''மடமடன்னு ரெடியாகுங்க. வெளிய போய் ஒரு சுத்து சுத்தீட்டு வரலாம்'' என்று உத்தரவிட்டார். வெளியே கிளம்பி ஜூராங் பார்க் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டினார். மதியம் கோமள விலாஸில் கட்டித் தயிருடன் சாப்பாடு. முஸ்தபா கடைக்கு ஒரு ரவுண்ட் பர்ச்சேஸிங் போய்விட்டு, மாலையில் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கும் போய் வந்தோம். இரவில் ஃபிளாட்டுக்கு வந்து நன்றாக சாப்பிட்டுவிட்டு, ரிலாக்ஸ்ட்-ஆக இருந்த சாமி திடீரென இப்படி கேட்டார்.

''2012-ல சந்தை எப்படியிருக்கும் செல்லு?'' - சாமி நம் வாயை புடுங்குவது நன்றாகப் புரிந்தது.

''சாமி, நக்கல் வேணாம். சந்தை எப்படி இருக்கும்னு உங்களுக்குத்தானே தெரியும். எங்ககிட்ட கேட்டா?'' என்று பதிலுக்கு உறுமினான் செல்.

''கோச்சுக்காதே செல்லு! அது பத்தி விலாவாரியா பேசத்தானே உங்களை இங்க வரவழைச்சேன். 2012-ல முதல் ஆறு மாசம் சந்தைக் கொஞ்சம் சுமாராத்தான் போக வாய்ப்பிருக்கு. சுத்திமுத்தி இருக்கற சூழ்நிலையைப் பாத்தா அதுமாதிரிதான் தோணுது. இன்ப்ளேஷன் பறந்துடுச்சு. வட்டி விர்ருன்னு ஏறிடுச்சு. ஐஐபி டமாலுன்னு இறங்கிடுச்சு. வளர்ச்சி தேயுதோன்னு டவுட் வர ஆரம்பிச்சுடுச்சு. கம்பெனிகளோட லாபம் குறைஞ்சுடுமோன்னு எல்லோரும் பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. உலகமும் சரியில்லை. நம்ம ஊரும் சரியில்லை. இதெல்லாம் ஒரு நாளில மாறுமா? மாறாது! அதனாலதான் சொல்றேன், சந்தை சரியாக குறைஞ்சபட்சம் ஆறு மாசம், அதிகபட்சம் 12 மாசம் எடுத்துக்கலாம். நல்ல பட்ஜெட், வட்டிவிகிதம் குறைப்புன்னு எல்லா விஷயத்திலேயும் கவர்ன்மென்ட் சூட்டிகையா செயல்படலேன்னா ஒருபய நம்மூர் ஷேரை வாங்க மாட்டான்'' என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார் சாமி.

''அய்யோ!'' என்றேன் நான்.

''ஒரேயடியாய் பயப்படாதே! நல்லதே நடக்குமுன்னு எதிர்பாரு!'' என்று பாசிட்டிவ்-ஆக மாறினார் சாமி.

''நாம எதிர்பார்த்தா போதுமா சாமி, ஒலகமும் அப்படி நினைக்க வேணாமா?'' என்று அலுத்துக் கொண்டேன் நான்.

''மவனே, நல்ல விஷயத்தை முதல்ல நீ நம்பு. அப்பதான் அது நடக்கும். 2003-ல ஆரம்பிச்சி 2012 நடுவுல ஒரு பிஸினஸ் சைக்கிள் முடியுதுன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. அதுவும் போக ஒவ்வொரு புல் மார்க்கெட் முடிஞ்சு இறங்குன பிறகு கிட்டத்தட்ட சந்தை கன்சாலிடேட் ஆகுறதுக்கு நாலு வருஷம் எடுத்துக்குதுன்னு இன்னொரு கணக்கு சொல்லுது'' என்று பேசிக் கொண்டே போனவரை, ''சாமி, சந்தையில எந்த இரண்டு சூழ்நிலையும் ஒரேமாதிரி இருக்காதுன்னு நீங்கதானே சொன்னீங்க?'' என்று மடக்கினேன்!

கடுப்பானார் சாமி. ''கிறுக்கு மாதிரி உளறாதே! அது சந்தைக்குப் பொருந்தும். நாம இப்ப பேசிக்கிட்டு இருக்கிறது பொருளாதாரத்தைப் பத்தி. வட்டி விகிதம் படிப்படியா குறைஞ்சு, பட்ஜெட் டெபிஸிட் கட்டுக்குள்ள வைச்சு, நம்ம அரசாங்கம் 2012-ல செயல்பட ஆரம்பிச்சாதான் பொருளாதாரம் திரும்பவும் எந்திரிக்க ஆரம்பிக்கும்!'' என்றவரிடம், ''அப்படி செய்யலேன்னா?'' என்று கேட்டான் செல்.

''நீ என்கிட்ட ஒப்பீனியன் கேட்குறயா? இல்ல, எடக்குமடக்கா வாதம் பண்ணறியா?'' என்று செல்லையும் ஒரு விரட்டு விரட்டினார் சாமி. ''நீயும் நம்பிக்கை இல்லாம பேசுறியே! புது வருஷத்துல எல்லாம் நல்லபடியா நடக்குமுன்னு நெனைங்கப்பா! அப்படி நடக்காது, இப்படி நடக்காதுன்னு நெகட்டிவ்வாவே பேசாதீங்க!'' என்று கர்ஜித்தார்.

''சரி சாமி, மார்க்கெட் திரும்பவும் மேலே வரணும்னா என்ன செய்யணும்?'' என்று கேட்டேன் நான். ''நீயோ, நானோ செய்றதுக்கு ஒண்ணுமில்ல. அது ரிசர்வ் பேங்க் கையில இருக்கு. இந்த வருஷம் பலமுறை வட்டி விகிதத்தை ஏத்தினாங்க. ஆனா, ஏத்தின வட்டியை இறக்கல்ல. அப்படி இறக்கினா மார்க்கெட் சல்லுன்னு மேலே போகும். இந்தியாவை விட்டு வெளியில போன எஃப்.ஐ.ஐ. பணம் திரும்பி வரணுமின்னா, இதை ரிசர்வ் பேங்கும் அரசாங்கமும் நிச்சயம் செஞ்சேயாகணும்'' என்று உறுதியாகச் சொன்னார் சாமி.

''அப்படி எஃப்.ஐ.ஐ. பணம் திரும்பி வந்தா ரூபாயோட மதிப்பும் கூடிருமில்ல?'' தனக்கு கரன்சி நாலேஜின் அடிப்படை யில் ஒரு கேள்வி கேட்டான் செல்.

''வாழ்க்கையில முதல்முறையா புத்திசாலித்தனமா ஒரு கேள்வி கேட்டிருக்கே!'' என்று பாராட்டியவர் பதில் சொல்ல ஆரம்பித்தார். ''இன்டெர்நேஷனல் பிரச்னையை பேசுவோம். அமெரிக்க பொருளாதாரம் நசிவடைந்ததிலிருந்து கொஞ்சம் ரெக்கவராகி வருகிற மாதிரி காண்பிக்க ஆரம்பிச்சிருக்கு. ஆனா, ஐரோப்பிய பிரச்னையில பூதம் கிளம்பிடுமோன்னு பயம் உள்ளுக்குள்ள இருக்கு. பிரச்னை பெருசா வெடிச்சா இந்திய சந்தையில ஒரு பெரிய ஜெர்க் வரும். அப்புறமா கொஞ்ச நாளில சரியாயிடும்'' என்றார்.

''சாமி, வெளிப் பிரச்னையை விடுங்க! நம் நாட்டுல நின்னு போன ரீபார்ம்ஸ் பிராசஸை மீண்டும் ஆரம்பிக்கணும். பட்ஜெட்டில பிஸ்கல் டெபிஸிட் குறையணும். ஏற்கெனவே சொன்ன மாதிரி வட்டி குறையணும். இதெல்லாம் நடந்தா, முதலீட்டாளருங்க ஓடி வந்துடுவாங்க, இல்லியா சாமி? என்றேன்.

''அட! நீயும் புத்திசாலித்தனமா பேச ஆரம்பிச் சுட்டியே. உனக்கே நம்ம அரசாங்கம் செய்யறது சரியில்லேன்னு தெரியறப்போ அரசாங்கம் நடத்துறவங்களுக்குத் தெரியாதா என்ன? எல்லா கவர்ன்மென்டிலேயும் இதுமாதிரி ஒரு பிரச்னையான, செயலில்லாத காலம் இருக்கத் தான் செய்யும். அதை உணர்ந்து கவர்ன்மென்ட் மறுபடியும் வேகமா செயல்பட ஆரம்பிச்சிடுமுன்னு எதிர்பார்க்கலாம். அப்படி செயல்படப்போகுதுன்னு எஃப்.ஐ.ஐ.கள் கொஞ்சமா ஸ்மெல் பண்ண ஆரம்பிச்சாலே போதும், பணம் இந்தியாவை நோக்கி வர ஆரம்பிச்சுடும்'' என்று கண்ணடித்தார் சாமி.

''சரி சாமி, உங்க எதிர்பார்ப்பு பலிச்சிடுச்சுன்னா, எந்தெந்த செக்டார்களில் முதலீடு பண்ணலாம்?'' என்று கேட்டேன் நான். இதைப் படிக்கிற பல லட்சம் வாசகர்களின் கேள்வியும் இதுதானே! பிளாஸ்க்கில் இருந்த காப்பியை நமக்கு ஊற்றித் தந்துவிட்டு, அவரும் சுடச்சுட குடித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

''பேங்கிங், கேப்பிட்டல் குட்ஸ், சிமென்ட், ஆட்டோ போன்ற செக்டாரில் கான்சென்ட்ரேட் பண்ணி முதலீடு செய்யலாம். பொருளாதாரம் மேல் நோக்கித் திரும்பினா பேங்குகளுக்கு பிஸினஸ் பிச்சுகிட்டு போகும். கம்பெனிகள் தற்போது தள்ளிப்போட்டு வச்சிருக்கிற எக்ஸ்பான்சன் பிளான்களை மீண்டும் தூசு தட்டி பண்ண ஆரம்பிக்கும். அப்ப கேப்பிட்டல் குட்ஸ் கம்பெனிகள் பெனிஃபிட் அடையும். வியாபாரம் ஜாஸ்தியானா மக்கள் கையில் பணம் புரளும். பணம் புரண்டா ஜனங்க நிறைய சாமான் வாங்குவாங்க. காரும், வீடும் வாங்குவாங்க. விவசாயிங்க டிராக்டர் வாங்குவாங்க. லாரி, பஸ்ஸுன்னு எல்லாமே விக்கும். அப்ப ஆட்டோ கம்பெனிங்க பலனடையும். எப்படி பயத்துல இந்த மூன்று செக்டாரும் தடாலுன்னு கீழே விழுந்துகிட்டிருக்கோ, அதேமாதிரி மடமடன்னு ஏறவும் செஞ்சுடும். ஏற்கெனவே நீ இதை பலமுறை பார்த்திருப்பியே!'' என்று செல்லிடம் கேட்க, ''கரெக்ட் சாமி, 2008-ல்கூட இப்படி நடந்ததைப் பார்த்தேனே!'' என்று ஆமாம் சாமி போட்டான் செல்.

''இது தவிர, வேற ஏதாவது செக்டார் பலனடையுமா சாமி?'' என்று கேட்டான் செல். ''இன்ஃப்ராஸ்ட்ரக்சர், இன்ஃப்ரா ஃபைனான்ஸ், ஹவுஸிங் போன்றவையும் கொஞ்சம் கொஞ்சமா பலனடைய ஆரம்பிக்கும்'' என்றார்.

''சாமி, கோச்சுக்கப்படாது. கொஞ்சம் ஸ்பெசிபிக்கா கம்பெனிகள் பெயரையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்குமே!'' என்றேன் நான்.

''சொல்லிட்டாப் போச்சு! இந்தா குறிச்சுக்கோ. ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பி.ஹெச்.இ.எல்., பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. அப்படீன்னு பழைய லிஸ்ட்டேதான் மறுபடி மறுபடி சொல்ல வேண்டியிருக்கு என்றார்.

''சாமி, சாஃப்ட்வேர்...?'' என்று இழுத்தான் செல். ''டேய்! எனக்கு எப்பவுமே சாஃப்ட்வேர் கம்பெனியைப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியுமில்லே'' என்றார். பிறகு கொஞ்சம் சாந்தமாகி, ''சாஃப்ட்வேர் மற்றும் எனர்ஜி கம்பெனிகள் உலக பொருளாதாரத்திற்கு ரொம்பவுமே சென்சிட்டிவானவை. என் பார்வைக்கு இந்தியா திருந்திடும் என்ற நம்பிக்கை இருக்கற அளவுக்கு உலகம் திருந்திடும் என்ற நம்பிக்கை வரவே மாட்டேங்குது'' என்றார்.

''சரி சாமி! எல்லாம் பெரிய கம்பெனியாச் சொல்றீங்க. கொஞ்சம் சின்ன கம்பெனியாச் சொல்லுங்களேன்'' என்றான் செல்.

''பணத்தைப் போட்டுட்டு பதறாம இருக்கணுமுன்னா இந்த கம்பெனில போடு. பதறினாலும் பரவாயில்லன்னா, இன்னும் சில கம்பெனிகளை சொல்றேன்'' என்றார் சாமி. ''அட, ரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி'' என்று வடிவேல் டயலாக்கை எடுத்துவிட்டான் செல்.

''உன்னைத் திருத்த முடியாது'' என்று திட்டிவிட்டு, பங்குகளைச் சொல்ல ஆரம்பித்தார். ''டிஷ் டிவி, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், டி.சி.எஸ்., ஸ்டெர்லைட், எல்.ஐ.சி. ஹவுஸிங், லூபின், ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா, ஆர்.இ.சி., ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், ரிலையன்ஸ் கேப்பிட்டல். ரிஸ்க் எடுக்கற முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீடு செய்யலாம்'' என்றார்.

''சாமி, ஃபைனலா ஒரு கேள்வி..?'' என்று இழுத்தான் செல். ''டிசம்பர் 2012-ல சென்செக்ஸ் எவ்வளவு இருக்குமுன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?'' என்று கேட்டான். வழக்கமாக இப்படி கேட்டால் சாமி அடிக்கத்தான் வருவார். ஆனால், இந்த முறை கோபிக்கவில்லை. ''சென்செக்ஸ் 18500-19000 ரேஞ்சில இருக்கலாம் என்பது என்னோட எதிர்பார்ப்பு. எல்லாமே நல்லாப் போச்சுதுன்னா சுலபமா இதைவிட ஒரு 500 பாயின்டட் மேலே போயிட வாய்ப்பிருக்கு'' என்றார்.

''சாமி, சந்தையைப் பொறுத்த வரை நீங்க எங்களுக்குச் சொல்லுகிற ஆலோசனை என்ன?'' என்று கேட்டார். ''உலகத்துல ஒவ்வொரு மனுஷனும் எடுக்கவே கூடாத ரிஸ்க்குகளும் இருக்குது. எடுக்காம விடக்கூடாத ரிஸ்க்கு களும் இருக்குது. இதை நல்லாப் புரிஞ்சுகிட்டு முதலீடு பண்ணினா 2012 என்ன எல்லா வருஷமுமே லாபத்துக்கு குறைவிருக்காது'' என்று சொல்லிவிட்டு படுக்கப் போனார்.

அதற்கப்புறம் சிங்கப்பூரில் இருந்த மீதி நாட்களில் சாமி சந்தையைப் பற்றி பேசவே யில்லை. சிங்கப்பூரின் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டியவர், ஆளுக்கொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனை புதுவருஷ கிஃப்டாக வாங்கித் தந்தார். ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பியும் ''ஹேப்பி நியூ இயர்'' சொல்லிவிட்டு டாடா காட்டிவிட்டு போனார்.

பிளைட்டில் ஏறி சென்னை வந்தபோது, என்னடா ஊர் இது என்றுதான் நினைக்கத் தோன்றினாலும், இரண்டு வருஷத் திற்கு முன் சாமியை காலை ஐந்து மணிக்கு டீக்கடையில் முதல் முதலாகச் சந்தித்த ஞாபகம் நினைவில் மிதந்தது..

- ஓவியங்கள்: அரஸ்