Published:Updated:

இந்தியாவிலிருந்து எந்த விமானமும் வரவில்லை! - ஆண்டிகுவா அரசு #MehulChoksi

மெகுல் சோக்‌ஷியைக் கைது செய்து அழைத்துவருவதற்காக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆண்டிகுவா நாட்டுக்கு, 'எங்கேயும் நில்லாமல் நீண்டதூரம் பயணித்துச் செல்லும்' சிறப்பு விமானத்தை அனுப்பியிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாயின. அந்தச் செய்தியைத்தான் ஆண்டிகுவா அரசு மறுத்துள்ளது.

இந்தியாவிலிருந்து எந்த விமானமும் வரவில்லை! -  ஆண்டிகுவா அரசு #MehulChoksi
இந்தியாவிலிருந்து எந்த விமானமும் வரவில்லை! - ஆண்டிகுவா அரசு #MehulChoksi

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக ஆண்டிகுவா நாட்டுக்கு சிறப்பு விமானம் ஒன்றை இந்திய அரசு அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளியானது. அதுகுறித்து ஆண்டிகுவா நாட்டு பிரதமர் கேஸ்டன் பிரவுனியின் அலுவலகத் தலைமை அதிகாரி கூறுகையில், ``அப்படியொரு விமானம் அனுப்பப்பட்டிருப்பதாக எங்கள் அரசாங்கத்துக்கு எந்த தகவலும் வரவில்லை. தற்போது மெகுல் சோக்‌ஷி இந்திய அரசின் குடியுரிமையை ஒப்படைத்துவிட்டார். ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் நாட்டு குடியுரிமையுடன்தான் இங்கு வசித்து வருகிறார். அவரது குடியுரிமையைப் பறிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அப்படி பறிக்கப்பட்டால் அவர் நாடற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார். அப்படியானதொரு சூழலை உருவாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

இந்தியாவிலிருந்து எந்த விமானமும் வரவில்லை! -  ஆண்டிகுவா அரசு #MehulChoksi

மெகுல் சோக்‌ஷியைக் கைது செய்து அழைத்து வருவதற்காக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆண்டிகுவா நாட்டுக்கு, `எங்கேயும் நில்லாமல் நீண்டதூரம் பயணித்து செல்லும்' சிறப்பு விமானத்தை அனுப்பியிருப்பதாக இரண்டு நாள்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாயின. அந்தச் செய்தியைத்தான் ஆண்டிகுவா அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், தன்னை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமானால் அதுகுறித்து ஆண்டிகுவா நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெறட்டும் என்று மெகுல் சோக்‌ஷி சவால்விட்டுள்ளார். நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெறுவதென்பது அவ்வளவு எளிதான நடைமுறையில்லை எனத் தெரிகிறது. 

ஒருவேளை, அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளதால் நீதிமன்றம் வழியிலான நடவடிக்கைக்கு அதிக காலம் எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. மேலும், அப்படியே இந்தியாவுக்கு நாடு கடந்தும் தீர்ப்பு வந்தாலும்கூட நீண்டதூரம் இந்தியாவிற்கு பயணித்தால் தனது உடல்நிலைக்கு ஏற்றதாக இருக்காது என்று உடல்நிலையைக் காரணம் காட்டி மறுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆக, ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் நெஞ்சுவலி என்று காரணம்கூறி தப்ப முயல்வதுபோல, மெகுல் சோக்‌ஷியும் சர்வதேச சட்டதிட்ட உதவியுடன் இந்தியாவுக்கு சவாலாக இருக்கப்போவது உறுதி.