ஒரு செல்போன் சேவை நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்றால் நம்பரை மாற்றாமல் வேறு செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி வசதி சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க அமலுக்கு வந்தது. இது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் பலன்களை இழக்காமல் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

. இ.தனைத் தொடர்ந்து விரைவில் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், ஆனால் வங்கியை மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி வசதியை கொண்டு வரலாமா என மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. இது அமலுக்கு வந்தால் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கை யாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
தற்போது வெளியூருக்கு மாறிச் செல்லும்போது அல்லது ஒரே ஊரில் வேறு பகுதிக்கு வீடு பார்த்து செல்லும்போது, வேலை மாறும்போது வங்கியில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டி இருக்கிறது. இதற்கு அறிமுகப்படுத்தும் நபர் ஒருவரைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், பாண்ட் முதலீடு (ஐந்தாண்டு வரிச் சேமிப்பு திட்டம்), வீட்டுக் கடன்/கார் கடன் இ.எம்.ஐ. போன்றவற்றுக்கு ஏற்கெனவே தந்திருக்கும் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றி புதிய வங்கிக் கணக்கை தரவேண்டும்.

இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வங்கிக் கணக்கை மாற்றுவது பெரிய வேலை. வங்கிக் கணக்கு போர்ட்டபிலிட்டி வந்துவிட்டால் இந்த பிரச்னைகள் எதுவும் இருக்காது. தற்போது ஒவ்வொரு வங்கிக்கும் எம்.ஐ.சி.ஆர். எண் என்று ஒன்று தனியாக இருக்கிறது. கிளையைக் குறிக்க 'கோட்’ எண் இருக்கிறது. தவிர, வாடிக்கையாளருக்கு என தனியாக கணக்கு எண் இருக்கிறது. இதை எல்லாம் சேர்த்துதான் வங்கிக் கணக்கு எண் உருவாக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கு போர்ட்டபிலிட்டி வசதி வர வேண்டுமெனில், ஒருவரின் கணக்கில் பணம் போய்ச் சேரும் விதமாக ஒரு தனிப்பட்ட எண் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான தொழில் நுட்பமும் உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசின் நிதிச் சேவைகள் பிரிவு செயலாளர் டி.கே.மிட்டல், ''நிதி அமைச்சகம் வங்கிக் கணக்கு போர்ட்டபிலிட்டி கொண்டுவர களமிறங்கி இருக்கிறது. தற்போதைய நிலையில் நிறைய தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைக் களைந்தால் மட்டுமே இது சாத்தியம்..!'' என்று சொல்லி இருக்கிறார்.

அரசின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் கோடிக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

- சி.சரவணன்