Published:Updated:

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?

கேள்வி-பதில்

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?

நான் டீமேட் கணக்கு வைத்திருக்கும் நிறுவனத்தில் நிஃப்டி இ.டி.எஃப்.-ல் இன்ட்ரா டே டிரேட் செய்யும்போது குறைவான புரோக்கரேஜ் வாங்குகிறார்கள். இதனால் பாதிப்பு வர வாய்ப்புண்டா?

சி.காந்தி, ராஜபாளையம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
லெட்சுமணராமன்,
பங்குச் சந்தை ஆலோசகர்.

''செபியின் அனுமதியுள்ள திட்டம் என்பதால் பாதுகாப்பு பற்றி அச்சப்படத் தேவை இல்லை. நிஃப்டி இ.டி.எஃப். வர்த்தகத்துக்குப் புதிதாக வந்திருப்பதால் இந்த திட்டம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர்களிடம் குறைவான தரகுக் கட்டணத்தை நீங்கள் டீமேட் வைத்திருக்கும் நிறுவனம் வசூலிப்பதாக இருக்கலாம்.''      

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?

இருபத்தைந்து வருட பழைமையான ஃபிளாட்டை வாங்கலாமா? அதன் சந்தை மதிப்பை எப்படிகணக்கிடுவது?

ஜெயஸ்ரீ, சென்னை.

மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.

''நன்றாக பராமரிக்கப்படும் பட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 50 ஆண்டுகள் வரை வலிமையாக இருக்கும். இருபத்தைந்து வருட ஃபிளாட்டை வாங்குவதற்கு முன்பு ஒரு பொறியாளர் மூலம் அந்த ஃபிளாட் அமைந்துள்ள கட்டடத்தின் பராமரிப்பு மற்றும் உறுதித்தன்மை போன்றவற்றை ஆய்வு செய்து கொள்ளவும்.

அந்த ஏரியாவில் புதிய ஃபிளாட்டுகளின் சந்தை விலையிலிருந்து 50 சதவிகிதம் குறைத்து விலையைக் கணக்கிட்டு, கட்டடத்தின் உறுதித்தன்மை, பராமரிப்பின் அடிப்படையில் விலையை தீர்மானிக்கலாம். பள்ளிக்கூடம், கல்லூரி, பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொறுத்தும் விலையை தீர்மானிக்கலாம்.''

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?

மெடிக்ளைம், டேர்ம் இன்ஷூரன்ஸ், பெர்சனல் ஆக்ஸிடென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுக்க அணுகினால் சம்பளச் சான்று மற்றும் வருமான வரித் தாக்கல் செய்த கணக்குகளை கேட்கிறார்கள். விவசாயிகள் இந்த பாலிசிகளை எடுக்க என்ன செய்வது?

செந்தில்குமார், பவானி.

சுந்தரராஜன், வெல்த் மேனேஜர், ஐ.என்.ஜி.வைஸ்யா.

''விவசாயிகள் இந்த பாலிசியை எடுக்க எந்த தடையுமில்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேட்கும் ஆவணங்கள் உங்களிடம் இல்லை எனில், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாட்சியரிடமிருந்து பெறப்படும் வருமானச் சான்று போதுமானது. மெடிக்ளைம் பாலிசிக்கு இந்த சான்றுகூட தேவையில்லை. உங்களால் பிரீமியம் தொடர்ந்து கட்ட முடியும் என்பதை உறுதி படுத்திக் கொள்ளவே இந்தச் சான்றுகள் கேட்கப்படுகின்றன. இவை இல்லை என்பதற்காக உங்களுக்கு பாலிசி தரமுடியாது என்று சொல்ல முடியாது.''

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?

வெளிநாட்டில் இருக்கும் நான், எனக்கு சொந்தமான இடத்தில் புரமோட்டரோடு சேர்ந்து வீடு கட்டுகிறேன். இதற்கான ஒப்பந்தங்களுக்காக எனது தம்பிக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்துள்ளேன். இந்த பவரை ரத்து செய்வதற்கான கால வரையறை ஏதும் உள்ளதா?

ஸ்ரீவித்யா, அமெரிக்கா.

ஜீவா, வழக்கறிஞர்.

''வீடு கட்டுவது தொடர்பான வேலைகளில் ஈடுபட, ஒப்பந்தங் கள் போட மட்டும் பவர் கொடுத்திருந்தால், அந்த வேலைகள் முடிந்ததும் தானாகவே அந்த பவர் காலாவதி யாகிவிடும். அப்படி இல்லாமல் உங்களது சொத்துகளை வாங்கி விற்க அல்லது நிர்வகிக்க என்று பொதுவாக கொடுத்திருந்து, பின்னர் அது தேவையில்லை என்றால் அந்த பவரை ரத்து செய்ய முடியும். இதற்கென குறிப்பிட்ட காலவரையறை எதுவுமில்லை.''

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?
விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?

மாதம் நான்காயிரம் ரூபாயை எஸ்.ஐ.பி. முறையில் நான்கு ஃபண்டு களில் முதலீடு செய்ய நினைக்கிறேன். எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

சந்திரசேகரன், திருச்சி.

சுவாமிநாதன், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபனான்ஷியல் சர்வீஸஸ்.

''குறைவான முதலீட்டுத் தொகை என்பதால் அதிக ஃபண்டுகளில் பிரித்து போடுவது சரியானதாக இருக்காது.

ஒன்று அல்லது இரண்டு ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து போடும்போது தான் அவற்றை தொடர்ந்து கவனிப்பதற்கு வசதியாக இருக்கும்.

நீங்கள் எந்த காரணத் திற்காக முதலீடு செய்யப் போகிறீர்கள், எத்தனை ஆண்டுகள் அந்த முதலீட்டை தொடர்ந்து வைத்திருக்க போகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஃபண்டுகள் மாறும்.

என்றாலும், நீண்ட கால நோக்கில் ஈக்விட்டி (குரோத்) ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.''

விவசாயிகள் மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?