Published:Updated:

'996 Vs 669!' - ஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை!

சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதத்தில், தனது நிறுவன ஊழியர்களுக்கு '996' என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்துக்கு 6 நாள்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். வாரத்துக்கு 72 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்விதமாக, 'உழைப்புக்கு நிறைய நேரம் ஒதுக்காமல் எப்படி பெரிய வெற்றியை அடைய முடியும்?' என்று கேள்வியெழுப்பினார். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைப்பது ஆசீர்வாதத்துக்குரியது என்றும் கூறினார். 

'996 Vs 669!' - ஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை!

பணி நேரம் குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது, அவரின் பணியாளர்கள் தாம்பத்ய வாழ்க்கையை நன்கு அனுபவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாவின்போது 102 ஊழியர்களின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அலிபாபா, '669' என்ற எண்ணை நகைச்சுவையாகக்கூறி, வாரத்துக்கு 6 நாள், 6 முறை, 'நீண்ட நேரம்' என்ற அர்த்தத்துடன், தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஆர்வத்தோடு இருந்தால்தான் அவர்களால் பணியிடத்திலும் நன்கு உழைக்க முடியும், வாழ்க்கையை சமநிலையில் கொண்டு செல்ல முடியும் என்று அறிவுறுத்தினார். திருமணம் என்பதே ஒரு தயாரிப்பு சார்ந்த நிகழ்ச்சி தான் என்றும், குழந்தைகள் மட்டுமே ஒரிஜினல் தயாரிப்பு, மற்றவை அனைத்தும் போலித்தயாரிப்புகள் என்றும் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'996 Vs 669!' - ஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை!

இவரது கருத்துக்கு 'மிகவும் மோசமான நகைச்சுவை' என்று சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருபக்கம் 996 என்று கூறிவிட்டு, இன்னொரு பக்கம் 669 என்று அறிவுறுத்துகிறார். யாராலும் செயல்படுத்த முடியாத அளவுக்கு அவர் ஓவராக யோசிக்கிறார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism