கடந்த வாரத்தில் அத்தனை முதலீட்டாளர்களையும் கவனிக்க வைத்த செய்தி ஸ்டெர்லைட் - சேசகோவா இணைப்புதான். இந்த இரு நிறுவனங்களையும் இணைத்து சேசா ஸ்டெர்லைட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

. இ.ந்த இணைப்பினால் ஐந்து ஸ்டெர்லைட் பங்குகளுக்கு மூன்று சேச கோவா பங்குகளை கொடுப்பதாகவும், இந்த இணைப்பு நடவடிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறது இந்நிறுவனம். ஏன் இந்த இணைப்பு, இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பது குறித்து பங்குச் சந்தை ஆலோசகர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்..
''ஸ்டெர்லைட் மற்றும் சேச கோவா இணைப்பாக இது தெரிந்தாலும் பங்குச் சந்தையில் பட்டியலிடாத சில இந்திய நிறுவனங்களையும் வேதாந்தா குழுமம் இணைத்துள்ளது. முக்கியமாக வேதாந்தா அலுமினியம் என்ற நிறுவனத்தை இதனுடன் இணைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு 20,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது.

மேலும், கெயின் இந்தியா நிறுவனத்தில் வேதாந்தா வைத்திருந்த 38.8 சதவிகித பங்குகளை புதிய நிறுவனமான சேசா ஸ்டெர்லைட்டுக்கு மாற்றியுள்ளது. (கூடவே கெயின் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்காக வாங்கிய கடனையும் சேர்த்துதான்!)

இந்த இணைப்பின் மூலம் சேசா ஸ்டெர்லைட் ஆயில் அண்ட் கேஸ், பவர், அலுமினியம், காப்பர், ஜிங்க் இரும்புத் தாது உள்ளிட்ட பல பிஸினஸ்களை செய்யும் பெரிய டைவர்சிஃபைட் நிறுவனமாக மாறினாலும் இப்போது இருக்கும் கடனை கட்டி முடிக்க சில காலம் ஆகும். தவிர, இந்த இணைப்பு சம்பந்தமாக ஒரு பொதுநல வழக்கு இருப்பதால் இந்த இணைப்பு நடக்க சில காலம் ஆகலாம்.

அதனால் தற்போதைய நிலையில் இந்த இரு பங்கு களையும் வாங்காமல் இருப்பதே நல்லது. நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த இணைப்பு முழுமையாக நடந்த பிறகு வாங்கலாம்.

ஆனால், கெயின் இந்தியா பங்கினை இப்போதே வாங்கலாம். காரணம், இந்த நிறுவனத்தையும் சேர்த்தே இணைப்பார்கள் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லை. கெயின் இந்தியா லாபம் ஈட்டி இருப்பதால் நல்ல டிவிடெண்ட் கிடைக்க வாய்ப்புண்டு'' என்றார் அவர்.

பொறுத்தார் பூமியாள்வார்!

-வா.கார்த்திகேயன்